siruppiddy

திங்கள், 13 ஜூலை, 2015

புதிய மைல்கல்.புற்றுநோய் சிகிச்சையில்???

குழந்தைகளுக்குப் புற்றுநோய் சிகிச்சை அளித்து குணமானாலும் கதிர்வீச்சு காரணமாக மற்ற பகுதிகள் பாதிக்கப்பட்டால், அவர்களின் வளர்ச்சி பாதிக்கப்படும். ஆனால், புரோட்டான் தெரப்பியில் இந்தப் பாதிப்பு குறைவு. சாதாரணமாக வந்து சிகிச்சை எடுத்துச் செல்லலாம். இந்த சிகிச்சையின் மூலம், மிகச்சிறந்த வாழ்க்கைத்தரத்தை நோயாளிகள் நிச்சயம் பெற முடியும்.” என்றார்.
புரோட்டான் தெரப்பியின் செயல்பாடு!
தற்போதைய கதிரியக்க சிகிச்சையில் போட்டான்கள் (Photons) பயன்படுத்தப்படுகின்றன. நவீன புரோட்டான் தெரப்பியில், போட்டான்களுக்குப் பதிலாக புரோட்டான்கள் பயன்படுத்தப்படும். மிகப்பெரும் வலிமைகொண்ட இந்த புரோட்டான்கள், ஹைட்ரஜன் 
அணுவில் இருந்து பிரிக்கப்பட்டு, சைக்ளோட்ரான் எனும் கருவியின் வழியாக, அதிவேகமாகச் சுழற்றப்படும். பிறகு, அயனிக்கற்றை அறை (Beam room) வழியாக செலுத்தப்பட்டு, புற்றுநோய் கட்டியின் 
வடிவத்துக்கு
 ஏற்றவாறு கேன்ட்ரி அறையில் (Gantry Room) மாற்றியமைக்கப்படும். அடுத்து, நாசில் வழியாக நோயாளியின் உடலில் புற்றுநோய் செல்கள் இருக்கும் இடத்தின் மேல் செலுத்தப்பட்டு, அந்த செல்களை மட்டும் குறிவைத்து அழிக்கும்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

அதிரடி நடவடிக்கை: - உங்கள் முகப்புத்தக கணக்குகளும் முடக்கப்படலாம்!

நம் அனைவராலும் அதிக அளவில் விரும்பி பயன்படுத்தப்படும் சமூக வலைத்தளமான FACEBOOK ல் நாம் அனைவரும் தமது சொந்த பெயரினை பெரும்பாலும் பயன்படுத்துவதில்லை. நமக்கு பிடித்தமான
 புனைப் பெயரினையே பயன்படுத்தி வருகிறோம் இதனால் பலர் ஒன்றிற்க்கும் மேற்பட்ட போலி முகநூல் கணக்கினை பயன்படுத்தி வருகின்றனர். இதனை தவறாக பயன்படுத்தி பலர் குற்றங்களிலும் ஈடுபட்டு 
வருகின்றனர். இதற்கு முற்றுப் புள்ளி வைக்கும் விதமாக FACEBOOK நிறுவனம் நடவடிக்கை மேற்க் கொண்டு வருகிறது. முதற்கட்டமாக புனைப் பெயரில் முகநூல் கணக்கு வைத்திருப்பவர்கள் ஒரு வார கால அவகாசத்திற்குள் தங்களது கணக்கின் பெயரினை உண்மையான பெயரிற்கு மாற்றிக் கொள்ள வேண்டும்.
தவறும் பட்சத்தில் ஒரு வாரத்திற்கு பின் கணக்கு முடக்கப்பட்டு விடும். அதன் பின்பு அவரவர் தங்களது அடையாள அட்டையை பதிவேற்றி தங்களது கணக்கை மீட்க வேண்டும். அடையாள அட்டையில் உள்ள பெயருடன் கணக்கின் பெயர் பொருந்தாத பட்சத்தில் கணக்கு நிரந்தரமாக முடக்கப்பட்டுவிடும்... ஆண்டவா இனியாவது இந்த
 Fake ID தொல்லை தீருமா?
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>