siruppiddy

வெள்ளி, 29 ஆகஸ்ட், 2014

நவக்கிரி புத்தூரில் கோர விபத்து. கர்ப்பிணி பெண் பலி

.யாழ் நவக்கிரி புத்தூர் சரஸ்வதி வீதியில் அகால மரணம் அடைந்தார் இடம்பெற்ற கோர விபத்தினை அடுத்து மகேஸ்வரி நிதியத்திற்கு சொந்தமான டிப்பர் வாகனம் ஊர் மக்களால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.


நவக்கிரி புத்தூர் சரஸ்வதி வீதியில்.24.08.14. இன்று காலை 10.45 மணியளவில் இடம்பெற்ற கோரவிபத்தில் 3மாத கர்ப்பிணி பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே  மரணம் அடைந்துள்ளார். சரஸ்வதி வீதியை சேர்ந்த கவிந்திரன் சுபாஜினி வயது 23 என்பவரே மரணம் அடைந்துள்ளார்.

சம்பவத்தையடுத்து அப்பகுதி மக்கள் குறித்த டிப்பர் வாகனத்தை தீக்கிரையாக்கியுள்ளனர். குறித்த டிப்பர் வாகனம் மகேஸ்வரி நிதியத்திற்கு சொந்தமானது என்று கூறப்படுகின்றது. சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


இங்குஅழுத்தவும் மற்றைய செய்திகள்

ஞாயிறு, 24 ஆகஸ்ட், 2014

இலங்கையர்அலைபேசியில் தங்கம் :

   11 இலட்சத்து 55 ஆயிரம் ரூபாய் பெறுமதியான இரண்டு தங்க கட்டிகளை, இரண்டு அலைபேசிகளில் மறைத்து இந்தியாவின் சென்னை நகரத்திற்கு கடத்த முயன்ற இலங்கையர் ஒருவரை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்துள்ளதாக இலங்கை சுங்கத் திணைக்களத்தின் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார். கந்தானை பிரதேசத்தை சேர்ந்த 35 வயதானவர் ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
 

சனி, 23 ஆகஸ்ட், 2014

மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் புகையிரதம் மோதி ஒருவர் பலி

கொழும்பில் இருந்து புத்தளம் நோக்கி சென்ற புகையிரத்துடன் சனிக்கிழமை மோட்டார் சைக்கிள் ஒன்று மோதியதில், மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் பலியாகியுள்ளதாக முந்தல் பொலிஸார் தெரிவித்தனர். குறித்த மோட்டார் சைக்கிள், மதுரங்குளி கரிக்கட்டை பிரதேசத்தில் உள்ள பாதுகாப்பற்ற புகையிரதக் கடவையை கடக்க முற்பட்ட வேளையிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. இதன்போது மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் 22 மீற்றர் தூரத்துக்கும் அவர் பயணித்த மோட்டார் சைக்கிள் 174 மீற்றருக்கும் அப்பால் இழுத்துச் செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். மதுரங்குளி விருதோடைக் கிராமத்தைச் சேர்ந்த முகம்மது நிஜாம் முகம்மது முபாஸ் (வயது 25) என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்விபத்தில் உயிரிழந்தவராவார். உயிரிழந்தவரின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக, புத்தளம் ஆதார வைத்தியசாலைக்கு அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முந்தல் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 இங்குஅழுத்தவும் மற்றைய செய்திகள்