siruppiddy

வியாழன், 25 ஜூன், 2015

தமிழர்களுக்குள்ள கனடியப் பிரஜைகளான தடைகள் ???

கனடாவிற்கு முன்பாகவே அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தில் இரட்டைப் பிரஜைகளிற்கான சட்டம் ஏற்கனவே இருக்கின்றது. அவுஸ்திரேலியாவும் ஒரு சட்டத்தை இப்போது கொண்டு வந்திருக்கிறது.
அமெரிக்கா சில தினங்களிற்கு முன்னர் வெளியிட்ட அறிக்கை மிகவும் பாராதுரமானது. கனடியப் பிரஜைகளாகவுள்ள தமிழர்களை இது தேசத்துரோகம் என்ற வகையிலும் பாதிக்கலாம்.
மேற்குலகின் பிரஜைகளான தமிழர்கள் இதனை எவ்வாறு கையாள வேண்டும் என்பது பற்றி இந்தவார நிஜத்தின் தேடல் நிகழ்வில் ஆய்வாளர் சுரேஸ் தர்மா தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

புதன், 24 ஜூன், 2015

இளவயதினரிடம் அதிகரிக்கும் இருதய நோய்கள்

 இலங்கை உட்பட்ட தென்னாசிய நாடுகளில் வசிப்போர் மத்தியில் இளம் வயதிலேயே இருதய நோய்கள் ஏற்படுவதற்கான உயர் அச்சநிலை தோன்றியுள்ளது.
ஸ்டான்டர்ட் சௌத் ஏசியன் ட்ரான்ஸ்லேசனல் ஹாட் இனிசியேட்டிவ் என்ற அமைப்பு தமது அறிக்கை ஒன்றில் இந்த அச்சத்தை வெளியிட்டுள்ளது.
பெண்களை காட்டிலும் ஆண்களுக்கே இந்த நோய்த்தாக்கம் அதிகமாக ஏற்படும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இலங்கை, இந்தியா, பங்களாதேஸ், பாகிஸ்தான்,
 நேபாளம், பூட்டான் மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகளில் பொதுவாக ஏற்படும் இருதய நோய்களை காட்டிலும் நான்கு மடங்கு இருதய நோய்கள் ஏற்படு;ம் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

50 வயதுக்கு குறைந்தவர்களுக்கே இந்த அச்சம் தோன்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் தென்னாசியாவில் இருதய நோய்கள் ஏற்படுவதற்காக 5 காரணங்கள் கூறப்பட்டுள்ளன.

1.சிறுவயதிலேயே தேவையற்ற கொழுப்பு ( bad cholesterol ) கொழுப்பார்ந்த புரதங்கள் அதிகளவில் காணப்படுகிறது.

2.அமினோஅசிட்டின் அளவு அதிகளவில் காணப்படுகிறது.
3.இருதயநோய் மற்றும்; சலரோகம் ஆகியவற்றை ஏற்படுத்தக்கூடிய புரதத்தின் அளவு அதிகளவல் காணப்படுதல்.
4. Metabolic Syndrome ( அனுசேப குணங்குறிகள்)
5. வயிற்றில் படியும் கொழுப்பினால் ஏற்படும் உடல் பருமன் போன்றவையே அந்த 5 காரணங்களாகும் என்று ஸ்டான்டர்ட் சௌத் ஏசியன் ட்ரான்ஸ்லேசனல் ஹாட் இனிசியேட்டிவ் அமைப்பு தெரிவித்துள்ளது.

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>


ஞாயிறு, 14 ஜூன், 2015

உயர்நீதிமன்றினால்புலிகள் இயக்க சந்தேகநபர்கள் மூவர் விடுதலை!

.பயங்கரவாத தடைப்பிரிவுப் பொலிசாரினால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த விடுதலைப் புலிச் சந்தேகநபர்கள் மூவர், நேற்றுமுன்தினம் கொழும்பு உயர் நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டனர்.
விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்து ஆயுதப் பயிற்சி பெற்று விடுதலைப் புலிகளின் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றியதாக பயங்கரவாத தடைப்பிரிவுப் பொலிசாரால் கைது செய்யப்பட்ட யாழ்ப்பாணம் நல்லூரை பிறப்பிடமாகக் கொண்ட நடராஜா லவன், கொக்குவிலை பிறப்பிடமாகக் கொண்ட வைரமுத்து கனகரட்னம்,
 விடுதலைப் புலிகளின ஆயுதக் களஞ்சியப் பொறுப்பாளர்களில் ஒருவராக கடமையாற்றியதாக 2009ம் ஆண்டு ஆடி மாதம் பயங்கரவாத தடைப்பிரிவுப் பொலிசாரினால் செட்டிக்குளத்தில் வைத்து கைது செய்யப்பட்ட யோசப் ஜேம்ஸ் ஆகிய மூன்று சந்தேக நபர்களுமே விடுதலை செய்யப்பட்டவர்களாவர்.
பயங்கரவாதத தடைப்பிரிவுப் பொலிசாரினால் கைது செய்யப்பட்ட இந்த சந்தேக நபர்கள் பொலிசாரினால் தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யபட்ட பின்னர் இவர்களது விசாரணைக் கோவை சட்டமா அதிபருக்கு பாரப்படுத்தப்பட்டிருந்த நிலையில் இந்த வழக்குகள் நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது.
இவ்வழக்கு விசாரணையின் போது சந்தேக நபர்கள் சார்பில் ஆஜராகிய சிரேஸ்ட சட்டத்தரணி கே.வி. தவராசா தனது வாதத்தில், பயங்கரவாத தடைப்பிரிவுப் பொலிசாரினால் கைது செய்யப்பட்ட இந்த சந்தேக நபர்கள் குற்ற ஓப்புதல் வாக்குமூலத்தை பொலிசாருக்கு வழங்கவில்லையெனவும் மேலும் வேறு எந்தச் சான்றுகளும் இல்லாத நிலையில் பொலிசாரினால் சந்தேக 
நபர்களது விசாரணைக் கோவை சட்டமா அதிபருக்கு மேலதிக சட்ட நடவடிக்கைக்காக அனுப்பப்பட்டு பல வருடங்கள் கடந்து விட்டன. சான்று காணப்படின் வழக்குத் தாக்கல் செய்யவும், 
இல்லையெனில் விடுதலை செய்யப்பட வேண்டும், ஆனால் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.
எனவே சட்டமா அதிபர் வழக்குத் தாக்கல் செய்கின்றாரா? அல்லது விடுதலை செய்வதா என்பதை பொலிசார் சட்டமா அதிபர்
 திணைக்களத்திடமிருந்து அறியப் பெற்று, இந்த நீதிமன்றிற்கு அறிவிக்கும்படி
 பொலிசாருக்கு உத்தரவிடும்படி நீதிமன்றத்தை வேண்டிக் கொண்டதையடுத்து, மீண்டும் இந்த வழக்கு நேற்றுமுன்தினம் விசாரணைக்கு வந்த வேளையில் மூன்று சந்தேக 
நபர்களுக்கும் எதிராக வழக்குத் தாக்கல் செய்ய போதிய சான்றுகள் இல்லாததால், மூன்று சந்தேக நபர்களையும் விடுதலை 
செய்யும்படி சட்டமா அதிபர் எழுத்து மூலம் அறிவித்துள்ளதாக பயங்கரவாத தடைப்பிரிவுப் பொலிசார் நீதிமன்றிற்கு அறிக்கை தாக்கல் செய்ததையடுத்து மூன்று சந்தேக நபர்களும் விடுதலை செய்யப்பட்டனர்
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

புதன், 10 ஜூன், 2015

மரண அறிவித்தல் திரு பொன்னையா ஜெயசந்திரன்

தோற்றம் : 18 ஏப்ரல் 1943 — மறைவு : 6 யூன் 2015
(முன்னாள் பலநோக்கு கூட்டுறவு சங்க முகாமையாளர்)
யாழ். அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னையா ஜெயசந்திரன் அவர்கள் 06-06-2015 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மாதர் பொன்னையா கண்மணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
வசந்தலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
சதீஸ்வரன்(கனடா), கஜேந்திரன்(பிரான்ஸ்), பிரதீப்(Ceylinco- இலங்கை), சைலேந்திரன்(சுவிஸ்), நிமலேந்திரன்(பிரான்ஸ்), சரண்யா(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற தங்கராசா, தங்கமலர், காலஞ்சென்றவர்களான ஜெயராசா, புஸ்பமலர், மற்றும் பேரின்பராசா, புஸ்பராசா, காந்தராசா, ரவீந்திரநாதன், பிறேமச்சந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பிரபா, விஜிதா, லாவண்யா, நிதிகரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
வசந்தலாராணி, வசந்தகுமாரி, வசந்தரூபி, வனஜா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஜெறோமியா, கர்ஷாத், மானிஷா, சயின், ஐஸ்வரணி, நிஜானா, நிதுஷன், தமிழ்நிலா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 10-06-2015 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் அச்சுவேலி முழக்கன் மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
கண்ணீர் அஞ்சலி அன்னாரின் ஆத்மா சாந்தி அடய
 யாழ். அச்சுவேலி பலநோக்கு கூட்டுறவு சங்க ஊளியர்களும் 
இந்த நவக்கிரி .கொம் நிலாவரை .கொம் 
இணையங்களும் இறைவனை பிரத்திக்கின்றது 
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
பிரதீப் — இலங்கை
தொலைபேசி: +94212058513
செல்லிடப்பேசி: +94772247738
சதீஸ்வரன் — கனடா
செல்லிடப்பேசி: +16477621257
கஜேந்திரன் — பிரான்ஸ்
தொலைபேசி: +33134723306
சைலேந்திரன் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41792994562
நிமலேந்திரன் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33652521728
சரண்யா — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447580333033

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

செவ்வாய், 9 ஜூன், 2015

சட்டவிரோதமாக கள்ளக் கரண்ட் எடுத்தவர்கள் கைது.

யாழ். அச்வேலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் சட்டவிரோத மின்சாரம் பெற்ற மூவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை 07.06.15.கைதுசெய்யப்பட்டுள்ளதாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர்.
 புத்தூர், கலைமதி பகுதியில் அமைந்துள்ள கட்டட பொருட்கள் விற்பனை செய்யும் கடைக்காரர் தனது மின்மானியில் கம்பியை செருகி மின்மானியின் வேகத்தைக் குறைத்த குற்றச்சாட்டிலும் வல்லைப் பகுதியில் சட்டவிரோதமாக மின்சாரம் பெற்ற இருவருமாக மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இலங்கை மின்சார சபையின் புலனாய்வு அதிகாரிகளுடன் அச்சுவேலி பொலிஸார் இணைந்து நடத்திய சோதனை நடவடிக்கையில் இவர்கள் கைதுசெய்யப்பட்டனர் 
இங்குஅழுத்தவும் மற்றைய செய்திகள் >>>

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>




திங்கள், 8 ஜூன், 2015

வீதியால் சென்றவர் மயங்கி வீழ்ந்து மரணம்

யாழ். நவக்கிரி புத்தூர் பகுதியில் மேசன் தொழிலுக்கு சென்றுவிட்டு திரும்பி வந்து கொண்டிருந்த தொழிலாளியொருவர் மயங்கிவிழுந்து உயிரிழந்த சம்பவம் நடந்துள்ளது.  இரவு நவக்கிரி பகுதியில் நடந்த இந்த சம்பவத்தில் இராமன் சந்துரு (54) என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார்.
வவுனியா வேப்பங்குளத்தை சேர்ந்த இவர், நவக்கிரி பகுதியில் தங்கியிருந்து மேசன் தொழில் செய்து வந்திருக்கிறார். வேலை முடிந்து, துவிச்சக்கரவண்டியில் இருப்பிடம் திரும்பிக் கொண்டிருந்த சமயத்தில், திடீரென மயக்கம் போட்டு விழுந்துள்ளார். உடனடியாக அச்சுவேலி வைத்தியசாலைக்கு எடுத்து சென்றபோதும், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டார் என்பது தெரிய வந்தது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

செவ்வாய், 2 ஜூன், 2015

பிறந்த நாள் வாழ்த்து திரு .தேவராசா சுதாகரன் 02.06.15.

யாழ்  இராசாவின் தோட்டத்தைப் பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகவும்கொண்ட திரு :.தேவராசா சுதாகரன் (சுதா)அவரின்  பிறந்த நாள் இன்று. 02.06.2015 சூரிச்மாநிலத்தில் பிறந்த நாளை 
தனது இல்லத்தில்  சிறப்பாக குடும்ப உறவுகளுடன் கொண்டாடுகின்றனர்
 .இவரை  அன்பு மனைவி மகள் மகன் அக்கா அத்தான் மருமகள்
 பெறாமக்கள்  மாமா மாமி மார் பெரியப்பா ,பெரியம்மா மார் சித்தப்பா சித்தி மார் அண்ணா அண்ணி  தம்பி மார் சகோதரிகள்
 மச்சான் மச்சாள் மார் உற்றார் உறவினர்கள் நண்பர்களும் இவரை  நல்லைகந்தன் இறைஅருள் பெற்று சகல செல்வங்களும் பெற்று; சீரும் சிறப்புடன் பல்லாண்டு காலம் நீடுளி வாழ வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து
            நவக்கிரி .http://lovithan.blogspot.ch
                           நவற்கிரி .கொம் நிலாவரை.கொம் நவக்கிரி-.கொம்    இணையங்களும்  வாழ்த்துகின்றனர்
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>