siruppiddy

சனி, 23 மார்ச், 2013

கரையொதுங்கிய இலட்சக்கணக்கான இறால்கள்


ஆயிரக்கணக்கான இறால்கள் மற்றும் நூற்றுக்கணக்கான நண்டுகள் இறந்து, சிலி கடலோர பகுதிகளில் கரை ஒதுங்கியுள்ளது. சிலி தலைநகரான சாண்டியாகோவிலிருந்து 532 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கோரோணல் கடற்கரையிலே மர்மமான இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.இந்நிகழ்வுக்கு உள்ளூர் மின் உற்பத்தி நிலையங்களே காரணம் என்று சில மீனவர்கள் கூறுகின்றனர். இது சுற்றுச்சூழல் குற்றமாக இருக்கக்கூடும் என்பதினால் காவல்துறையினர் ஆதாரங்களை சேகரித்து வருகின்றனர். மேலும் மீனவர்கள் இதனால் பெரிதும் பாதிப்படையலாம் என்று தெரிகிறது.
சுற்றுச்சூழல் வல்லுநர்கள் நீர் வெப்பநிலை, ஆக்ஸிஜன் அளவு போன்றவற்றை சோதித்து கொண்டு இருக்கின்றனர். இவ்வளவு அதிகமான கடல் உயிரினங்கள் இறந்துப்போக ஆழ்கடலில் எண்ணெய் ஆய்வு, வைரஸ்கள் போன்றவை கூட காரணமாக இருக்கலாம் என்று சுற்றுசூழல் ஆர்வாலர்கள் கூறுகின்றனர்.
சிலர் கடலில் நீர் வெப்பத்தை அதிகரிக்கும் எல் நினோ எனப்படும் நிகழ்வு கூட இதற்க்கு காரணமாக இருக்கும் என்றும் கூறியுள்ளனர். உள்ளூர் சுற்றுச்சூழல் அதிகாரி இதைப்பற்றி கூறுகையில், "தற்போது கோரோணல் விரிகுடா நீரின் வெப்பம், மின் கடத்துத்திறன் மற்றும் ஆக்ஸிஜன் அளவுகளை பரிசோதித்து கொண்டு இருக்கிறோம். மேலும் விபரங்கள் விரிவான சோதனைக்கு பின்னரே தெரியும்" என்றார்