யாழில் வீதியைக் கடக்க முற்பட்ட வேளையில் மோடார் சைக்கிள் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இச் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, நேற்றையதினம் காலை வேலைக்கு செல்வதற்காக அராலி வடக்கில் பஸ்சிற்கு காத்திருந்து விட்டு, வீதியைக் கடக்க முற்பட்ட வேளையில் கையடக்க தொலைபேசியில் மோட்டார் சைக்கிளில் கதைத்துக் கொண்டு வந்த இளைஞன் ஒருவன் குறித்த நபரை மோதிவிட்டு சென்றுள்ளான்.
இந்நிலையில் குறித்த நபர் இரத்தப் பெருக்கு காயங்களுடன் சுமார் இருபது நிமிடங்கள் வீதியில் கிடந்துள்ளார்.
யாரும் உதவி செய்து வைத்தியசாலைக்கு வாகனம் ஒன்றை பிடித்து ஏற்றி அனுப்ப முயற்சிக்காது வேடிக்கை பார்த்துக்கொண்டு நின்றுள்ளார்கள்.
சம்பவத்தை கேள்வியுற்ற குறித்த நபரின் மனைவி செட்டியா மடத்தில் இருந்து சுமார் இருபது நிமிடங்களில் வந்து கணவரை வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதிலும் அதிக இரத்தப் பெருக்கு காரணமாக மரணமடைந்துள்ளார்.
இவ்வாறு மரணத்தை தழுவிக் கொண்டவர் அராலி வடக்கு செட்டியா மடத்தை சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான 49 வயதுடைய குட்டித்தம்பி வசந்தராசா என்பவராவார்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நீதிமன்ற பணிப்புரைக்கு அமைவாக மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமாரினால் மேற்கொள்ளப்பட்ட மரண விசாரணையைத் தொடர்ந்து சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
மோட்டார் சைக்கிளை செலுத்தி வந்த இளைஞர் வட்டுக்கோட்டை பொலிசாரினால் கைது செய்யப்பட்டு மல்லாகம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>
0 கருத்துகள்:
கருத்துரையிடுக