siruppiddy

வியாழன், 30 ஜூன், 2016

புத்தூர் மீசாலை வீதி விபத்தில் இளைஞர் பலி!

யாழ்ப்பாணம் மீசாலை புத்தூர் வீதியில் வேம்பிராய் சந்திக்கு அருகாமையில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3.50 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
தனியார் நிறுவனம் ஒன்றுக்குச் சொந்தமான மோட்டார் சைக்கிள்களை ஏற்றிவந்த லொறி ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி வீதி ஓரத்தில் கதைத்துக் கொண்டிருந்த இளைஞர் மீது
 மோதியுள்ளது.
சம்பவத்தில் மட்டுவிலைச் சேர்ந்த 36 வயதுடைய பேரின்பராசா ஸ்ரீரஞ்சன் என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார்.
லொறியின் சாரதியும், நடத்துநரும் காயடைந்த நிலையில், சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொடிகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

புதன், 22 ஜூன், 2016

நிந்தவூரில்சிகிச்சைக்கு சென்ற சிறுமி துஷ்ப்பிரயோகம் வைத்தியர் கைது

அம்பாறை நிந்தவூரில் சிறுமியொருவரை துஷ்பிரயோகத்திற்குட்படுத்தியதாக வைத்தியர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த வைத்தியர் 52 வயதுடையவர் எனவும் பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.
சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டிற்கமையவே நேற்று (20) இரவு சந்தேகநபரை கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
சுகயீனம் காரணமாக வைத்தியரிடம் சிகிச்சைக்காக சென்ற போதே குறித்த சிறுமி துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸாரின் முதற்கட்ட விசாரணைகளிலிருந்து 
தெரியவந்துள்ளது.
பாதிக்கப்பட்ட சிறுமி 8 வயதுடையர் எனவும் சிறுமி அம்பாறை வைத்தியசாலையில் வைத்திய பரிசோதனைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.சந்தேகநபர் சம்மாந்துறை பொலிஸாரினால் இன்று (21) நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளார்
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

புதன், 15 ஜூன், 2016

யாழில் வங்கி ஒன்றில் நடந்த உண்மைச் சம்பவம் இது


யாழ். நகரில் பிரபல பெண்கள் கல்லூரி ஒன்றில் கற்பிக்கின்ற ஆசிரியை ஒருவர் அந்தக் கிளையில் கணக்கினைப் பேணி வந்துள்ளார். அவரது மாதந்த சம்பளமும் அந்தக் கணக்குக்கே வருவது
 வழமை.
அடிக்கடி பணத்தைப் பெறும் வழமை அவருக்கு இல்லாத போதிலும் மாதந்தோறும் மீதியைச் சரிபார்க்கத் தவறுவதில்லை.
வழக்கம் போலவே மீதியைச் சரிபார்க்கச் சென்ற ஆசிரியைக்கு அதிர்ச்சி.
“தோல் இருக்கச் சுளை விழுங்கப்பட்டது” போல வங்கிப் புத்தகமும் தன்னியக்கப் பணப்பரிமாற்ற அட்டையும் ( ஏ.ரி.எம்) ஆசிரியரிடம் இருக்க, அவரது கணக்கிலிருந்து சுமார் ஐம்பதாயிரத்துக்கு மேற்பட்ட தொகை உருவப்பட்டிருக்கிறது.
உடனடியாக விழித்துக் கொண்ட ஆசிரியை முகாமையாளரிடம் முறையிட, கணக்கின் வைப்பு – மீளப்பெறல் சரிதம் ஆராயப்பட்டது. முதற்கட்ட விசாரணைகளின் முடிவில் ஆசிரியையின் கணக்கிலிருந்து ஏ.ரி.எம் அட்டை மூலமாக பெறப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
முகாமையாளருக்கு வாய்த்துவிட்டது. ஆசிரியை மீது பாய்ந்தே விட்டார். உங்கள் அட்டையால் தான் பணம் பெறப்பட்டுள்ளது என்று சாதித்தார். இதற்கு மேல் இதில் செய்வதற்கு ஏதுமில்லை என்று ஆசிரியையை 
விரட்டினார்.
சாதாரணமான ஒருவராக இருந்திருந்தால் அப்படியே முடிந்திருக்கும் கதை.
ஆசிரியையும் விடுவதாக இல்லை. தன்னுடைய ஏ.ரி.எம் அட்டை தன்னைத் தவிர யாரும் பாவிப்பதில்ல என்று அடித்துச் சொல்லி விட்டார்
முகாமையாளர் மிரட்டியும் வாடிக்கையாளர் பணிவதாய் 
இல்லை. தொலைபேசி இலக்கத்தை வாங்கிக் கொண்டு ஏதாவது அறிந்தால் அழைக்கிறோம் வாருங்கள் என்று ஆசிரியையை 
அனுப்பி விட்டார்.
இரண்டு நாள்களின் பின்னர் ஆசிரியைக்கு வங்கிக் கிளையில் இருந்து அழைப்பு வந்தது. “உங்கள் பணத்தைத் திருடியவனைப் பிடித்து விட்டோம்” என்று ஆசிரியைக்கு மகிழ்ச்சி.. கிளைக்கு விரைந்தவருக்கு
 அதிர்ச்சி.
அங்கு ஆசிரியைக்கு முகாமையாளர் ஒரு வகையில் மிரட்டல் விடுக்கிறார். நீங்கள் இதனை இப்படியே விட்டுவிடுவது நல்லது என்று.
ஆசிரியை விடவில்லை. பிராந்திய முகாமையாளருக்குத் தெரியப்படுத்தியபின் ஏ.ரி.எம். அட்டையின் மூலம் ஆசிரியையின் கணக்கிலிருந்து களவாடப்பட்ட தொகை வைப்பிலிடப்பட்டிருப்பதாக முகாமையாளரிடமிருந்து தொலைபேசி மூலம் அறிவிக்கப்பட்டிருப்பதுடன். இதனை இதற்கு மேல் நீடிக்க வேண்டாம் என்று கடுமையான 
உத்தரவு வேறு.
இதில் பல சந்தேகங்கள் உள்ளன. ஏ.ரி.எம் அட்டை கையிலிருக்கும் போது ஏ.ரி.எம் மூலம் பணம் பெறப்பட்டது?
விசாரணைகளில் வெளிவந்த தகவலின் படி ஏ.ரி.எம் மூலமாக பணம் பெறப்பட்ட அட்டையின் இலக்கம் ஆசிரியையின் உடையதாக இருக்கவில்லை. அதாவது ஆசிரியையின் கணக்குக்கு வேறு ஒரு அட்டையுடன் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.அந்த அட்டையை வைத்திருந்தவர் தெரிந்தோ தெரியாமலோ தனது கணக்கில் இருந்து பணத்தை மீளப் பெற்றிருக்கிறார்.
இது விடயத்தில் ஆசிரியையின் பக்கத்தில் என்ன தவறு இருக்கிறது?
வங்கி அலுவலர்கள் ஏன் இதை தெரியாதது போலவே வேண்டுமென்றே செய்திருக்கக் கூடாது.
அதிகாரிகளின் தவறு அப்பாவிகளை பாதித்ததுமல்லாமல் அதனை நியாயப்படுத்தும் வகையில் முகாமையாளர் வாடிக்கையாளரை மிரட்டியது சரியா?
இந்த ஆசிரியை கொஞ்சம் உசாரான ஒருவராக இருந்ததனால் பணம் மீளக் கிடைத்தது. இதுவே சாதாரண ஒருவராக இருந்தால்?
மீதியை பரிசோதிக்காமல் இருக்கும் ஒருவராக இருந்தால்?
நண்பர்ளே!
மிகுந்த அவதானமாயிருங்கள் உங்கள் வங்கிக்கணக்கின் வைப்பு – மீளப்பெறல் விடயங்களை அடிக்கடி 
உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
இங்குஅழுத்தவும் நவற்கிரி.கொம் செய்திகள் >>>

புதன், 8 ஜூன், 2016

கிணற்று நீர் குடிப்பதற்கு உகந்தா என்பது தொடர்பில் பரிசோதனை

கொஸ்கம சாலாவ இராணுவ முகாமில் தீ விபத்து ஏற்பட்டு இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தையடுத்து, வெடிப்பு இடம்பெற்ற இடத்தை சுற்றியுள்ள பிரசேதங்களில் உள்ள கிணற்று நீரை ஆய்வு செய்ய சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.
இந்த கிணற்று நீர் குடிப்பதற்கு உகந்தா என்பது தொடர்பில் பரிசோதனை செய்வதற்காக சுகாதார அதிகாரிகளின் ஊடாக கிணறுகளின் நீர் மாதிரிகளை பெற்றுக்கொள்ள நடவடிக்கை 
எடுக்கப்பட்டுள்ளது.
இங்குஅழுத்தவும் நவற்கிரி.கொம் செய்திகள் >>>

சனி, 4 ஜூன், 2016

மத்திய கல்லூரியின் 200 ஆவது ஆண்டு நிறைவினைமுன்னிட்டு ?

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் 200 ஆவது ஆண்டு நிறைவினை முன்னிட்டு கூடைப்பாந்தாட்ட சுற்றுப்போட்டி நடந்தேறியது
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் 200 ஆவது ஆண்டு நிறைவினை முன்னிட்டு வடமாகாணண பாடசாலைகளக்கிடையில் நடாத்தப்பட்ட மாபெரும் கூடைப்பாந்தாட்ட சுற்றுப்போட்டியில் ஆண்கள் பிரிவில் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியும் பெண்கள் பிரிவில் வேம்படி மகளீர் கல்லூரியும் சம்பியனாகியது.

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் 200 ஆவது ஆண்டு நிறைவினை முன்னிட்டு வடமாகாணண பாடசாலைகளக்கிடையில் நடாத்தப்பட்ட மாபெரும் கூடைப்பாந்தாட்ட சுற்றுப்போட்டியின் இறுதியாட்டம் 01.06.2016 புதன்கிழமை 4 மணிக்கு யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி கூடைப்பந்தாட்ட அரங்கில் கல்லூரி அதிபர் எஸ்.கே.எழில்வேந்தன் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக வடமாகாண ஆளுநர் கௌரவ றெஜினோல்ட் குரே சிறப்பு விருந்தினராக யாழ்ப்பாணம் மத்தியகல்லூரியின் பிரான்ஸ் பழைய மாணவர் சங்கத்தலைவர் கே.முத்துக்குமார் கௌரவ விருந்தினராக யாழ்ப்பாணம் மத்தியகல்லூரி பழைய மாணவர் சங்கத்தலைவர் எம் .தமிழ்அழகன் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

கூடைப்பந்தாட்ட சுற்றுப்போட்டியின் இறுதியாட்டத்தில் ஆண்கள் பிரிவில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியும் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியும் மோதியது இப்போட்டியில் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி வெற்றி பெற்று சம்பியனாகியது . மூன்றாமிடத்தினை மானிப்பாய் ஏஞ்சல் சர்வதேசபாடசாலை பெற்றுக்கொண்டது. பெண்கள் பிரிவில் வேம்படிமகளீர் கல்லூரியும் உடுவில் மகளீர் கல்லூரியும் கல்லூரியும் மோதியது. இப்போட்டியில் வேம்படி மகளீர் கல்லூரி வெற்றி பெற்று சம்பியனாகியது. மூன்றாவது இடத்தினை யாழ்ப்பாணம் இந்து மகளீர் கல்லூரி பெற்றுக்கொண்டது வியாழன், 2 ஜூன், 2016

பிறந்த நாள் வாழ்த்து திரு .தேவராசா சுதாகரன் 02.06.16.

யாழ்  இராசாவின் தோட்டத்தைப் பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகவும்கொண்ட திரு :தேவராசா சுதாகரன் (சுதா) அவரின்  பிறந்த நாள் இன்று. 02.06.2016. மிக தனது இல்லத்தில்  சிறப்பாக குடும்ப உறவுகளுடன் கொண்டாடுகின்றனர் .இவரை  அன்பு மனைவி 
மகள் மகன் 
அக்கா அத்தான் மருமகள் பெறாமக்கள்  மாமா மாமி மார் பெரியப்பா ,பெரியம்மா மார் சித்தப்பா சித்தி மார் அண்ணா அண்ணி  தம்பி மார் சகோதரிகள் மச்சான் மச்சாள் மார் உற்றார் உறவினர்கள் 
நண்பர்களும் இவரை
  நல்லைக்கந்தன் இறை அருள் பெற்று மலர்ந்து மணம் வீசுகிற மலரை போல நீ மலர்ந்த நாளடா - இன்று ! இந் நாள் போல எந்நாளும் பூத்துகுலூங்கி மணம் வீசி நீ   பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடுளி வாழ வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து  நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் வாழ்த்துகின்றன,
 வாழ்கவளமுடன் .
இங்குஅழுத்தவும் நவற்கிரி.கொம் செய்திகள் >>>