siruppiddy

வியாழன், 6 ஆகஸ்ட், 2015

கண்ணில் வசித்துவந்த புழு: வெற்றிகரமாக வெளியே எடுத்த மருத்துவர்கள்

துபாய் நாட்டில் பெண் ஒருவரின் கண்ணில் இருந்து புழு அகற்றப்பட்ட சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 
துபாய் நாட்டை சேர்ந்த வினீதா என்ற பெண்மணி கண்ணிமையில் வீக்கம் ஏற்பட்டுள்ளதாக கூறி மருத்துவரிடம் சென்றுள்ளார்.
அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவரது கண் இமையில் ஏதே பிரச்சனை உள்ளதாக உணர்ந்துள்ளனர்.
பின்னர் அவரது கண்ணில் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அப்போது அவரது கண்ணீன் மேல் பகுதியில் இருந்து புழு ஒன்று அகற்றப்பட்டது.
இது தொடர்பாக மருத்துவர் விக்ரம் மொஹிண்டிரா கூறியதாவது, அவர் டைரோபிலாரிசியாசிஸ் என்ற நோயினால் பாதிக்கப்பட்டிருந்தார்.
இந்த நோய் 1885 ஆம் ஆண்டுதான் முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த விதமான நோய் உலகளவில் 800 பேருக்கு மட்டுமே உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக