siruppiddy

சனி, 29 ஆகஸ்ட், 2015

பல லட்சம் பெறுமதியான நகைகள் கொள்ளை! சந்நிதி தேர் உற்சவத்தில்

தொண்டமானாறு  சந்நிதியான் ஆலயத்தில் நேற்று நடைபெற்ற தேர் திருவிழாவின் போது சுமார் சுமார் 10 இலட்சம் பெறுமதியான 22 பவுன் நகைகள் களவாடப்பட்டுள்ளதாக பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேற்படிச் சம்பவங்களை அடுத்து பெண் உட்பட இருவர் வல்வெட்டித்துறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு விசாரணைக்காக பொலிஸ் நிலையம் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

வரலாற்று சிறப்பு மிக்க தொண்டமானாறு சந்நிதியான் ஆலயத்தின் வருடாந்த உட்சபத்தின் தேர் திருவிழா நேற்று நடைபெற்றிருந்தது. இத் திருவிழாவிற்கான யாழ்.மாவட்டம் மட்டுமல்லாமல் வெளி மாவட்டங்களில் இருந்தும் அடியவர்கள் வருகைதந்திருந்தனர்.

இந்நிலையில் ஆலயத்தில் எந்தவிதமான அசம்பாவிதங்களும் நடைடபெறாமல் இருந்பதை தடுப்பதற்கு ஆலயத்தில்; பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்த்து இதுதவிர முறைப்பாட்டு பணிமனையும் அமைக்கப்பட்டிருந்தது.

இருப்பினும் நேற்று நடைபெற்ற தேர் திருவிழாவின் போது மக்களுடன் மக்களாக கலந்து வந்த திருடர்கள் மக்கள் நெரிசலை தமக்கு சாதகமாக பயன்படுத்தி பல பெண்களுடைய தங்கச் சங்கிலிகளை அறுத்துள்ளனர்.

இச் செயற்பாடானது நேற்று நண்பகல் வரை நீடித்திருந்தது. சங்கிலிகளை பறிகொடுத்த பொது மக்கள் ஆலய வளாகத்திpல் அமைந்திருந்த பொலிஸ் முறைப்பாட்டு பணிமனையில் முறையிட்டுள்ளனரர்.

முறைப்பாடுகள் அதிகமாக கிடைத்ததால் சுதாகரித்துக் கொண்ட பொலிஸார் அப்பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையல் நடமாடித்திரிந்த யுவதி ஒருவரையும், அவருடன் தொடர்பில் இருந்த இளைஞர் ஒருவரையும் கைது செய்துள்ளனர்.
கைது செய்த இருவரையும் விசாரணைக்காக வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று தடுதது வைத்துள்ளனர்.

குறித்த இருவரையும் கைது செய்ததன் பின்னர் ஆலயத்தில் திருட்டுக்கள் எவையும் நடைபெறவில்லை என்றும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.



0 கருத்துகள்:

கருத்துரையிடுக