வெளியான கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின்படி, யாழ். வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலையில் 28 பேர்,
கடந்த வருடம் நடைபெற்ற க.பொத சாதாரண தரப்பரட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் யாழ்.மாவட்டத்தில் முதல் இடத்தை தக்கவைத்துக் கொண்டது யாழ்.வேம்படிமகளிர் உயர்தரப் பாடசாலை .
வேம்படியில் 246 மாணவர்கள் க.பொ.த சாதாரண பரீட்சையில் தோற்றி 243 மாணவர்கள் முழுமையாக அனைத்து பாடங்களிலும் சித்தியடைந்துள்ளனர்.
இதில் 28 மாணவர்கள் 9-ஏ சித்தியையும் குறிப்பாக 11 மாணவர்கள் ஆங்கில மொழிமூலம் , 17 மாணவர்கள் தமிழ் மொழி மூலம் 9-ஏ சித்தியையும் பெற்றுள்ளனர்.
மேலும் யாழ்.இந்துக்கல்லூரியை பொறுத்த வரையில் க.பொ.த சாதாரண பரீட்சையில் தோற்றிய 263 பேரும் முழுமையாக சித்தியெய்தியுள்ளனர்.
இதில் 18 மாணவர்கள் 9-ஏ சித்தியையும் குறிப்பாக 8 மாணவர்கள் தமிழ்மொழி மூலம்,10 மாணவர்கள் ஆங்கில மொழி மூலம் 9-ஏ சித்தியையும் பெற்றுள்ளனர்.
யாழ்.இந்துக் கல்லூரி யாழ்.மாவட்டத்தில் ஆண்கள் பாடசாலையில் முன்னிலை வகிக்கும் அதேவேளை பெண்கள் பாடசாலையில் வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை முதலிடம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.