siruppiddy

வெள்ளி, 20 பிப்ரவரி, 2015

இருவர் வீதி விபத்தில் படுகாயம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வந்தாறுமூலை பிரதான வீதியில் நேற்று வியாழக்கிழமை இரவு இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த இரண்டு இளைஞர்கள், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர். 
வந்தாறுமூலையை சேர்ந்த மகேந்திரன் நர்மதன் (வயது 25) மற்றும் கோபிந்தன் தனபதி (வயது 26) ஆகியோரே இவ்விபத்தில் படுகாயமடைந்துள்ளனர். 
செங்கலடி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள இவர்கள் இருவரும், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 
மேற்படி இரு இளைஞர்களும் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த போது, வீதியில் வந்த வாகனமொன்று மோதி இவ்விபத்து சம்பவித்துள்ளது. 
இது தொடர்பாக ஏறாவூர் பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

வெள்ளி, 6 பிப்ரவரி, 2015

செல்போன் வெடித்து வாலிபர் படுகாயம்!!

பீகார் மாநிலத்தை சேர்ந்த பொண்டகாவின் மகன் சீதாராம் (வயது 18). கொத்தனாரான சீதாராம், கர்நாடக மாநிலம் மைசூருவில் தனது தந்தையுடன் தங்கியிருந்து, தனியார் நிறுவனம் நடத்தி வரும் சாலைப் பணிகளில் ஈடுபட்டு வந்தார்.
நேற்று முன்தினம் பணி முடித்து வீட்டுக்கு வந்த சீதாராம், தனது செல்போனை சார்ஜ் ஏற்றுவதற்காக சார்ஜரில் பொருத்தி மின் இணைப்பு கொடுத்திருந்தார். சிறிது நேரத்தில் அவரது நண்பரிடமிருந்து போன் வந்தது.உடனே செல்போனை எடுத்த அவர் மின் இணைப்பை துண்டிக்காமல் சார்ஜ் ஏறும் நிலையிலேயே பேசிக்கொண்டு இருந்தார். அப்போது திடீரென அவரது செல்போன் வெடித்து சிதறியது.
இந்த சம்பவத்தில் அவரது மூக்கு, நெற்றி, கன்னம் என முகம் முழுவதும் பலத்த காயம் ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த பொண்டகா, சீதாராமை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

ஞாயிறு, 1 பிப்ரவரி, 2015

முச்சக்கர வண்டி விபத்து! ஸ்தலத்திலே இருவர் பலி!!

 யாழில்.நீதிமன்றத்துக்கு அருகாமையில் இன்று காலை 7 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் சம்பவ இடத்திலேயே இருவர் உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்தில் பொலநறுவையை சேர்ந்த பிரசந்த (வயது 28), நுவரேலியாவைச் சேர்ந்த றொசாந் (வயது 35) ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.
யாழ்ப்பாணம் நோக்கி வேகமாக வந்த
 தனியார் பஸ் வேகக் கட்டுப்பாட்டை இழந்து முச்சக்கர வண்டியின் பின்புறமாக மோதியது.
இதனால் முச்சக்கர வண்டியில் பயணம் செய்தவரும் சாரதியும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>