பிறந்து சில மணி நேரமே ஆன தமது குழந்தையை கொன்று அதனுடன் 3 மாதங்கள் வரை தங்கியிருந்த பெண்ணை நண்பர் ஒருவரது உதவியுடன் பொலிசார் கைது செய்துள்ளனர்.
நியூயோர்க் நகரின் Batavia பகுதியில் இரண்டு குழந்தைகளுடன் குடியிருந்து வருபவர் Christina Colantonio எனும் பெண்மணி.
இவரது குடியிருப்பில் அடிக்கடி வந்து செல்லும் தோழி ஒருவருக்கு குழந்தை மீதும் அந்த தாயின் நடவடிக்கை மீதும் சந்தேகம் எழுந்ததை தொடர்ந்து அவர் பொலிசாரிடம் தகவல் தெரிவித்திருக்கிறார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிசார், மேற்கொண்ட சோதனை மற்றும் விசாரணையின் முடிவில் Christina Colantonio தமக்கு பிறந்த குழந்தையை சில மணி நேரங்களிலேயே கொலை செய்தது தெரிய வந்தது.
குழந்தையை கொலை செய்தது வெளியே தெரியாமல் இருக்க அவர் தமது குடியிருப்பிலேயே கடந்த 3 மாதங்களாக குழந்தையின் சடலத்தை பாதுகாத்து வந்ததும் விசாரணையில் தெரிய வந்தது.
இதனையடுத்து Christina Colantonio-ஐ கைது செய்த பொலிசார் அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்து Batavia நகர நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
முதற்கட்ட விசாரணையின் முடிவில், பிறந்து சில மணி நேரமே ஆன தமது குழந்தையை Christina Colantonio வேண்டுமென்றே கொலை செய்துள்ளதற்கான போதுமான ஆதாரங்கள் கிடைத்திருப்பதாக நீதிபதி தெரிவித்தார்.
மேலும் குழந்தை இறந்ததற்கான முக்கிய காரணம் குறித்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும் எனவும் மருத்துவ குழுவிடம் நீதிமன்றம் கோரிக்கை விடுத்துள்ளது.
கைது செய்யப்பட்ட Christina Colantonio என்பவருக்கு வேறு இரண்டு குழந்தைகள் இருப்பது குறிப்பிடதக்கது.