siruppiddy

வியாழன், 31 ஜூலை, 2014

சுன்னாகம் நகரப் பகுதியில் வர்த்தகருக்கு வாள்வெட்டு

 
யாழ். சுன்னாகம் நகரப் பகுதியில் வாள்வெட்டுக்கு  இலக்காகி படுகாயமடைந்த வர்த்தகரான    இராஜரத்தினம் இராஜகுமார் (வயது 37) என்பவர் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் நேற்று செவ்வாய்க்கிழமை (29) இரவு அனுமதிக்கப்பட்டதாக சுன்னாகம் பொலிஸார் இன்று புதன்கிழமை (30) தெரிவித்தனர்.
சுன்னாகம் சந்தியில் வீடியோக் கடை நடத்திவரும் இவ்வர்த்தகர், நேற்றையதினம் (29) இரவு தனது கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு நடந்து சென்றுகொண்டிருந்தார். இதன்போது முகத்தை மூடிக் கொண்டு  மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், இவ்வர்த்தகர் மீது வாள்வெட்டு மேற்கொண்டுள்ளனர்.
இந்நிலையில், இவ்வர்த்தகரை அங்கு நின்ற பொதுமக்கள் வைத்தியசாலையில் அனுமதித்தனர்.
இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

மற்றைய செய்திகள்

ஞாயிறு, 13 ஜூலை, 2014

ஆபத்தான விலங்குகளை அரவணைக்கும் வினோத நபர்

பிரித்தானியாவில் நபர் ஒருவர் ஆபத்தான விலங்குகளுடன் வாழ்ந்து வருவது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
பிரித்தானியாவின் லனார்க்சையர் நகரை சேர்ந்த கைத் ராஸ் (24) என்ற நபர், ஃபோர்க்லிஃப்ட் வண்டியின் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார்.
இவர் தனது வீட்டின் படுக்கை அறையில் பாம்பு, ஆமை, சிலந்திகள் போன்ற விலங்குகளுடன் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வருகிறார்.
இந்நிலையில் வீட்டில் போதுமான இடம் இல்லாததால் தனது வீட்டின் பின் உள்ள பூங்காவில் 2 முள்ளம்பன்றிகளையும் வளர்த்து வருகிறார்.
குறிப்பாக அவருக்கு நாய்களின் மீது அதிக ஆர்வம் உண்டு. மேலும் இவரது இந்த விநோதமான பழக்கத்திற்கு அவரது காதலியும் ஆதரவு தெரிவித்து வருகிறார்.
இதுகுறித்து ராஸ் கூறுகையில், நான் விலங்குகளை அதிகம் விரும்புவதால், விரைவில் எனது வேலையை விட்டுவிட்டு,முழு நேரத்தையும் விலங்குகளுக்காகவே செலவிட போகிறேன் என தெரிவித்துள்ளார்.
 





பிறந்தநாள் வாழ்த்து: செல்வி சப்தனா(09.07.14)

 இணுவிலை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகவும் கொண்ட திரு/திருமதி பிரபாகரன் தம்பதிகளின் செல்வப்புதல்வி சப்தனா (09.07.14)அன்று  தனது பத்தாவது பிறந்தநாளை  இல்லத்தில் இனிதே கொண்டாடினார்.

இவரை  அன்பு அப்பா பிரபாகரன் ,அம்மா சுதர்சினி ,அண்ணா வர்னுகன் ,மற்றும் உறவினர்கள் வாழ்த்திநின்றனர் .  இவர்களுடன் இணைந்து நவற்கிரி இணையங்களும்  நிலாவரை இணையங்களும்
உறவுஇணையங்களும் ,இறைஅருள்பெற்று மிகுந்த சீரும்சிறப்புடன்பல்
கலையும் பெற்று பல்லாண்டு பல்லாண்டுகாலம் நீடுழி வாழ்கவென வாழ்த்துகின்றனர்

மற்றைய செய்திகள்