மலர்வு : 1 ஒக்ரோபர் 1953 — உதிர்வு : 6 ஏப்ரல் 2015
திதி : 25 மார்ச் 2016
யாழ். நவற்கிரியைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தாமோதரம்பிள்ளை வேலுப்பிள்ளை அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்களின் அன்புத் தம்பியே
இதயத்துடிப்பின் அருமருந்தே
காலம் செய்த கோலத்தினால்
ஒவ்வொரு கணப்பொழுதும் துடிக்கின்றோம்
ஆண்டு ஒன்று மறைந்தாலும்
மனம் ஆற மறுக்கின்றது
எங்கள் நிம்மதியை தொலைத்து
மாதங்கள் பன்னிரெண்டு ஆயிற்று
அழியாது நம் துயரம்
மறையாது உம் நினைவு
எம்மை ஆறாத்துயரத்தில்
தவிக்கவிட்டு போனதேனோ?
புன்னகை புரியும் உம் முகம்
தெரிகிறது தினமும்
ஆனாலும் அது உண்மை இல்லை
என்று நினைத்தவுடன் எம் மனம் கலங்குகிறது!
முத்துக்கு முத்தாக
சொத்துக்கு சொத்தாக
அண்ணன் தம்பி பிறந்து வந்தோம்
கண்ணுக்கு கண்ணாக
அன்பாலே இணைந்து வந்தோம்
ஒன்றுக்குள் ஒன்றாக
சின்னத்தம்பி கடைசித்தம்பி
செல்லமாய் வளர்ந்த தம்பி
ஒன்றுபட்ட இதயத்திலே
ஒரு நாளும் பிரிவு இல்லை
அண்ணன் சொல்லும் வார்த்தை எல்லாம்
வேதமென்னும் தம்பி உள்ளம்
அண்ணனாய் நான் இருக்க
தம்பியை தேடியது ஏனோ?
தேவை ஒரு ஜீவன் என்றால்
நான் போக சம்மதமே
காலன் உம்மை அழைப்பதை
என் மனதில் தெரிந்து கொண்டேன்
சொர்க்கத்தின் வாசல் உன்னை
சொந்தங்கொண்டு தேடியது ஏனோ
அழுவதைக் கேட்க ஆட்களும் இல்லை
ஆறுதல் சொல்ல யாரும் இல்லை
தண்ணீரில் மீன் அழுதால்
அதன் கண்ணீரை யார் அறிவார்?
ஆறிலும் சாவு நூறிலும் சாவு
இது தான் இயற்கையின் நியதி
ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும்
என் தம்பி வரமாட்டார்
சொர்க்கம் ஒன்று இருந்தால் நிச்சயம்
அங்கே உமக்கு ஒரு இடம் உண்டு
நாம் எத்தனை பிறவி எடுத்தாலும்
நாம் அண்ணன் தம்பியாய் பிறந்திட வேண்டும்
இழத்தலும் பெறுதலும்
கவலையும் சந்தோசமும்
எம் வாழ்வில் வழமையானது
எல்லாம் இருந்தும் உம் பிரிவால் வாடும்
உம்மேல் அன்பு வைத்திருக்கும் அன்பு உள்ளங்கள்
அன்னாரின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி 25-03-2016 வெள்ளிக்கிழமை அன்று நவற்கிரியில் உள்ள அவரது சகோதரியின் இல்லத்தில் நடைபெறும். இந் நிகழ்வில் அனைவரும் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
செல்வா(சகோதரர்)
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>