siruppiddy

சனி, 4 ஜனவரி, 2014

விவாகரத்துக்கு காரணமான முள்ளுக்கரண்டி


தனது கணவர் முள்ளுக்கரண்டியை பாவித்து பட்டாணி உண்பதில்லை என்று கூறி பெண்ணொருவர் விவாகரத்துக்கு தாக்கல் செய்துள்ளார்.

குவைத்தை சேர்ந்த பெண்ணொருவரே இவ்வாறு விவாகரத்துக்கு தாக்கல் செய்துள்ளார்.
திருமணம் முடித்து ஒரு கிழமையிலே இவ்வாறு மேற்படி பெண் விவாகரத்துக்கு தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 'தனது கணவர் பட்டாணி உண்ணும்போது முள்ளுக்கரண்டியை பயன்படுத்துவதில்லை. அதேபோல், பாண் உண்ணும்போது முள்ளுக்கரண்டிக்கு பதிலாக வேறு உபகரணங்களை பயன்படுத்துகிறார்' என அவர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தது.


இதேபோல் மற்றுமொரு சம்பவமும் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பற்பசையை எடுக்கும்போது அதனை முடிவிலிருந்து எடுக்காமல் நடுவிலிருந்து எடுக்குமாறு கூறி தன்னை தனது கணவர் வலியுறுத்துவதாக கூறி பெண்ணொருவர் விவாகரத்துக்கு தாக்கல் செய்துள்ளார்.
 'எங்கள் இருவருக்குமிடையில் எப்போதும் வாக்குவாதம் ஏற்பட்டுகொண்டே இருக்கும்.

 பற்பசையை இறுதிப் பகுதியிலிருந்து எடுக்குமாறு அவருக்கு நான் கூறுவேன். ஆனால், அவர் அதனை கருத்தில் கொள்வதில்லை. அவர் மிகவும் பிடிவாதமானவர்' என அப் பெண் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

வெள்ளி, 20 டிசம்பர், 2013

இந்து ஒருவரைக் கொன்ற 8 மாணவர்களுக்கு மரணதண்டனை!

பொதுமக்கள் முன்பாக பங்களாதேசில் கடந்த ஆண்டு, இந்து மதத்தைச் சேர்ந்தவரைக் கொலை செய்த வழக்கில், எட்டு பேருக்கு மரண தண்டனையும், 13 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டு உள்ளது.பங்களாதேசில், கடந்த ஆண்டு, டிச., 9ம் தேதி நடந்த, நாடு தழுவிய வேலை நிறுத்தத்தின் போது, ஆளும், "அவாமி லீக்' கட்சியைச் சேர்ந்தவர்கள், தாகா நகரில், பகதூர் ஷா பூங்காவில், விஸ்வஜித் என்பவரை கொலை செய்தனர். இந்த சம்பவம், பங்களாதேசில் "டிவி'க்களில், நேரடியாக

ஒளிபரப்பானதையடுத்து, கொலையாளிகள் அனைவரும் கைது செய்யப்பட்டனர். நேற்று முன்தினம், இந்த வழக்கை, தாகா நகர நீதிபதி, நிஜாமுல் ஹக், 10 நிமிடங்களில் விசாரித்து முடித்து, தண்டனை வழங்கினார்.

பட்டப்பகலில், பொதுமக்கள் முன்னிலையில், விஸ்வஜித்தை கொலை செய்த, ஆளும் கட்சியின், மாணவர் அணியைச் சேர்ந்த, எட்டு பேருக்கு மரண தண்டனையும், 13 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டு உள்ளது.

ஞாயிறு, 8 டிசம்பர், 2013

கோடரி வெட்டுக்கு இலக்கான யாழ்.இந்து மாணவன்!

  
யாழ்ப்பாணம், உடுவிலில் கொள்ளையர்கள் கோடரியால் வெட்டியதில் படுகாயமடைந்த யாழ். இந்துக் கல்லூரி மாணவன், சிகிச்சை பலனின்றி நேற்று மாலை உயிரிழந்தார். உடுவில் பகுதியிலுள்ள வீடொன்றில் கடந்த புதன்கிழமை புகுந்த கொள்ளையர்கள் வீட்டில் இருந்தவர்களை கோடரியினால்

தாக்கி விட்டு வீட்டிலிருந்த பொருட்களை கொள்ளையடித்துச் சென்றனர். இதில் காயமடைந்த தந்தை, தாய் மற்றும் மகன் ஆகிய மூவரும் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். தாய் சிகிச்சை பெற்று வீடு திரும்பியிருந்த நிலையில் தந்தையும் மகனும் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தனர்.
   
இந்தநிலையில் கோடரி வெட்டினால், தலையின் பின்புறம் கடுமையான வெட்டுக் காயத்துக்குள்ளான மகனான சண்முகநாதன் யதுர்ஷனன் (19) என்பவரே சிகிச்சை பலனின்றி நேற்று மாலை உயிரிழந்தார்
 

வியாழன், 21 நவம்பர், 2013

பிரசவத்தை எளிதாக்க கார் மெக்கானிக் கண்டுபிடித்த புது கருவி


அர்ஜென்டினாவை சேர்ந்த கார் மெக்கானிக் ஜோர்ஜ் ஓ டன். இவர் பிரசவத்தை எளிதாக்கும் நவீன கருவியை கண்டுபிடித்துள்ளார். இந்த கருவிக்கு உலக சுகாதார நிறுவனம் விருது வழங்கியுள்ளது.இவர் நண்பர்களுடன் விருந்துசாப்பிட்ட போது ஒயின் பாட்டிலின் உள்ளே கார்க் போய்விட்டது. ஆனால்

 பந்தயத்திற்காக ஜோர்ஜ் பாட்டிலின் உள்ளே பிளாஸ்டிக் பையை நுழைத்தபின் ஊதிப் பெரிதாக்கியதில் கார்க் பிளாஸ்டிக் பைக்குள் மாட்டிக் கொண்டு, இழுத்ததும் அழகாக வெளியில் வந்துவிட்டது.அன்று இரவு தூக்கத்திலிருந்து

திடுமென விழித்த ஜோர்ஜ் தனது மனைவியிடம் சம்பவத்தை விவரித்த பின் குழந்தையை இந்த பிளாஸ்டிக் பை முறையில் வெளியில் எடுப்பது எளிதான பிரசவ முறையாக இருக்கும் என்று கூறினார்.அடுத்தநாள் காலையில் ஜோர்ஜ், அவரது நண்பருடன் ஒரு மகப்பேறு மருத்துவரை சந்தித்து புதிய கருவியை பற்றி கூறினார். அந்த மருத்துவர் ஜோர்ஜின் புதிய கருவி செயல்பாட்டை தனது மருத்துவமனையில் சோதனை செய்துபார்க்க உதவினார்.

இதையடுத்து அந்த மருத்துவர் யூடியூப் இணையதளத்தில் சோதனையை வெளியிட்டு பின் ஜோர்ஜை 2008ம் ஆண்டு உலக சுகாதார நிறுவனத்தின் மகப்பேறு துறையின் தலைவர் டாக்டர் மரியோ மரியால்டி யை சந்தித்து பேசவைத்தார். காப்பி குடிக்கும் நேரத்தில் 10 நமிடங்கள் தன்னை சந்திக்க அனுமதி அளித்த டாக்டர் மரியோ கண்டுபிடிப்பை பார்த்து 2 மணிநேரம் ஜோர்ஜ் உடன் பேசினார்.இதுகுறித்து டாக்டர் மரியோ கூறியதாவது:மகப்பேறு காலங்களில் பெண்கள் பல சிக்கல்களை சந்திக்கின்றனர். அவற்றில் ஒன்று

பிரசவ நேரத்தில் குழந்தை கருப்பைக்குள் சிக்கிக்கொள்வது. இதனால் குழந்தை அறுவை சிகிச்சை மூலமாக வெளியில் எடுக்கப்படுகிறது. இந்த சிக்கலான நேரத்தில் மருத்துவர் என்ன பிரச்னை, அதை எப்படி சரிசெய்வது என்று சரியாக முடிவெடுக்கவில்லை என்றால் தாயும் சேயும் இறப்பதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது.

சிக்கலான பிரசவ நேரத்தில் உபயோகப்படுத்தும் வகையில் எளிய கருவி இருந்தால் மருத்துவர்கள் பிரசவங்களை எளிதாகவும் சீக்கிரமாகவும் செய்யமுடியும்.ஓடன் கருவி என்று பெயரிடப்பட்ட இந்த கருவி அர்ஜென்டினாவை சேர்ந்த ஜோர்ஜ் ஓ‘டன் என்ற 59 வயது கார் மெக்கானிக் கண்டுபிடித்தது. இதன்மூலம் எளிதாக பிரசவம் நடக்க கர்ப்பிணி பெண்களுக்கு மருத்துவர்கள் உதவ முடியும்.  இதில் கையால் பிடிக்கும் வகையில் உள்ள ஒரு பிளாஸ்டிக் பை உள்ளது. உராய்வை குறைக்க லூப்ரிகன்ட்

செலுத்தப்பட்ட இந்த பை காற்று நிரப்பும் வகையில் உள்ளது. இதன்மூலம்  சிக்கலான பிரசவத்தில் குழந்தை வெளிவராத போது குழந்தையின் தலையை சுற்றி இந்த பிளாஸ்டிக் பையை வைத்து காற்றால் நிரப்பவேண்டும். இதனால் தலையை சுற்றி பிளாஸ்டிக் பை கெட்டியாக பிடித்துக்கொள்ளும், பின்னர் மெதுவாக வெளியில் இழுத்தால் குழந்தை பத்திரமாக பிரசவிக்கப்படும்.

இதன்மூலம் மிக சிக்கலான பிரசவங்கள் கூட எளிதாக நடைபெறுகிறது.இந்த கருவியை உலக சுகாதார நிறுவனம் அர்ஜென்டினா கர்ப்பிணி பெண்களிடம் சோதித்துப் பார்த்ததில், சுகமான பிரசவம் நடந்துள்ளது. இதனால் சிசேரியன்

 அறுவை சிகிச்சைகள் குறையும். இந்த முறையை இந்தியா சீனா மற்றும் தெற்கு  ஆப்பிரிக்காவில் பயன்படுத்த உள்ளோம். இதன்மூலம் பிரசவ நேரத்தில் ஏற்படும் சிக்கல்களினால் இறக்கும் குழந்தைகள் மற்றும் பெண்களை காப்பாற்ற முடியும். ஒரு ஆண்டில் பிரசவ நேர சிக்கல்களினால் பிறக்கும் குழந்தைகளில் 56 லட்சம் குழந்தைகள், 2,60,000 பெண்கள்

இறக்கிறார்கள்.  இதைத் தயாரிக்க 50 டாலர்கள் ஆகிறது. இந்த கருவியை கனடாவை சேர்ந்த கிரான்ட் சேலஞ்சஸ் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் பென்டன் டிக்கின்சன் கம்பெனியுடன் சேர்ந்து தயாரிக்க உள்ளது. ஏழை நாடுகளில் இந்த கருவி அதிக அளவில் பயனுள்ளதாக இருக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.

புதன், 13 நவம்பர், 2013

சாரதி நடத்துனர் கைத்தொலைபேசி பாவிப்பின் அறிவிக்கவும் -


ஊவா மாகாணத்தின் சேவையிலீடுப்படுத்ப்பட்டிருக்கும் இ. போ.ச. பஸ்களின் சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் கடமை வேளையில் கைத்தொலைபேசிகளைப் பயன்படுத்துவார்களாயின் அது தொடர்பாக ஊவா மாகாண இ.போ.ச பிராந்திய முகாமையாளருக்கு உடன் அறிவிக்கும்படி பஸ் பயணிகள் கேட்கப்பட்டுள்ளனர்.

பூணாகலையில் இடம்பெற்ற கோர பஸ் விபத்தினையடுத்து போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கம பஸ் சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் கடமை வேளையில் கைத்தொலைபேசிகளை பாவிப்பதை தடை செய்திருந்தார்.

இத் தடையினை மீறி செயற்படும் ஊவா மாகாண இ. போ. ச. சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் குறித்து பஸ் பிரயாணிகள் ஊவா மாகாண இ.போ.ச. பிராந்திய முகாமையாளர் பிரேமலால் சில்வாவிற்கு 077 1057700 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொண்டு அறிவிக்கும்படி பயணிகள் கேட்கப்பட்டுள்ளனர்.

புதன், 30 அக்டோபர், 2013

கிணற்றில் இருந்து தந்தை, மகளின் சடலங்கள் மீட்பு



கண்டி பன்வில பிரதேசத்திலுள்ள கிணறொன்றில் இருந்து 52 வயதுடைய தந்தை மற்றும் இரண்டரை வயதுடைய மகளின் சடலங்கள் இன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

வியாழன், 17 அக்டோபர், 2013

நவக்கிரி நிலாவரையில் முதலாவது பயிர் மருத்துவ முகாம்


வடமாகாணத்தில் முதற் தடவையாகப் பயிர் மருத்துவ முகாம் நவக்கிரி  நிலாவரையில்
பயிர்களில் ஏற்படும் நோய்கள் ஏற்படுவதற்கான அறிகுறிகளை விவசாயிகள் இனங்கண்டு அவற்றைக் குணப்படுத்துவதற்கான பரிந்துரைகளைப் பெறுவதற்காகவும் இந்த பயிர் மருத்துவ முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதன்போது பெருமளவான விவசாயிகள் நோய்வாய்ப்பட்ட பயிர்களின் மாதிரிகளோடும், தோட்ட மண் மாதிரிகளோடும் வருகைதந்து நோய்களுக்கான காரணிகளை இனங்கண்டு அவற்றைக் குணப்படுத்துவதற்கான ஆலோசனைகளைப் பெற்றுச் சென்றமை குறிப்பிடத்தக்கது.

இப்பயிர் மருத்துவமுகாம் வடமாகாணத்தின் ஏனைய இடங்களிலும் நடாத்துவதற்கு ஒழுங்குசெய்யப்பட்டுள்ளதென மாகாண விவசாயப் பணிப்பாளர் சி.சிவகுமார் தெரிவித்தார்.

மேலும் இந்நிகழ்ச்சி திட்டத்தில் விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன்,மாகாண விவசாயப் பணிப்பாளர் சி.சிவகுமார்,யாழ் மாவட்ட விவசாயப் பணிப்பாளர் கி.ஸ்ரீபாலசுந்தரம் ஆகியோரும் பூச்சியியல், மண்ணியியல் மற்றும் விவசாயத் துறைகளைச் சேர்ந்த உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டனர்