பிறப்பு : 4 ஏப்ரல் 1964 — இறப்பு : 13 மார்ச் 2013
திதி : 10 மார்ச் 2016
யாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் St.Gallen Rorschach ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கந்தையா செல்வகுமார் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டுகள் மூன்றாகியும் ஆறவில்லை
எங்கள் சோகம் அப்பா!
உங்களை இழந்து தவிக்கும் நாள் முதல்
என் விழிகளில் வழியும்
கண்ணீர்த்துளிகளின் வேதனைகள்
உங்களிற்கு புரிகின்றதா
அப்பா!
மூன்று வருடங்கள் போனாலும்
மெளனமாக எனக்குள்ளே
என் மனசு அழுவதை நீங்கள் உணர்வீர்கள்
உணர்ந்து கொண்டேயிருப்பீர்கள்
அப்பா!
காலங்கள் கடந்து சென்றாலும்
ஒவ்வொரு நொடிகளிலும்
இதயத்தின் துடிப்பைப் போல்
எங்கள் அருகில் நீங்கள் இருப்பதை
நாங்கள் உணருகின்றோம்
அப்பா!
எங்கள் அன்பான அப்பா!
நாங்கள் தழைத்துச் செழிக்க
தளராது நின்ற தலைவனாய்
உங்கள் மார்பில் எங்களை தாங்கி
தலைநிமிர வைத்த எங்கள் அப்பா
யாருக்குமே கிடைக்காத அப்பா
எங்களுக்கு மட்டுமே கிடைத்த
அப்பா!
காலத்துடன் போராடினோம்......
எங்கள் அப்பாவைக் காப்பாற்ற
கடவுளிடம் மெளனமாக வேண்டினோம்
அழுதோம், புலம்பினோம் உயிர்காக்க
ஆனால் காலனவன் கவர்ந்து கொண்டானே
வெகு விரைவில் எங்கள்
அப்பாவை........
என் தெய்வமே!
உங்களோடு நான் வாழ்ந்த நாட்கள் தான்
என் வாழ்வில் ”பொற்காலங்கள்” அப்பா!
கணவனாய், கண்ணியமாய், தகப்பனாய்,
தத்துவமாய், மாமனாய், மகத்துவமாய்
பெருமை கொண்ட உங்கள் அரவணைப்பும்
உங்கள் பாசமும் மறையுமோ,
மாழுமோ...?
தேடுகின்றோம்! தேடுகின்றோம்!
தேம்பியே போகின்றோம் அப்பா!
பாசமுள்ள கணவனாகவும், அன்பு அப்பாவாகவும்,
ஆதரவான மாமாவாகவும் என்றென்றும்
எங்கள் மனதில் எங்களின் காவல் தெய்வமாக
வாழ்ந்து கொண்டிருப்பீர்கள் அப்பா!
எங்கள் தெய்வத்தின்
ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல
சொக்கர்வளவு சோதிவிநாயகனை வேண்டி நிற்கின்றோம்.
என்றென்றும் நினைவுகளைச் சுவாசித்துக் கொண்டிருக்கும்
உங்கள் ஆருயிர் மனைவி,
ஆசைப் பிள்ளைகள் சொரூபா, றஜீபன்,
அன்பு மருமகன் இந்துசன்.
அன்னாரின்
ஆத்மாசாந்தி அடைய குடும்ப தினரும் நவக்கிரி,நிலாவரை இணையங்களும் உறவினர்கள் சுவிஸ் - குப்பிளான் . நண்பர்களும் இறை வனைபிராத்திக் கின்றனர் .... ஓம் சாந்தி...ஓம் சாந்தி....ஓம் சாந்தி என்றும் உங்கள் நீங்காத நினைவுகளுடன் வாழும் மனைவி, பிள்ளைகள் மருமகன்
. தகவல் குடும்பத்தினர்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>
0 கருத்துகள்:
கருத்துரையிடுக