siruppiddy

செவ்வாய், 9 ஜூன், 2015

சட்டவிரோதமாக கள்ளக் கரண்ட் எடுத்தவர்கள் கைது.

யாழ். அச்வேலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் சட்டவிரோத மின்சாரம் பெற்ற மூவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை 07.06.15.கைதுசெய்யப்பட்டுள்ளதாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர்.
 புத்தூர், கலைமதி பகுதியில் அமைந்துள்ள கட்டட பொருட்கள் விற்பனை செய்யும் கடைக்காரர் தனது மின்மானியில் கம்பியை செருகி மின்மானியின் வேகத்தைக் குறைத்த குற்றச்சாட்டிலும் வல்லைப் பகுதியில் சட்டவிரோதமாக மின்சாரம் பெற்ற இருவருமாக மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இலங்கை மின்சார சபையின் புலனாய்வு அதிகாரிகளுடன் அச்சுவேலி பொலிஸார் இணைந்து நடத்திய சோதனை நடவடிக்கையில் இவர்கள் கைதுசெய்யப்பட்டனர் 
இங்குஅழுத்தவும் மற்றைய செய்திகள் >>>

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>




0 கருத்துகள்:

கருத்துரையிடுக