வடக்கின் பிரசித்தி வாய்ந்த செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தில் இன்றும் அற்புதங்கள் இடம்பெற்றுக் கொண்டுதான் உள்ளன என்று அடியவர்கள் விசுவாசிக்கின்றார்கள்.
திருவிழாக்கள் காரணமாக வழமையை காட்டிலும் மிகுந்த பரபரப்புடன் அண்மைய நாட்களில் காணப்பட்ட ஆலயத்துக்கு இன்னமும் பரபரப்பை ஏற்படுத்தி இருப்பவர் வெற்றிவேல் சுவாமிகள் என்பவர்.
இயற்கை அழகு நிறைந்த செல்வச்சந்தி ஆலயத்தில் பரதேசிகள், யாத்திரிகள், பக்தர்கள் கூட்டம் எப்போதுமே காணப்படுகின்றது. பரதேசிகளோடு பரதேசிகளாக சித்தர்களும் முருகப் பெருமானை தரிசிக்க வருகின்றனர் என்பது நம்ப முடியாத உண்மை ஆகும்.
ஆனால் இவர்களை தரிசிக்கின்ற வாய்ப்பு கிடைத்ததாக சில பக்தர்கள் புளகாங்கிதத்தோடு கூறுகின்றார்கள்.
தீராத நோய் உடையவர்கள், தோல்வியில் துவண்டவர்கள், வாழ்க்கையில் விரக்தி கண்டவர்கள் என்று பல ரகப்பட்ட சாதாரண மனிதர்களும் மாற்றத்தை வேண்டி இவ்வாலயத்துக்கு வந்து வழிபாடுகள் செய்கின்றனர். இவ்விதம் மாற்றம் வேண்டி வந்திருக்கின்ற மனிதர்களின் நம்பிக்கை நட்சத்திரமாக மாறி இருப்பவர்தான் வெற்றிவேல் சுவாமிகள்.
இவரின் பூர்வீகம் யாருக்குமே சரியாக தெரியாது. சிலர் கொழும்பு என்கின்றார்கள். சிலர் மட்டக்களப்பு என்கின்றார்கள். சிலர் இந்தியா என்றும் சொல்கின்றனர்.
வெற்றிவேல் சுவாமிகள் சந்நிதி முருகன் ஆலயத்தில் பிள்ளையாரின் சன்னிதிக்கு அருகில் பெரும்பாலும் காணப்படுகின்றார். இல்லையென்றால் ஆலயத்திலோ, ஆலய வளாகத்திலோ நிச்சயம் காணப்படுவார். அநேகமாக சப்பாணி கொட்டி அமர்ந்து இருப்பார் அல்லது
படுத்து இருப்பார்.
இவர் படுத்து இருக்கின்றபோது முகத்தில் ஒருவித ஒளி வீசுகின்றது என்று புதியவர்கள்கூட சொல்கின்றனர்.
இவர் தோய்த்து உலர்ந்த சட்டையும், வேட்டியும் அணிந்து தூய்மைக் கோலத்தில் காட்சி தருகின்றார். இதனால் ஏனைய பரதேசிகளுக்கு மத்தியில் இவரை அடையாளம் காண்கின்றமை இலகு. இவர் மீது இயல்பாகவே மதிப்பும், மரியாதையும் காண்பவர்களுக்கு ஏற்பட்டு
விடுகின்றது.
இவர் தேடி வருகின்ற அன்பர்களுக்கு நோய்களை தீர்த்துக் கொடுக்கின்றார். சந்திநிதி முருகன் மகா வைத்தியன் என்று கூறுகின்றமையுடன் இவரை மருத்துவ தாதி என்று புன்முறுவலுடன்
சொல்கின்றார்.
அண்மையில் லண்டனில் இருந்து புலம்பெயர் தமிழர் குடும்பம் ஒன்று சந்நிதிக்கு சென்று இருந்தது. இவர்களின் சின்ன மகள் பிறப்பால் ஊமை. ஏதோ ஒரு நம்பிக்கையில் இவரை அணுகி உள்ளனர்.
இவர் சில விடயங்களை செய்து இருக்கின்றார். குழந்தை இவர் சொல்லிக் கொடுத்தபடி வா முருகா என்று கூறி இருக்கின்றது. பிள்ளைக்கு பேச்சு வந்து விட்டது என்று பெற்றோர் மகிழ்ச்சிக் கடலில்
மூழ்கினர்.
தீராத ஒரு வலியால் பீடிக்கப்பட்ட இளைஞன் ஒருவர் ஏதோ ஒரு உந்துததால் இவரை அணுகி பணிந்து இருக்கின்றார்.
சந்நிதி முருகன் ஆலய விளக்கு எண்ணெய்யை மருந்தாதாக பயன்படுத்து வருத்தத்தை படிப்படியாக போக்கி உள்ளார்.
இவரின் அற்புதங்கள் தொடர்கின்றன, இவரை அணுகுகின்ற அடியவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>
0 கருத்துகள்:
கருத்துரையிடுக