siruppiddy

செவ்வாய், 29 செப்டம்பர், 2015

உடனடியாக கனடாவிற்கு நுழைபவர்களுக்கு நிரந்தர வதிவிட உரிமை?

ரொறன்ரோ Fairbank அருகிலுள்ள ஷவர்மா உணவகத்தில் கடந்த இரு மாதங்களில் இரண்டாவது தடவையாக கொள்ளையிடப்பட்டுள்ளது.கஸ்டில்பீல்ட் அவனியூ அருகில், 2488 டவ்றின் வீதியில் அமைந்துள்ள இந்த உணவகத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு 10.30 மணியளவில் துப்பாக்கி முனையில் கொள்ளையிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர் துப்பாக்கியை காட்டி பணத்தை கேட்டு மிரட்டிய போதிலும் பணம் பெறப்பட்டதாக என்பது தொடர்பில் விபரங்கள் தெரியவரவில்லை.சந்தேகநபர் 25 வயது மதிக்கத்தக்க கறுப்பு மனிதர் எனவும் சம்பவத்தின் போது முகத்தை மறைத்து முகமூடி 
அணித்திருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொள்ளை சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.குறித்த உணவகத்தில் கடந்த ஓகஸ்ட் மாதம் 13 ஆம் திகதியும் கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>



திங்கள், 28 செப்டம்பர், 2015

மரண அறிவித்தல் திரு இரத்தினம் பாலகிருஷ்ணன் (செல்வம்)

அன்னை மடியில் : 7 யூலை 1960 — ஆண்டவன் அடியில் : 24 செப்ரெம்பர் 2015
யாழ். அச்சுவேலி பத்தமேனியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zurich ஐ வசிப்பிடமாகவும் கொண்ட இரத்தினம் பாலகிருஷ்ணன் அவர்கள் 24-09-2015 வியாழக்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற இரத்தினம், சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கோபாலகிருஷ்ணன் தனலக்‌ஷ்மி தம்பதிகள் மற்றும் காலஞ்சென்ற இராசதுரை, விலாசவதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற புஸ்பகலா, இராஜேஸ்வரி ஆகியோரின் அன்புக் கணவரும்,

வினோஜா, காயத்திரி, அபிதன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

பவானி(இலங்கை), பாஸ்கரன்(சுவிஸ்), பாமினி(சுவிஸ்), பாமதி(சுவிஸ்), பாநிதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

திரவியநாதன்(இலங்கை), பாஸ்கரன்(இலங்கை), கெங்கன்(சுவிஸ்), வினோதினி, மணிவண்ணன்(சுவிஸ்), சிவா(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கபில் அவர்களின் அன்பு மாமனாரும்,

கவிஷா அவர்களின் அன்புத் தாத்தாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறுகேட்டுக்கொள்கின்றோம்
 அன்னாரின் பிரிவால் துயருறும் குடும்பத்தவர்க்கு எமது  
ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிகின்றோம்

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 26/09/2015, 08:30 மு.ப — 11:30 மு.ப
முகவரி: Krematorium Nordheim, Bestattungs- und Friedhofamt Käferholzstrasse 101,8046 Zürich, Switzerland. 
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 27/09/2015, 08:30 மு.ப — 11:30 மு.ப
முகவரி: Krematorium Nordheim, Bestattungs- und Friedhofamt Käferholzstrasse 101,8046 Zürich, Switzerland. 
பார்வைக்கு
திகதி: திங்கட்கிழமை 28/09/2015, 07:30 மு.ப — 04:30 பி.ப
முகவரி: Krematorium Nordheim, Bestattungs- und Friedhofamt Käferholzstrasse 101,8046 Zürich, Switzerland. 
பார்வைக்கு
திகதி: செவ்வாய்க்கிழமை 29/09/2015, 07:30 மு.ப — 04:30 பி.ப
முகவரி: Krematorium Nordheim, Bestattungs- und Friedhofamt Käferholzstrasse 101,8046 Zürich, Switzerland. 
கிரியை
திகதி: புதன்கிழமை 30/09/2015, 10:00 மு.ப — 02:00 பி.ப
முகவரி: Krematorium Nordheim, Bestattungs- und Friedhofamt Käferholzstrasse 101,8046 Zürich, Switzerland. 
தொடர்புகளுக்கு
கபில் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41791017481
சுஜன் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41792360749
திரவியநாதன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94771826684
பாஸ்கரன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94772882138
கெங்கன் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41797604807
ராஜன் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41788284383
மணிவண்ணன் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41764954393
சிவா — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41794157732


இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

வியாழன், 24 செப்டம்பர், 2015

மாபெரும் நடைபவனி இந்துக் கல்லூரியின் 125 ஆவது ஆண்டு விழா

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் 125ஆவது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்ட மாபெரும் நடைபவனி இன்று புதன்கிழமை இடம்பெற்றது. இன்று பாடசாலை சமூகத்தால் ஒழுங்குசெய்யப்பட்ட மாபெரும் நடைபவனியில் அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், பழைய மாணவர்கள் நலன்விரும்பிகள் என ஆயிரக்கணக்கானோர் பங்குபற்றினர்.
 பாடசாலையின் 125 ஆண்டு கால சாதனைகளை விளக்கும் ஊர்திகள், தமிழர் கலாசாரங்களைப் பிரதிபலிக்கும் நிகழ்வுகள் என்பனவும் பேரணியில் இடம்பெற்றன. பாடசாலை முன்றிலிலிருந்து ஆரம்பமான
 நடைபவனி கே.கே.எஸ். வீதி வழியே பயணித்து ஆஸ்பத்திரி வீதியை அடைந்து அங்கிருந்து மணிக்கூட்டு வீதியை அடைந்து வேம்படி, மத்திய கல்லூரி வீதி 
வழியாக பலாலி வீதியை அடைந்து அங்கிருந்து கந்தர்டம் வீதியை அடைந்து யாழ்.இந்து மகளிர் கல்லூரி வழியாக கஸ்தூரியார் வீதியை அடைந்து அங்கிருந்து யாழ். இந்துக் கல்லூரியின் மைதானத்தில் வந்து நிறைவடைந்தது. நடைபவனி வந்த பாதைகளில் இருந்த யாழ். மத்திய 
கல்லூரி, வேம்படி மகளிர் கல்லூரி, யாழ். இந்து மகளிர் கல்லூரிகள் 
தத்தமது பாடசாலை வாயில் வைத்து நடைபவனியை வரவேற்றன. யாழ். இந்துக் கல்லூரியின் 125 ஆவது ஆண்டு நிறைவு விழா நிகழ்வுகள் 22 திகதி தொடக்கம் 27ஆம் திகதி வரை நடைபெறவுள்ளன.

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>







ஞாயிறு, 20 செப்டம்பர், 2015

தாயும் குழந்தையும் பிரசவத்தின் போது மரணம்`?


பிறந்த சிசு உயிரிழந்த நிலையில், தாயும் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ள சம்பவம் யாழ். போதனா வைத்தியசாலையில் வெள்ளிக்கிழமை (18) இடம்பெற்றுள்ளது.

இச் சம்பவத்தில் வெலிஓயா பகுதியினை சேர்ந்த மாரசிங்க பத்திரலாகே சமீலா சுதேசினி (வயது 33) என்ற பெண்ணே உயிரிழந்துள்ளார்.

கடந்த 15 ஆம் திகதி சம்மந்துறை வைத்தியசாலையில் பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்ட இவருக்கு பெண் குழந்தை ஒன்று பிறந்தது. எனினும் அக்குழந்தை சிறிது நேரத்தில் உயிரிழந்துள்ளது.

உடனடியாக முல்லைத்தீவு வைத்தியசாலைக்கும் அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கும் மாற்றப்பட்டிருந்தார். இந் நிலையில் மேற்படி பெண் வெள்ளிக்கிழமை (18) உயிரிழந்துள்ளார்.

மரண விசாரணையை யாழ். போதனா வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனையின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

ஞாயிறு, 6 செப்டம்பர், 2015

அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது புதிய கடவுச்சீட்டு

புதிய கடவுச்சீட்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள போதிலும் பழைய கடவுச்சீட்டை தொடர்ந்தும் பயன்படுத்த முடியும் என குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.கை விரல் அடையாளத்துடன் புதிய தொழில்நுட்ப முறையில்

 தயாரிக்கப்பட்டுள்ள கடவுச் சீட்டு விநியோகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர்  தெரிவித்துள்ளார்.

ஒரே நாளில் கடவுச்சீட்டினை பெற்றுக் கொள்வதற்கு 3500 ரூபாவும் சாதாரண முறையில் பெற்றுக் கொள்வதற்கு 1500 ரூபாவும் பெற்றுக்  கொள்ளப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.இதேவேளை கடவுச் சீட்டுகளை விநியோகிப்பதற்கான கருமபீடங்களை அதிகரிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதற்கமைய 16ஆக இருந்த கரும பீடங்கள் தற்போது 32 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் தெரிவித்துள்ளார்.


இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>