siruppiddy

திங்கள், 23 செப்டம்பர், 2013

டென்ஷன் இல்லாமல் சந்தோஷமாக இருக்க ஆசையா?


டென்ஷனே இல்லாம சிரிச்சுக்கிட்டு எப்பவுமே ஹாப்பியா இருக்கணும்னு ஆசையா? ஆசை மட்டும் இருந்தா பத்தாது, அதுக்கு நாம சில விஷயங்களை செய்யணும்.

அப்பதான், நம்மால டென்ஷன் இல்லாம இருக்க முடியும். உங்களுக்கு பிறர் தீங்கு செய்யும் போது, அந்த தவறை நீங்கள் மன்னித்து விடுங்கள்.
தவறு செய்வது மனித இயல்பு. போன முறை அவன் தவறு செய்யும் போது மன்னித்தேன்; இனி என்னால் முடியாது என்று கூறாதீர்கள். நீங்கள் பிறரை மன்னிக்க மன்னிக்க உங்கள் மனம் பண்படும். அதுமட்டுமல்லாமல் உங்களால் நிம்மதியாகவும் இருக்க முடியும். இதற்கு மருத்துவ ரீதியாகவும் நல்ல பலன் உண்டு.

”மறப்போம் மன்னிப்போம்’ என்பதை தாரக மந்திரமாக வைத்துக் கொள்ளுங்கள். இல்லையெனில் மன்னிக்க முடியாமல் இருக்கும் அவரைப் பார்த்த உடனே அவர் மீது கோபம் வந்து அந்த கோபம் டென்ஷனாக மாறி ரத்த அழுத்தம் ஆட்டோமேட்டிக்காக உயரும். இந்த ரத்த கொதிப்பு உங்களுக்கு பலவிதமான நோய்களை ஏற்படுத்தும்.

இதனால் நம் ஆரோக்கியம் தான் பாதிக்கிறது. அதேபோல், நீங்கள் செய்யும் தவறுகளுக்கு மற்றவர்களிடம் மன்னிப்பு கேட்கத் தயங்காதீர்கள். தெரிந்தோ, தெரியாமலோ பல வகைகளில் நாம் தவறு செய்கிறோம் அப்படி செய்யும் போது அவரிடம் மன்னிப்புக் கேட்கத் தயங்காதீர்கள்.

வயது வித்தியாசம் பார்க்காமல் உங்கள் தவறை மட்டும் மனதில் கொண்டு மன்னிப்புக் கேளுங்கள். அப்படி கேட்கும் போது உங்கள் எதிரி நிச்சயம் பெருந்தன்மையாக நடந்து கொள்வார். அப்படி மன்னிக்காவிட்டாலும், கவலையை விடுங்கள்.
உங்கள் தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்ட போதே நீங்கள் மன்னிக்கப்பட்டு விட்டதாக உள்ளூர நம்புங்கள். இதனால் மன அமைதி கிடைக்கும். தவறு செய்யும் நமக்கு மன்னிக்கும் மனப்பான்மை மற்றும் மன்னிப்புக் கேட்கும் தன்மை ஆகிய இரண்டும் வேண்டும்.

ப்ளீஸ், தாங்க்யூ, ஸாரி, வணக்கம், வாங்க போன்ற சொற்களையும் அடிக்கடி தேவையான இடத்தில் தவறாமல் பயன்படுத்துங்கள். அவை உங்களை பண்புள்ளவராகக் காட்டும். என்ன இதெல்லாம் செய்ய நீங்க ரெடியா? அப்படின்னா இனிமே நோ டென்ஷன்! வாழ்க்கையை என்ஜாய் பண்ணுங்க!
 

சனி, 21 செப்டம்பர், 2013

கன்னத்தில் அறைந்த சமுர்த்தி அதிகாரிக்கு பிணை


சிலாபம் முஸ்லிம் வித்தியாலய அதிபருக்கு கன்னத்தில் அறைந்த சமுர்த்தி அதிகாரிக்கு சிலாபம் நீதிமன்றத்தால் இன்று பிணை வழங்கப்பட்டுள்ளது.
மேற்படி சம்பவத்தில் முறைப்பாட்டாளரான அதிபர் மேற்படி சந்தேக நபரின்

மகனுக்கு பாடசாலை வளவில் இலைகளை சேகரிக்கும் படி கொடுத்த
தண்டனைக்கு அதிருப்தி அடைந்த அப்பிரதேச சமுர்த்தி உத்தியோகத்தர் ஒருவரே கடமை நேரத்தில் குறித்த அதிபரை தாக்கி உள்

ளதாக முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த முறைப்பாட்டை விசாரித்த சிலாபம் நீதிவான் ஜகத் ஏ.கஹதகம சந்தேக நபருக்கு 5000 ரூபா பெறுமதியான இரண்டு பிணைகளை வழங்கினார்.

ஞாயிறு, 15 செப்டம்பர், 2013

சிறுப்பிட்டியில் சம்பவம்! வாழைத்தோட்டங்கள் அழிப்பு

 
கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சாரத்திற்கு சென்ற மக்களின்  
சிறுப்பிட்டி தெற்கில் நேற்று இரவு இடம்பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சாரத்திற்கு சென்று திரும்பிய கூட்டமைப்பு ஆதரவாளர்கள் இருவரது வாழைத் தோட்டங்கள் மற்றும் பீற்றூட் தோட்டங்கள் நாசம் செய்யப்பட்டுள்ளது. வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிடும் சிராஸ் என்பவரது நாசவேலையே இது என அப் பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். தற்போது அப்பகுதிக்கு சுரேஸ்பிரேமச்சந்திரன் சென்று அழிவுற்ற பகுதிகளைப் பார்வையிட்டு மக்களுக்கு ஆறுதல் கூறியுள்ளார். தோட்டங்களை அழித்தமை தொடர்பாக பொலிசாரிடம் முறையிட அப்பகுதி மக்கள் சற்று முன் சென்றுள்ளார்கள்.
   
வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிடும் சிராசிடம் பணத்தை வாங்கிய சிலர் சிராசை அப்பகுதிக்கு பிரச்சாரம் செய்ய அழைத்து வந்துள்ளனர். ஆனால் அங்கு ஒருவரும் வரவில்லை எனத் தெரியவருகின்றது. இந் நிலையில் நேற்று இரவு அப்பகுதியில் கூட்டமைப்பு பிரச்சாரம் செய்த போது ஏராளமானவர்கள் கூடியதாக தெரியவருகின்றது. இந்த ஆத்திரத்திலேயே சிராசின் கைக்கூலிகள் அப்பகுதி வாழை மற்றும் பீற்றூட் தோட்டங்களை நாசம் செய்துள்ளனர்.
 
 

செவ்வாய், 10 செப்டம்பர், 2013

உயிர் பிழைத்தது 5வது மாடியிலிருந்து தவறி விழுந்த குழந்தை


பிரிட்டனில் ஐந்தாவது மாடியிலிருந்து தவறி விழுந்த குழந்தை உயிர் பிழைத்தது.
பிரிட்டனின் பிளைமவுத் பகுதியை சேர்ந்த 16 மாதக் குழந்தை, ஐந்தாவது மாடியில் உள்ள தனது வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தது.

இந்த குழந்தையின் தாய் சமையல் வேலைகளை பார்த்துக் கொண்டிருந்தாள்.
அப்போது, தவழ்ந்து விளையாடிக் கொண்டிருந்த குழந்தை பால்கனிக்கு சென்று அங்கிருந்த கம்பி வழியே கீழே விழுந்தது.

குழந்தையின் அலறலைக் கேட்ட தாய், பதறி அடித்துக் கொண்டு வந்தார்.
ஆனால் குழந்தைக்கு பெரிய அளவில் காயம் ஏற்படவில்லை, அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தது

ஞாயிறு, 1 செப்டம்பர், 2013

இடம்பெற்ற மகுடி கூத்து மட்டக்களப்பில்


மட்டக்களப்பு முறக்கொட்டான்சேனை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயமுன்றலில் நேற்று முன்தினம் மாலை மகுடி கூத்து அரங்கேற்றம் செய்யப்பட்டது.

மட்டக்களப்பு தமிழர்களின் கலைகளில் நாட்டுக் கூத்தினைப் போன்று அருகி வரும் கிராமிய கலைகளில் ஒன்றான மகுடி கூத்திற்கும் புத்துயிர் ஊட்டும் முகமாகவே கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலக கலாசார குழுவினால் இவ் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பிரதேச செயலாளர் கே.தனபாலசுந்தரம் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வின்போது பெரும் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு மகுடி கூத்தினை பார்வையிட்டு மகிந்தனர்