siruppiddy

புதன், 29 அக்டோபர், 2014

ஜய வருடத்தில் (2014) நிகழும் முக்கிய கிரக நிலை மாற்றமான சனிப்பெயர்ச்சி

 
 பெருங்குளம் நவதிருப்பதி ஸ்தலம் பெருங்குளம் கோவில், கிராமம் பரம்பரை ஜோதிடர் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர் MCA, MA(Ast) அவர்கள் கணித்து எழுதியுள்ள விரிவான ஜோதிட பலன்களை இங்கே காணலாம்.
சனிப்பெயர்ச்சி:
நிகழும் மங்களகரமான கொல்லம் 1190ம் ஆண்டு ஸ்ரீஜய வருஷம் தக்ஷிணாயனம் ஹேமந்த ரிது மார்கழி மாதம் 1ம் தேதி -  16.12.2014 செவ்வாய்கிழமையும் கிருஷ்ண தசமியும் ஹஸ்த நக்ஷத்ரமும் ஸௌபாக்ய நாம யோகமும் வணிசை  கரணமும் சித்தயோகமும் கூடிய சுபயோக சுபதினத்தில் உதயாதி நாழிகை 20.40க்கு (பகல் மணி 2.44) வாக்கியப்  பஞ்சாங்கப்படி சனிபகவான் துலா ராசியிலிருந்து விருச்சிக ராசிக்குள் பிரவேசிக்கிறார். அடுத்த இரண்டரை வருட  காலத்திற்கு விருச்சிக ராசியிலிருந்து சனி பகவான் அருள் புரிவார்.
இதனால் ஏற்படும் லோக பலன்கள்:
நல்ல மழையும் பசுமையும் உண்டாகும். விவசாயம் கால்நடை வளர்ச்சி பெறும். இதர துறைகளிலும் நாடு வளர்ச்சி  பாதயை நோக்கி முன்னேறும். செவ்வாய் வீட்டில் சனி அமர்வதால் நாட்டையும் வீட்டையும் பலவிதங்களில்  தொல்லைப்படுத்தும் சமூக சீர்கேட்டாளார்கள் அழிக்கப்படுவர். ரியல் எஸ்டேட் துறை ஏற்ற இறக்கமாக இருக்கும்.  மக்களிடம் பணத் தட்டுப்பாடு நீங்கி அதிக அளவில் பணப்புழக்கம் ஏற்படும். பொன் பொருள் விலை மிகவும்  அதிகரிக்கும். பொருளாதாரம் நிலையில் புதிய மாற்றம் ஏற்படும். ஆலயங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெறும். அடிக்கடி  முக்கிய கடல்களில் நீர்மட்டங்களில் மாற்றம் இருந்து கொண்டே இருக்கும். அதனால் முக்கிய துறைமுகங்கள் பெரிய  அளவில் பாதிக்கப்படலாம். முக்கிய தேவாலயங்களுக்கு ஏற்பட்ட பிரச்சனைகள் சமாதானம் ஏற்படும். புண்ணிய  க்ஷேத்திரங்களில் விபத்துகள் ஏற்படலாம். மலைவாசஸ்தலங்களில் பனிமூட்டம் அதிகமாக இருக்கும். நிலச்சரிவுகள்  ஏற்படலாம். அரசாங்கத்திற்கு எதிராக கடத்தல்கள் அதிகரிக்கும். ஆனால் அரசாங்கம் அவற்றை பரிமுதல்களும்  செய்யலாம். வியாழக்கிழமைகளில் நல்ல காரியங்களை ஆரம்பிப்பதும் செய்வதும் நன்மையைத் தரும்.     இந்தோனேஷியா, பர்மா, சுமத்ரா, கரீபியன் தீவுகள், கொரியா, ஆஸ்திரேலியா, வட அமேரிக்கா போன்ற  இடங்களில்  இயற்கை சீற்ற பாதிப்புகள் ஏற்படலாம். வளைகுடா நாடுகள் மற்றும் ஆப்பிரிக்கா தேசங்களில் கலவரங்கள் ஏற்பட்டு  மறையும். சனியை ராகு பார்ப்பதால் அரசில் குழப்ப நிலைமையும் பல புதிய மாற்றம் ஏற்படுதலும் நிகழும். சாதாரண  மக்களையும் செல்வந்தனாக்கிவிடும். நாட்டில் பல இடங்களில் தெய்வகாரியம், பூஜைகள் விசேஷமாக நடக்கும்.  தொழில்துறையில் தமிழ்நாடு செழித்து வளரும். அரசாங்கத்திற்கு தலைவலியாக இருந்த பிரச்னைகள் அனைத்தும்  அடங்கிவிடும். காவல்துறை மேலும் வலிமையும் முன்னேற்றமும் வசதிகளும் பெற்று நல்ல புகழ் அடையும்.  உயர்பதவிகளில் இருக்கும் பெண்களுக்கு இது யோகமான நேரம்.  உலகில் பல நாடுகள் மழை வெள்ளத்தால் பாதிப்பு  அடையும். இயற்கை சீற்றம் – பூகம்ப பாதிப்பு ஏற்படும். பல நாடுகளில் புரட்சி வெடிக்கலாம். மேலை நாடுகளில் உள்ள  தலைவர்களுக்கு தலைவலியான நேரம். தேவை இல்லாமல் சண்டை சச்சரவு வரலாம். தீவிரவாதத்தால் பிரச்னைகள்  வந்தாலும் அடங்கிவிடும். தங்கம் விலை மேலும் அதிரடியாக உயரும்

தோத்திரங்கள்
சனி த்யான ஸ்லோகம்
நீலாஞ்சன ஸமாபாஸம் ரவிபுத்ரம் யமாக்ரஜம்
ச்சாயா மார்த்தாண்ட ஸம்பூதம் தம் நமாமி ஸநைச்சரம்!
காயத்ரி
ஓம் காகத்வஜாய வித்மஹே கட்க ஹஸ்தாய தீமஹி தந்நோ மந்த ப்ரசோதயாத்.!

தமிழ் துதி
சங்கடம் தீர்க்கும் சனிபகவானே மங்களம் பொங்க மனம் வைத்தருள்வாய்
சச்சரவின்றி சனீஸ்வர தேவே இச்சகம் வாழ இன்னருள் தா! தா!
ஏழரை நாட்டு சனி என்றால் என்ன?
சனி பகவான் ஒரு ராசியில் இரண்டரை ஆண்டுகள் சஞ்சரிப்பார். ஒருவரின் ராசியிலிருந்து பன்னிரண்டாம் ராசியில் சனி பகவான் சஞ்சரிக்கும்போது விரைய சனி அல்லது சிரசு சனி என்றும், ராசியில் அதாவது 1ஆம் வீட்டில் சஞ்சரிக்கும்போது ஜென்ம சனி என்றும், இரண்டாம் ராசியில் சஞ்சரிக்கும்போது பாத சனி அல்லது வாக்கு சனி என்றும் பெயர். இந்த நிலை முப்பது வருடங்களுக்கு ஒரு முறை ஏற்படும். முதல் சுற்று அதாவது ராசியை சனி பகவான் கடந்து செல்வது சங்கடங்களையும் இடர்களையும் தரும். இந்த ஏழரை ஆண்டு காலத்தை மங்கு சனி என்பர். இரண்டாவது சுற்று பொங்கும் சனி என்பதாகும். இதில் கடினமான பலன்கள் குறைந்து புதிய முன்னேற்றத்திற்கு அடித்தளம் ஏற்படும். மூன்றாவது சுற்று மரண சனி எனப்படும். இந்தக் காலகட்டத்தில் சில கண்டங்கள் ஏற்பட்டு விலகும். பொதுவாக ஏழரை சனி காலத்தில் நமக்கு சனி பகவான் கஷ்டங்களைக் கொடுத்து சரியான பாதையில் செல்ல நம்மை பக்குவப்படுத்துகிறார். எப்படி கல்லை செதுக்கி செதுக்கி சிற்பமாக ஆக்குகிறார்களோ, அதேபோன்று நம்மை கஷ்டங்களுக்கு உட்படுத்தி சமுதாயத்திற்குப் பயன்படக்கூடிய வகையில் சனி மாற்றுகிறார் என்றால் மிகையாகாது.
இதேபோன்று ராசிக்கு நான்காம் இடத்தில் சஞ்சரிக்கும்போது அர்தாஷ்டம சனி என்றும், ராசிக்கு எட்டாம் இடத்தில் சஞ்சரிக்கும்போது அஷ்டம சனி என்றும் பெயர்.
கைரேகையில் சனிபகவான்:
சனி மேடு: உள்ளங்கையில் சனி மேடு(சனி விரலான நடு விரலுக்கு கீழ் உள்ள பகுதி) பெரிதாக, நேர்கோடுகள் நன்றாக அமைந்திருந்தால் சிறப்பு. இதனால் கடமையுணர்ச்சி, திட சிந்தனை, பொறுப்புணர்வு ஆகியவை வளரும்.
ஜாதகத்தில் சனீஸ்வரர் பலம் பொருந்தியிருந்தால் என்ன பலன்:
சனி பகவான் கர்மகாரகர் என்று அழைக்கப்படுகிறார். இவரின் பலம் பெற்றவர்கள் அதிகம் உழைக்க வேண்டிவரும். எந்த அளவிற்குப் பாடுபடுகிறார்களோ அந்த அளவிற்குப் பயன் கிடைக்கும். உழைப்புக்குப் பின் வாங்கக் கூடாது. சமுதாய நலப் பணிகளிலும் ஈடுபடலாம். அதனால் பெயரும், புகழும் உயரும். வேதாந்த ஞானம் உண்டாகும். இரக்க சுபாவம் அதிகரிக்கும். மேலும் சனிபகவான் கஷ்டங்களைத் தாங்கும் சக்தியைக் கொடுப்பார். இவர் செவ்வாய்,ராகு, கேது பகவான்களால் பாதிக்கப்படாதவரை மாறாத தன்னிலை உள்ளவர்.
சனி பகவானின் பலம் கூடியிருப்பவர்கள் பஞ்ச பூத தத்துவங்களில் வாயு தத்துவத்தின் மூலம் நன்மைகளைப் பெறுவார்கள். பெருக்கவும், இளைக்கவும் கூடிய உடலமைப்பைப் பெற்றவர்கள் இவர்கள். சாதாரண விஷயத்திற்குக்கூட அதிகம் கோபப்படுவார்கள். செய்யும் தொழிலில் ஆழ்ந்த ஈடுபாட்டைக் கொண்டிருப்பார்கள். இங்குமங்கும் அலைந்து திரிவார்கள். எல்லோரிடமும் சகஜமாகப் பழகுவார்கள். நல்ல தோற்ற அமைப்பு பெற்றிருப்பார்கள். அதேநேரம் மந்தனாகிய சனி பகவானின் நல்லதோர் ஆதிக்கத்தைக் கொண்ட ஜாதகருக்கு, யோகம் தாமதித்தே ஏற்படும்.
 
பெயர்சியின் பின்னதான சனியின் ராசி நிலைகள்
ஒவ்வொரு ராசிக்குமான விரிவான பலன்களை தொடர்ந்து வரும் நாட்களில் காணலாம்.

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>


சனி, 25 அக்டோபர், 2014

பெண்ணொருவரை ஆட்டோவில் அழைத்துச் சென்று பாலியல்

வீடு செல்­வ­தற்­காக பஸ் நிலை­யத்தில் நின்ற பெண் ஒரு­வரை முச்­சக்­க­ர­வண்­டியில் வந்த அயல் வீட்டைச் சேர்ந்த நப­ரொ­ருவர் வீட்டில் விடு­வ­தாகக் கூறி பாழ­டைந்த இடம் ஒன்­றிற்கு அழைத்துச் சென்று பல­வந்­த­மாக பாலியல் குற்றம் புரிந்த பின் கைவிட்டுச் சென்ற சம்­பவமொன்று பற்றி கண்டி பொலிஸ் தலை­மை­யகம் தெரி­வித்­தது. கண்டி குட்ஷெட் பஸ் நிலை­யத்தில்
 வீடு செல்­வ­தற்­காக நின்று கொண்­டி­ருந்த 28 வயது பெண் ஒரு­வரை அயல்­வா­சி­யான நபர் ஒருவர் முச்­சக்­கர வண்­டியை எடுத்து வந்து பெண்­ண­ருகில் நிறுத்தி, தான் வீடு செல்­வ­தா­கவும் பெண்­ணையும் வீட்டில் விடு­வ­தா­கவும் கூற வண்­டியில் ஏற்றிக் கொண்டு சென்ற நபர் வழியில் பாழ­டைந்த இட­மொன்றில் பெண்ணை
 இறக்கி இழுத்துச் சென்று பல­வந்­த­மாக பாலியல் குற்றம் புரிந்த பின்னர் தன்னை அவ்­வி­டத்தில் கைவிட்டுச் சென்­ற­தாக பாதிக்­கப்­பட்ட பெண் கண்டி பொலிஸ் நிலை­யத்தில் முறைப்­பாடு செய்­துள்ளார். இத­னை­ய­டுத்து பொலிஸார் பாதிக்­கப்­பட்ட பெண்ணை வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­தித்­து­விட்டு விசா­ர­ணை­யினை மேற்­கொண்­டனர். இதன் ­போது சந்­தேக நபர் தலை­ம­றை­வா­கி­யுள்­ள­தாக பொலிஸாருக்கு தெரிய வந்துள்ளது. பொலிஸார் தொடர்ந்து விசார ணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

திங்கள், 20 அக்டோபர், 2014

இலங்கைப்போக்குவரத்துச் சபை பேருந்துகள் மீது கல் வீசி தாக்குதல்!

மீண்டும் இலங்கைப்போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பேருந்துகள் மீது கல் வீசி தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. வவுனியாவில் இருந்து பருத்தித்துறை நோக்கிச் சென்று கொண்டிருந்த இரண்டு பேரூந்துகள் மீது நேற்று இரவும் வடமராட்சியின் முள்ளிப்பகுதியில் வைத்து இனந்தெரியாத நபர்களால் கல்வீசி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வவுனியாவில் இருந்து பருத்தித்துறை நோக்கி வந்து கொண்டிருந்த பேருந்திற்கு மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்கள் ஆட்கள் நடமாட்டமற்ற முள்ளிப்பகுதியில் வைத்து கல்வீசி தாக்கியுள்ளனர். இதனால் பேருந்தின் கண்ணாடிகள் சேதமடைந்துள்ளது. அத்துடன் பேருந்தைத்தொடர்ந்து வந்தும் அவர்கள்; தாக்கியுள்ளனர்.
குறித்த சம்பவத்திற்கு முன்னரும் வௌ;வேறான மூன்று சந்தர்ப்பங்களினில் அரச பேருந்துகள் கல்வீசி தாக்கப்பட்டிருந்தது. இதனால் சாரதி மற்றும் நடத்துநரும் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

ஞாயிறு, 19 அக்டோபர், 2014

வெளிநாட்டு பயணிகளுக்கு தடை விதிப்பு கண்டனம்!

 வடமாகாணத்துக்கு செல்லும் வெளிநாட்டு பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் பிரித்தானியா கண்டனம் தெரிவித்துள்ளது.
பிரித்தானியாவின் சிறிலங்காவுக்கான உயர்ஸ்தானிகர் ஜோன் ரென்கின் இது தொடர்பில் கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
யுத்தம் நிறைவடைந்த பின்னர் 2011ம் ஆண்டு வடக்கிற்கு செல்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்ட போது,அதனை பிரித்தானியா வரவேற்றிருந்தது.
இது பிரித்தானியா உள்ளிட்ட சர்வதேச நாடுகளுக்கு, யுத்தம் நிறைவடைந்த பின்னரான நல்லிணக்க நடவடிக்கை தொடர்பான சாதகமான சமிஞ்கையை அனுப்பி இருந்தது.
எனினும் மீண்டும் இப்போது இந்த தடை அமுலாக்கப்பட்டுள்ளமையானது, வெளிநாடுகளுக்கு சிறிலங்கா தொடர்பில் பிழையான சமிஞ்கையை அனுப்பி இருக்கிறது.
இந்த நிலையில் குறித்த தடையை நீக்குவதற்கு சிறிலங்கா அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

புதன், 15 அக்டோபர், 2014

வவுனியா கைத்தொழில் பேட்டையில் தீ விபத்து

வவுனியா ஸ்ரீநகர் கைத்தொழில் பேட்டையிலுள்ள உருக்குவேலை கடையொன்றில் நேற்று பிற்பகல் தீபரவியுள்ளது.
தீயினால் கடையிலிருந்து பொருட்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றார்.
கடை ஊழியர்கள் மதிப போசனத்திற்காக வெளியில் சென்றிருந்தபோதே தீ பரவியுள்ளதுடன், பல இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் தீயினால் சேதமடைந்துள்ளன.
மின்சார ஒழுக்கின் காரணமாகவே தீ பற்றியுள்ளது என ஆரம்பக்கட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

செவ்வாய், 14 அக்டோபர், 2014

கிணற்றை தோண்டிய போது மண் சரிந்து குடும்பஸ்தர் பலி!

 வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் மீறாவோடை தமிழ் கிராம சேவகர் பிரிவில் புதிதாக அமைக்கப்பட்ட கிணற்றை தோண்டிக் கொண்டு இருக்கும் போது மண் சரிந்து விழுந்ததில் குடும்பஸ்தர் ஒருவர் உயிர் இழந்துள்ளதுடன் மற்றுமொருவர் காப்பாற்றப்பட்ட சம்பவம் ஞாயிற்றுக்கிழமை மாலை 06.00 மணியளவில் இடம் பெற்றுள்ளது.
 மீறாவோடை தமிழ் கிராம சேவகர் பிரிவில் பரிகாரியார் வீதியில் வசித்த வந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான வேலாயுதம் முத்துலிங்கம் (வயது – 42) என்பவரே உயிர் இழந்தவர் என்று அடையாளங் காணப்பட்டுள்ளது. இவருக்கு உதவியாக கிணறு தோண்டுவதற்கு நின்ற அதே வீதியைச் சேர்ந்த கணபதிபிள்ளை விஜயகுமார் (வயது – 32) என்பவர் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
 மரணித்தவரின் வீட்டில் புதிதாக அமைக்கப்பட்ட கிணற்றில் இருந்து மண்னை அகற்றிக் கொண்டு இருக்கும் போது மண் சரிந்து கிணற்று மடுவுக்குள் இருவரையும் மூடிய வேலை பொது மக்களின் உதவியுடன் கணபதிபிள்ளை விஜயகுமார் காப்பாற்றப்பட்ட போதும் வேலாயுதம் முத்துலிங்கம் என்பவரின் உயிரைக் காப்பாற்ற முடியாமல் போயுள்ளது. இச் சம்பவம் தொடர்பாக வாழைச்சேனை பொலிஸார் விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர். 
இங்குஅழுத்தவும் மற்றைய செய்திகள் >>>

சனி, 11 அக்டோபர், 2014

இரு சிறுமிகளை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய இளைஞர் கைது

 திருகோணமலை - குச்சவெளி - வடலிக்குளம் பகுதியில் இரண்டு சிறுமிகளை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கூறப்படும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
12 மற்றும் 13 வயது சிறுமிகளை அழைத்துச் சென்று துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய 18 வயதான சந்தேகநபர் ஒருவரே இன்று காலை இவ்வாறு கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு சிறுமிகளிடமும் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் சுட்டிக்காட்டினர்.
இதனையடுத்து சட்ட மருத்துவ பரிசோதனைக்காக சிறுமிகளை திருகோணமலை சட்ட வைத்திய அதிகாரியிடம் ஒப்படைக்கவுள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபரை திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குச்சவெளி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

 
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

ஞாயிறு, 5 அக்டோபர், 2014

சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியவர் விளக்கமறியலில்

திருகோணமலை புல்மோட்டை பொலிஸ் பிரிவிலுள்ள ஊறாவெவ பகுதியில் பாடசாலை மாணவியை தூஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
13 வயதான குறித்த மாணவி பாடசாலையில் இருந்து வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது 70 வயதான சந்தேகபரினால் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் இன்று திருகோணமலை பதில் நீதவான் திருச் செந்தில்நாதன் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, எதிர்வரும் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>