siruppiddy

செவ்வாய், 27 மே, 2014

நவக்கிரி மூலிகைத் தோட்டத்திற்கு படை முகாம்கள் தடை

ஐந்து ஏக்கர் நிலப்பரப்பைக் கொண்ட நவக்கிரி மூலிகைத் தோட்டத்திற்கு படை முகாம்கள் தடையாக உள்ளதாக வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம் தெரிவித்தார்.

 இன்று காலை 9.30 மணியளவில் யாழ்.மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலே அவர் இதனைத் தெரிவித்தார்.

 மேலும் வடக்கு மாகாண சுதேச மருத்துவ வசதிகளுக்கு தட்டுப்பாடு நிலவுகின்றது.அதுமட்டுமல்லாது இந்தியாவிலிருந்தே ஆயுள் வேத மூலிகைப் பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டது.ஆனால் இந்த இறக்குமதி தடை செய்யப்பட்டு உள்ளுர் உற்பத்திகளை அதிகரிப்பதற்கு இலங்கை அரசாங்கம் ஆயுள் வேத மருந்து உற்பத்திகளுக்கு வரி விதிப்பினை வழங்குவதை தடை செய்ய வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

திங்கள், 12 மே, 2014

வீட்டில் உள்ள மரம் வெட்ட லஞ்சம் கோரும் வனஇலாகா

வவுனியா மாவட்டத்தில் வீட்டில் உள்ள மரங்களை வெட்டுவதற்கு அனுமதி பெறவேண்டுமானாணல் வன இலாகாவினர் லஞ்சம் கோருவதாக மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். இது தொடர்பில் பாதிக்கப்பட்டவர்கள் கருத்து தெரிவிக்கையில், நீண்டகாலமாக வீட்டில் வளர்க்கப்பட்ட மரங்கை வீட:டு பயன்பாட்டுக்கு வெட்டுவதற்கும் தமது காணிகளுக்கு செல்ல இடம்ஒதுக்கப்படும் போதும் வீதியோரத்தில் உள்ள மரங்கை வெட்டுவதற்கும் வன இலாகாவிடம் அனுமதி கோரப்படும் போது நிதி மூலமான லஞ்சம் கேட்கின்றனர். அண்மையில் எமது காணியொன்றில் உள்ள மரத்தினை வெட்டுவதற்கு பிரதேச செயலாளரிடம் அனுமதி பெற சென்றிருந்தோம். எனினுமு; வன இலாகாவிடம் அனுமதி பெறுமுhறு அவர் தெரிவித்தீருந்தார். அதனையடுத:து நாம் வன இலாகாவிடம் சென்றபோது அவர்கள் மூன்ற நாட்களின் பின்னர் மரம் உள்ள இடத்தினை பார்வையிட வந்திருந்தனர். அவ்வாறு வந்த உத்தியோகத்தர் தனக்கு 5000 ரூபாவும் அலுவலகத்தில் உள்ள மேலும் இருவருக்கு 2000 ரூபா வீதமும் தருமர்று கோரினார் என பாதிக்கப்பட்ட பெண்மணியொருவர் தெரிவித்தார்.

புதன், 7 மே, 2014

கதிரிப்பாய் முக்கொலை! நடந்தது இதுதான்!-

                            – விளக்குகிறார் கொலையாளியின் மனைவி
யாழ்., கதிரிப்பாய் அச்சுவேலி பிரதேசத்தில்  04.05.14-அதிகாலை இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலியாகியிருந்தனர். மேலும் இருவர் காயமடைந்திருந்தனர். இச்சம்பவம் குறித்து காயமடைந்து சிகிச்சை பெற்றுவருபவரும், கொலையாளியின் மனைவியுமான தர்மிகா பொலிஸாருக்கு வாக்குமூலம் அளித்துள்ளார்.

விபரம் வருமாறு,

அச்சுவேலி கதிரிப்பாய் பகுதியில் கொலையாளி தனஞ்சயனின் மனைவியின் தாயார் வீடு உள்ளது. இங்குதான் கொலை இடம்பெற்றது.

கொலைச் சந்தேக நபரான தனஞ்சயனுக்கும் அவரது மனைவி தர்மிகாவுக்கு இடையில் ஏற்பட்ட தகராறுகளை அடுத்து இவர்கள் இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

வாள்வெட்டில் காயமடைந்த தர்மிகாவும் தனது தாய் வீட்டிலேயே வசித்து வந்தார்.

மனைவியைப் பிரிந்திருந்த தனஞ்சயன், மனைவியின் சகோதரியான கொல்லப்பட்ட மதுஷா என்பவரைத் தனக்குத் திருமணம் செய்து வைக்குமாறு அவரது குடும்பத்தினரிடம் வலியுறுத்தி வந்துள்ளார். அவர்கள் அதற்கு மறுத்து விட்டனர்.

அத்துடன், தனஞ்சயனுக்குத் தெரியாமல் கிளிநொச்சியில் மதுஷாவுக்கு கடந்த வாரம் திருமணம் செய்து வைத்துள்ளனர். இதனை ஒருவாறு தனஞ்சயன் அறிந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையியே புதிதாக திருமணமாக மதுஷாவும் தனது கணவருடன் சனிக்கிழமை அச்சுவேலியில் உள்ள தனது வீட்டுக்கு வந்துள்ளார். இதனை தனஞ்சயன் அறிந்திருந்தார்.

அன்று இரவு வீட்டில் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது தனஞ்சயன் தனது நண்பர்கள் சிலருடன் ஓட்டோ ஒன்றில் வாளுடன் வந்துள்ளார்.

வீட்டில் வந்து இறங்கியவர் வெறிகொண்டு தூங்கிக் கொண்டிருந்த மனைவியின் குடும்பத்தவர்களை சராமாரியாக வெட்டியுள்ளார்.

சத்தம் கேட்டு எழுந்து வந்த மனைவி மற்றும் மைத்துனரையும் துரத்தித் துரத்தி வெட்டியுள்ளார்.

இவரது வாள்வெட்டுக்கு இலக்காகி படுகாயங்களுடன் கொலைச் சந்தேகநபரின் மனைவி மற்றும் அவரது சகோதரியின் கணவரான புதுமாப்பிள்ளை ஆகியோர் அலறி அடித்துக்கொண்டு வீட்டை விட்டு ஓடி கூச்சலிட்டுள்ளனர்.

இதனையடுத்து அயலவர்கள் திரண்டு வருவதற்குள் வீட்டில் இருந்த அனைவரையும் வெட்டிக் கொன்றுவிட்டு தனஞ்சயன் தப்பிச் சென்றுள்ளார்.

வீட்டிலிருந்தோர் இறந்து விட்டதை உறுதிசெய்த அயலவர்கள், காயமடைந்த கொலையாளியின் மனைவி மற்றும் மைத்துனரை மீட்டு வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்தத் தகவல்களை காயமடைந்து வைத்தியசாலையில் உள்ள கொலைச் சந்தேகநபரின் மனைவி பொலிஸாருக்கு வழங்கிய வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, மூர்க்கத்தனமாக வெட்டியதில் அண்மையில் திருமணமான மனைவியின் சகோதரியின் கை மற்றும் கைவிரல்கள் துண்டாகி ஆங்காங்கே தனித்தனியாக விழுந்து கிடந்த நிலையில் மீட்கப்பட்டன. அவரது கழுத்தின் பின்புறமாக பாரிய வெட்டு விழுந்துள்ளது.

இதேபோன்றே மனைவியின் தாய், சகோதரன் ஆகியோரையும் மூர்க்கத்தனமாக கொலையாளி வெட்டிக் கொன்றுள்ளார்.

சம்பவம் தொடர்பாக அச்சுவேலிப் பொலிஸாருக்குத் தகவல் கொடுக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு அச்சுவேலிப் பொலிஸாரும், அப்பகுதி இராணுவத்தினரும் விரைந்து வந்து விசாரணைகளை மேற்கொண்டனர்.

மல்லாகம் நீதிவான் நீதிமன்ற நீதிபதி ஜோய் மகிழ் மகாதேவா இன்று காலை சம்பவ இடத்தில் விசாரணைகளை மேற்கொண்டார்.

பின்னர் சடலங்கள் அங்கிருந்து மீட்கப்பட்டு அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டன. அங்கிருந்து மூவருடைய சடலமும் பிரேத பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

இந்தநிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் நேற்று காலை கோப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு, அச்சுவேலிப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

இந்தக் கொலைகள் தொடர்பில் மேற்கொண்ட ஆரம்ப விசாரணைகளின் அடிப்படையில் குறித்த நபரே கொலைகளுக்கு காரணம் என தெரியவந்ததனையடுத்து, ஊரெழுப் பகுதியில் மறைந்திருந்த குறித்த நபரை பொலிஸார் கைது செய்தனர்.

அதேவேளை,  இச்சம்பவத்துடன் தொடர்புடைய மற்றொரு நபரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் இந்த முக்கொலைக்கு பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும்  முச்சக்கரவண்டியொன்றினை மீட்டுள்ளதாகவும் அச்சுவேலிப் பொலிஸார் தெரிவித்தனர். புத்தூர், நவக்கிரி என்னும் இடத்தில் இருந்து மீட்கப்பட்ட இந்த முச்சக்கரவண்டியினுள் பெருமளவு இரத்தக்கறைகள் இருந்ததாகப் பொலிஸார் தெரிவித்தனர்..