siruppiddy

திங்கள், 24 நவம்பர், 2014

பாலியல் வன்புணர்வு! பத்துவருட சிறை சிப்பாய்க்கு!!

 யாழில் பராயமடையாத சிறுமி ஒருத்தியை வன்புணர்வுக்குள்ளாக்கிய குற்றச்சாட்டில் இலங்கை இராணுவ சிப்பாய் ஒருவருக்கு யாழ். மேல் நீதிமன்று 10 வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனை விதித்துள்ளது.
யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த இவர் சிறுமியாக இருக்கும் போது அவர் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டார். தற்போது குறித்தவர் திருமணமாகி வசித்து வருகின்றார். பாலியல் வன்புணர்வு தொடர்பில் 2 இராணுவ சிப்பாய்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டு அது தொடர்பிலான வழக்கு கடந்த பல வருடங்களாக யாழ். மேல் நீதிமன்றில் நடைபெற்று வந்தது.
குற்றஞ்சாட்டப்பட்ட சிப்பாய்களில் ஒருவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டது. மற்றையவரது குற்றம் நிரூபிக்கப்படவில்லை. குற்றவாளியான சிப்பாய்க்கு 10 வருடங்கள் தீர்ப்பளித்த நீதிமன்று மற்றையவரை விடுவிக்குமாறு தீர்ப்பளித்துள்ளது.

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

சனி, 15 நவம்பர், 2014

வைத்தியர் ஒருவரைதாக்கி கொள்ளையிட்ட இருவர் கைது!

யாழ். போதனா வைத்தியசாலை வைத்தியர் ஒருவரை தாக்கினார்கள் என்ற குற்றச்சாட்டில் இரு இளைஞர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். நேற்று முன்தினம் வியாழக்கிழமை இரவு 10.30 அளவில் யாழ். நகரப்பகுதியில் உள்ள பிரபல விருந்தினர் விடுதி ஒன்றில் மது அருந்திய இளைஞர்கள் குறித்த வைத்தியரைத் தாக்கியுள்ளனர். மேலும் அவர் வசமிருந்த 23,500 ருபா பெறுமதியான கையடக்கத் தொலைபேசியினையும் கொள்ளையிட்டுள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பில் தாக்குதலுக்கு இலக்காகிய வைத்தியர் நேற்று வெள்ளிக்கிழமை (14) யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். இதன் பிரகாரம் யாழ். பிறவுண் வீதிப்பகுதியைச் சேர்ந்த 28 வயது மற்றும் 35 வயதுடைய இரு இளைஞர்களை கைதுசெய்துள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் மேலும் தெரிவித்தனர். இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

புதன், 12 நவம்பர், 2014

சிறுமியை கொடூரமான முறையில் துன்புறுத்திய தாய், சிறிய தந்தை கைது!

யாழ். சாவகச்சேரி பகுதியில் சிறுமி ஒருவரை கொடூரமான முறையில் துன்புறுத்தியதாக கூறப்படும் தாயும் சிறிய தந்தையும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சிறுமியின் தாய் மற்றும் சிறிய தந்தை தொடர்பில் பொலிஸாருக்கு ஏற்கனவே முறைப்பாடு கிடைத்திருந்ததாக பதில் பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் உதவி பொலிஸ் அத்தியட்சகருமான ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.
இதற்கமைய நீதிமன்றத்தின் அனுமதியுடன்  சிறுமி அவரது பாட்டியிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தார்.
மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் நேற்று சந்கேநபர்களை கைது செய்ததாக பதில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார்.
சந்தேகநபர்கள் இன்று சாவகச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

திங்கள், 10 நவம்பர், 2014

எரியுண்ட நிலையில் பெண்ணின் சடலம்!

பருத்தித்துறை, புலோலி வடக்கு பகுதியில் எரிந்த நிலையில் பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இன்று ஞாயிற்றுக்கிழமை காலை பொலிஸாருக்கு கிடைத்த தகலொன்றையடுத்து சடலத்தை மீட்டு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையினில் ஒப்படைத்துள்ளனர்.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் புலோலி வடக்கு,
 விஸ்வகுல ஒழுங்கையைச் சேர்ந்த லோகிதாசன் அம்பிகாவதி (வயது - 52) என்பவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கொள்ளை நோக்கத்திலேயே வீட்டில் தனித்திருந்த பெண்ணே படுகொலை செய்யப்பட்ட பின்னர் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக நம்பப்படுகின்றது.
ஏற்கனவே பல தடவைகள் இவ்வாறு வீடுகளில் தனித்திருந்த பெண்கள் கொள்ளைகளின் பின்னர் படுகொலை செய்யப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டுள்ள போதும் இது வரை குற்றவாளிகள் அகப்பட்டிருக்கவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

செவ்வாய், 4 நவம்பர், 2014

சூரன் போர்பார்க்க சென்ற பாடசாலை மாணவனைக் காகாணவில்லை

 வவுனியா, ஓமந்தை பன்றிக்கெய்தகுளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையைச் சேர்ந்த 16 வயது மாணவன் ஒருவன் காணமல் போயுள்ளான். கடந்த புதன்கிழமை (29) மாலை சூரன் போர் பார்பதற்காக வவுனியா, புளியங்குளம், பனிக்கநீராவி பகுதியில் உள்ள தனது வீட்டிலிருந்து வவுனியா நகருக்கு வந்த சந்திரகுமார் சுகிர்தன் (வயது-16) என்ற மாணவன் இன்று வரை வீடு திரும்பவில்லை என மாணவனின் தாயார் சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

ஞாயிறு, 2 நவம்பர், 2014

பெண்ணுடன் சேட்டை விட்டு அடிவாங்கிய மாலக சில்வாவுக்கு விளக்கமறியல்!

அமைச்சர் மேர்வின் சில்வாவின் மகன் மாலக சில்வா எதிர்வரும் 4ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். நேற்று அதிகாலை கொழும்பிலுள்ள இரவு விடுதியில் தாக்கப்பட்ட இவர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே அவர் நீதிமன்றில் நிறுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
 இரவு விடுதியில், சுவீடன் பெண் ஒருவருடன் தவறாக நடந்து கொள்ள முற்பட்டபோது, குறித்த பெண்ணின் துணைவரே, மாலக சில்வாவை தாக்கியிருந்தார். சிசிடிவி கரொவில் பதிவான இந்தக் காட்சிகளை ஆராய்ந்த பின்னரே மாலக சில்வா கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>