siruppiddy

வெள்ளி, 3 நவம்பர், 2017

அந்திப்பொழுதிலே அக்கினி நட்சத்திரத்தின் ஒளியின்?

" அடைமழைக்கால நேற்றையநாளின் அந்திப்பொழுதிலே அக்கினி நட்சத்திரத்தின் ஒளியின் அழகினிலே சொக்கிப்போயிருந்த சொற்ப நேரம் இன்னும் சற்று நீண்டிருந்தாலென்ன சூரியத்தேவா உன்னை  தேடி ஏங்குகின்றோம் கார்த்திகை மாத காரிருள் போக்கி ஓட்டைக்குடிசை ஏழைகளின் கண்களில் சற்று நிம்மதியான உறக்கத்தை கொடுத்திட"
ஆக்கம் த.கண்ணன் ...
இங்கு அழுத்தவும் நவற்கிரி .கொம்1 செய்தி >>சனி, 14 அக்டோபர், 2017

பிறந்த நாள் வாழ்த்து திரு .திருமதி தர்மராஜா.14.10.2017

சுவிஸ் சூரிச்சில் வசிக்கும் திரு  .திருமதி தர்மராஜா (விஜி ) அவர்களின் பிறந்த  நாள் இன்று.14.10.2017    இவரை  அன்பு கணவர்  பிளைகள் பேரப் பிள்ளைகள் மருமக்கள்  சகோதர்கள், மச்சான் மச்சாள் மார்  
மற்றும் நண்பர்கள்,உறவினர்கள் ,வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து இறை ஆசியுடன் என்றும் இன்பமாய் 
எல்லாநலமும் பெற்று  நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து  பெற்று பல்லாண்டு  பல்லாண்டு காலம் ,வாழ  நம் நவற்கிரி.கொம் நிலாவரை .கொம்  நவக்கிரி .கொம் 
நவக்கிரி.http://lovithan.blogspot.ch/ இணையங்களும்
 வாழ்த்துகின்றது
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


செவ்வாய், 26 செப்டம்பர், 2017

ஜனகபுர பொலிசாரைத் தாக்கிய 2 பெண்கள் உட்பட 18 பேர் கைது!

பொலிசார் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் இரண்டு பெண்கள் உள்ளிட்ட 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வெலிஓயா ஜனகபுர பிரதேசத்தில் இன்று சம்பவம் 
நடைபெற்றுள்ளது
நேற்றிரவு அப்பிரதேசத்தில் கேரள கஞ்சா விற்பனை செய்த நபரொருவரைக் கைது செய்வதற்காக சென்றிருந்த நேரத்தில் பொலிசார் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
தாக்குதல் சம்பவம் காரணமாக பொலிஸ் வண்டியின் கண்ணாடிகள் சேதமடைந்துள்ள அதேநேரம் இரண்டு பொலிசாரும் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து இன்று மேற்கொள்ளப்பட்ட 
விசேட தேடுதல் நடவடிக்கையின் போது பொலிசாரைத் தாக்கிய சந்தேகத்தின் பேரில் 18 ​பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் இரண்டு பேர் பெண்களாவா்.கைது செய்யப்பட்டவா்களை நாளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிசார் அறிவித்துள்ளனர்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>

வியாழன், 17 ஆகஸ்ட், 2017

திருமதி சின்னத்தம்பி பூமணிஅவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி

பிறப்பு : 21 ஓகஸ்ட் 1941 — இறப்பு : 17 ஓகஸ்ட் 2016
யாழ். புத்தூர் நவக்கிரியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் சின்னத்தம்பி பூமணி  .இன்று அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி17-08-2017 இன்று
எங்களின் அன்புத்தாயே  
இதயத்துடிப்பின் அருமருந்தே 
காலம் செய்த கோலத்தினால் 
ஒவ்வொரு கணப்பொழுதும் துடிக்கின்றோம்
எல்லாம் இருந்தும் உம் பிரிவால் வாடும் 
உங்கள் மேல் அன்பு வைத்திருக்கும் 
அன்புப்பிள்ளைகள்
 மருமக்கள் பேரப்பிள்ளைகள் அன்பு
 உள்ளங்கள் உற்றார் உறவினர்கள்
 உங்கள் ஆத்ம சாந்திக்காக எப்போதும் 
இறைவனை  வேண்டி நிற்கின்றோம்.
அன்னாரின் ஆத்மாசாந்தி அடைய  குடும்ப தினரும் 
நவக்கிரி,நிலாவரை  இணையங்களும்
 உறவினர்கள் நவற்கிரி நண்பர்களும்
இறை வனைபிராத்திக் கின்றனர்   .... 
ஓம் சாந்தி...ஓம் சாந்தி....ஓம் சாந்தி 
என்றும் உங்கள் நீங்காத நினைவுகளுடன் வாழும்
அன்புப் பிள்ளைகள்
தகவல்
குடும்பத்தினர்
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


வெள்ளி, 2 ஜூன், 2017

பிறந்த நாள் வாழ்த்து திரு .தேவராசா சுதாகரன் 02.06.17.

யாழ்  இராசாவின் தோட்டத்தைப் பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகவும்கொண்ட திரு :தேவராசா சுதாகரன் (சுதா) அவரின்  பிறந்த நாள்  02.06.2017. இன்று.  .இவரை  அன்பு மனைவி 
மகள் மகன் 
அக்கா அத்தான் மருமகள் பெறாமக்கள்  மாமா மாமி மார் பெரியப்பா ,பெரியம்மா மார் சித்தப்பா சித்தி மார் அண்ணா அண்ணி  தம்பி மார் சகோதரிகள் மச்சான் மச்சாள் மார் உற்றார் உறவினர்கள் 
நண்பர்களும் இவரை
 நல்லூர் முருகன்  இறை அருள் பெற்று இனிமையும் புதுமையும் வரமாக வேண்டும் ! இதழ்கள் சிரித்து இதயம் இனிமை காண வேண்டும் ! அகவை ஒன்று கூடிட அளவற்ற மகிழ்ச்சி நீ காண வேண்டும் ! எண்ணியது போல் யாவும் ஜெயமாகி பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடுளி வாழ வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து  நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் வாழ்த்துகின்றன,
 வாழ்கவளமுடன் .
இங்குஅழுத்தவும் நவற்கிரி இணையம்1 >>>செவ்வாய், 18 ஏப்ரல், 2017

படையினர் தண்டிக்கப்பட வேண்டும் – ஐ.நாவுக்கான அமெரிக்க தூதுவர்

ஹெய்டியில் ஐ.நா அமைதிப்படையில் பணியாற்றிய போது பாலியல் துஷ்பிரயோகங்களில் ஈடுபட்ட சிறிலங்கா படையினர் தண்டிக்கப்பட வேண்டும் என்று ஐ.நாவுக்கான அமெரிக்க தூதுவர் நிக்கி ஹாலே தெரிவித்துள்ளார்.
ஹெய்டியில் ஐ.நா அமைதிப்படையில் பணியாற்றிய சிறிலங்கா படையினர் சிறுவர்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பாக ஆய்வு ஒன்றை நடத்தியிருந்த அசோசியேட்டட் பிரஸ், இந்தக் குற்றச்சாட்டுகளில் தொடர்புடைய சிறிலங்கா படையினர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று சுட்டிக்காட்டியிருந்தது.
இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள ஐ.நாவுக்கான அமெரிக்க பிரதிநிதி நிக்கி ஹாலே,
“ஐ.நா அமைதி காப்புப் பணிக்கு  படையினரை வழங்கியுள்ள எல்லா நாடுகளும், தமது படையினரின்  பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் சுரண்டலுக்கு  பொறுப்புக்கூற வேண்டும்.
தமது படையினரைப் பொறுப்புக்கூற வைக்க மறுக்கும் நாடுகளின் பங்களிப்பை நிறுத்த வேண்டும், அவர்களின் படையினரை வீட்டுக்கு அனுப்ப வேண்டும், அவர்களுக்கான நிதி இழப்பீடுகளும் முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும்.
இந்தக் குழந்தைகளுக்கு நாம் எதைச் சொல்ல முடியும்? இந்த அமைதிகாப்பாளர்கள் அவர்களைப் பாதுகாத்தனரா?
ஹெய்டியில் ஐ.நா அமைதிப்படைக்குப் பங்களிப்புச் செய்த நாடுகள், தமது படையினரைப் பொறுப்புக்கூற வைக்க வேண்டும் என்று நாம் தொடர்ந்து அழுத்தம் கொடுப்போம். மற்ற நாடுகளும் எம்முடன் ஒத்துழைக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


புதன், 12 ஏப்ரல், 2017

திருமண நாள் வாழ்த்து திரு திருமதி தர்மராஜா 12.04.17


யாழ் பாணத்தை பிறப்பிடமாகவும் தற்போது சுவிஸ் சூரிச்சில் வசிக்கும் திரு திருமதி  தர்மராஜா தம்பதிகளின்  திருமண நாள் இன்று..12.04.2017. 38 வது வருட  திருமண நாள் வாழ்த்துகள்.இத் தம்பதியினரை
அன்பு  பிள்ளைகள், 
மருமக்கள் சகோதர்கள்,  பேரப்பிள்ளைகள் ,மற்றும் நண்பர்கள்,உறவினர்கள்  வாழ்த்துகின்றனர் .இவர்களுடன் இணைந்து   நல்லூர் கந்தன் இறை அருள் பெற்று தம்பதியினர்  இன்று போல் என்றும் ச
ந்தோசமாகவும் கல கலப்பாகவும் 
பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் வாழ்த்துகின்றன,
உலகே வா; உன்னத வாழ்த்தினைத் தா!!

பூக்காடு மணக்கும் மனம், பேரன்பு நிரஞ்ச மனம்
மூப்பில்லாத் தமிழுக்கு மலர்க்கொத்து சேர்த்த மனம்
பாரெங்கும் பேர்சொல்லப் பட்டினியாக் கிடந்தாலும்
பழந்தமைழை சிரந் தாங்க தூக்கத்தையும் தொலைத்த மனம்;

யூஜின்புரூஸ் கைபிடித்து ஏஞ்சல்கிருபா நடைதுவங்க
வாழ்வின் படிகள் ஒவ்வொன்றும்
வெற்றி வெற்றியென அணிவகுக்க
ஊரெங்கும் தமிழ் ருசிக்க வாழ்த்த வா பொன்னுலகே..
மழையின் ஈர மனம் முழுதும்
மணக்கும் சந்தன வாசமென – இனிக்கும்
வாழ்வின் ரசம் பரவி – துடிக்கும்
இதயம் இரண்டிற்கும் வாழ்த்துக் கூற வா பொன்னுலகே...
 வாழ்கவளமுடன்
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

சனி, 4 பிப்ரவரி, 2017

அமரர் திரு துரைராஜா இரத்தினம் 1ம் ஆண்டு நினைவஞ்சலி 02.02.17

மலர்வு .28.12.1952    உதிர்வு .15.01.2016      
அமரர் திரு துரைராஜா இரத்தினம் (ஓய்வு பெற்ற கங்கசந்துரை சீமெந்து தொழில்சாலை)   இவர் யாழ்  நவற்கிரி புத்தூர்ரை பிறப்பிடமா​வும்  சங்கோலை  மாவிட்ட புரத்தை வசிப்பிடமா​கவும்  k .k .s வீதி இனுவில் மேற்கை தற்காலிகவதிவிடமாக கொண்ட அமரர் திரு துரைராஜா இரத்தினம் அவர்களின் முதலாம் ஆண்டுநினைவஞ்சலி 02.02.2017. வியாழக்கிழமை
அன்று பி.ப 12:30 மணிக்கு   k .k .s வீதி இனுவில் மேற்கு  என்னும்
 முகவரியில் நடைபெற்றது  . இந் மதியபோசன நிகழ்விலும் உற்றார், உறவினர், நண்பர்கள்  கலந்துகொன்டனர் 
 அனைத்து உள்ளங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துகொள்கின்றோம்
அன்னாரின் ஆத்மாசாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம் ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி...
என்றும் உங்கள் பிரிவால் துயருறும் 
மனைவி, பிள்ளைகள், சகோதரர்கள் , 
மைத்துனர்மார்கள், மருமக்கள்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

புதன், 1 பிப்ரவரி, 2017

பிறந்தநாள் வாழ்த்து திரு திருமதி சுதாகரன் 01.02.17.

யாழ். மறுவன் புலத்தை  பிறப்பிடமாகவும் தற்போது   சுவிஸ் சூரிச்சை வசிக்கும்  திரு திருமதி சுதாகரன் (ஜசோதா) அவர்களின் . 01.02.2017 இன்று   பிறந்த நாள்  இவரை  
அன்புக்கணவர்   அன்பு  மகள் மகன் சகோதரர்கள்   மருமகள் மாமா மாமி மார் பெரியப்பா ,பெரியம்மாமார் சித்தப்பா சித்தி மார் அண்ணா தம்பி மார்  மச்சான் மச்சாள் மார் உற்றார் உறவினர்கள் நண்பர்களும் 
இவரை   மறுவன் புலத்து அம்பாள் இறைஅருள் பெற்று என்றும் இன்பமாய் எல்லாமும் பெற்று நோய் நொடி இன்றி  பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடுளி வாழ வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து
               நவக்கிரி http://lovithan.blogspot.ch  நவக்கிரி.கொம்
  நவற்கிரி .கொம் நிலாவரை
இணையங்களும்  
  வாழ்த்துகின்றன 
   வாழ்கவளமுடன் ..
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>
வியாழன், 19 ஜனவரி, 2017

திருமணநாள் வாழ்த்து திரு திருமதி சுதாகரன் 19.01.17.

யாழ். இராசாவின் தோட்டத்தைப் பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகவும்கொண்ட திரு :திருமதி ,சுதாகரன். (சுதா& யசோ) தம்பதியினர் சூரிச்மாநிலத்தில் 19.01.2017.. இன்று பதின்ஐந்தாவது திருமண நாளை தனது இல்லத்தில் குடும்ப உறவுகளுடன் ;மிக சிறப்பாக கொண்டாடுகின்றனர் .இவர்களை அன்பு மகள் மகன் அண்ணா அண்ணி அக்கா அத்தான் மருமகள்
 மாமா மாமி மார் பெரியப்பா ,பெரியம்மாமார் சித்தப்பா சித்தி மார் அண்ணா தம்பி மார் சகோதரிகள் மச்சான் மச்சாள் மார் 
உற்றார் உறவினர்கள் நண்பர்களும் இவர்களை நல்லைகந்தன் இறைஅருள் பெற்று இன்று போல் என்றும் சீரும் சிறப்புடன் சகல செல்வங்களும் பெற்று
திருமண [கல்யாண] வாழ்த்து கவிதை
உணர்வினை மதித்து
உரிமைக்கு இடமளித்து
ஜயந்தெளிந்து
அன்போடு வாழ்க!

அகிலம் போற்ற
இனிதாய் வாழ்ந்திடுக!

மனம்போல மாங்கல்யம் 
மன்றத்தில் வாழ்த்துக்கள்!
மழைபோல் பொழிய

மலர்மாலை சூடி 
மகிழ்வோடு வாழ்க!

மாங்கல்ய பந்தம்
மாலையிட்ட உறவு
மகத்தானது - அது
மகிழ்வோடு துணையானது!

அழகான வாழ்க்கை!
அன்பான உலகம்!
அறிவோடும் அன்போடும்
ஆண்டாண்டு வாழ்ந்திடுக!
என்றும் அன்புடன் வாழ்த்துகின்றனர் 
 இவர்களுடன் இணைந்து நவக்கிரி   http://lovithan.blogspot.chநவக்கிரி .கொம் 
                          நவற்கிரி .கொம் நிலாவரை.கொம் 
              இணையங்களும்  
 சீரும் சிறப்புடன் பல்லாண்டு  பல்லாண்டு காலம்  நீடுழி வாழ்க வாழ்கவென
                       வாழ்த்துகின்றது 
                       .வாழ்க வளமுடன் 
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>