siruppiddy

வெள்ளி, 7 ஆகஸ்ட், 2015

வரும் தேர்தல் குறித்து தெளிவூட்டும் நடவடிக்கை முன்னெடுப்பு!

எதிர்வரும் பொதுத் தேர்தலில் அரச அதிகாரிகளின் பொறுப்புகள் குறித்து தெளிவூட்டும் நடவடிக்கையை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு முன்னெடுத்துள்ளது.
அதற்கமைய வடமேல் மாகாணத்திலுள்ள அரச அதிகாரிகளை தெளிவூட்டும் நடவடிக்கை இன்று (07) ஆரம்பிக்கப்படவுள்ளதாக ஆணைக்குழுவின் சட்டச் செயலாளர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா 
குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல்கள் ஆணையாளர் மற்றும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் ஆகியோர் ஒன்றிணைந்து தெளிவூட்டுல் நடவடிக்கையை முன்னெடுப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பொதுத் தேர்தலில் பொலிஸார் மற்றும் அரச 
அதிகாரிகளுக்கு பாரிய வகிப்பங்கு காணப்படுவதால் அதன் பெறுமதியை அறிந்துக் கொள்ளும் வகையில் இந்த தெளிவூட்டும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாகவும் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை கடமையை தவறும் பட்சத்தில் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்தும் தெளிவூட்டப்படவுள்ளதாகவும் 
அவர் கூறியுள்ளார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக