siruppiddy

சனி, 28 நவம்பர், 2015

பிறந்தநாள் வாழ்த்து திரு. திருமதி செல்லத்துரை சிவகாமிஅம்மா (28.11.15)

யாழ் உடுவிலை பிறப்பிடமாகவும் நவக்கிரியை வசிப்பிடமககொண்ட  திரு  திருமதி செல்லத்துரை சிவகாமிஅம்மா வின் ( செவ்வந்தி )  என்பதாவது 
பிறந்த நாள் இன்று 28.11.2015 .இவரை அன்பு பிள்ளைகள்  மருமக்கள்   பெறமக்கள் 
  பேரப்பிள்ளைகள் ஊர் உறவுகள், குடும்ப உறவுகள் மற்றும் உற்றார் உறவினர்கள் இவரை நவக்கிரி ஸ்ரீ மானிக்கப்பிள்ளையர்  உடுவில் முருக மூர்த்தி ஆசியுடன்
சகல வளங்களும் பெற்று துன்பங்கள் எல்லாம் பறந்தோட இன்பங்கள் எல்லாம் வாசல் வர பிறந்த தினமான இன்றும் என்றும் இன்பமாய் எல்லாமும் பெற்று  
பல்லாண்டு பல்லாண்டு காலம் காலம் வாழ்க வாழ்க வென வாழ்த்துகின்றனர் 
இவர்களுடன் இணைந்து எமது நவக்கிரி http://lovithan.blogspot.ch/ lஇணையமும் நவக்கிரி.கொம் நிலாவரை .கொம் நவற்கிரி .கொம் இணைய ங்களும் வாழ்த்துகின்றன.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>


சனி, 21 நவம்பர், 2015

மது போதையில் இளைஞர்கள் வீதியில் பெரும் அட்டகாசம் !!!

மதுபோதையில் காரில் வந்த குழுவினர் இளைஞர் ஒருவர் மீது தாக்குதல் நடத்த முயற்சித்தமையினால் யாழ்ப்பாணம் திருநெல்வேலி பகுதியில் பரபரப்பான ஒரு நிலைமை ஏற்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் திருநெல்வேலி தபால்க்கட்டை சந்தியில்  (18,11.2015,புதன்கிழமை) இரவு 10 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த தாக்குதல் முயற்சி குறித்து மேலும் தெரியவருவதாவது :-
தபால்கட்டை சந்தியில் உள்ள ஒழுங்கையில் இருந்து இளைஞர் ஒருவர் பலாலி வீதிக்கு மோட்டார் சைக்கிளை செலுத்த முற்பட்டவேளை பலாலி வீதியில் திருநெல்வேலி சந்தி பக்கம் இருந்து கார் ஒன்று வேகமாக வந்துள்ளது.
அதனால் குறித்த இளைஞர் கார் சென்ற பின்னர் மோட்டார் சைக்கிளை செலுத்தும் நோக்குடன் ஒழுங்கை முகப்பில் மோட்டார் சைக்கிளை நிறுத்தி பார்த்துக்கொண்டு நின்றுள்ளார்.
அவ்வேளை காரில் வந்தவர்கள் திடீர் என்று இளைஞருக்கு அருகில் காரினை நிறுத்தி என்ன பார்க்கின்றாய் என தகாத வார்த்தைகளால் ஏசியவாறு காரை விட்டு இறங்கி மதுபான போத்தல்களை வீதியில் 
உடைத்துள்ளனர்.
அதனால் பயந்த இளைஞர் மோட்டார் சைக்கிளை வீதியில் போட்டு விட்டு ஒழுங்கைக்குள் ஓடியுள்ளார். அதனைத் தொடர்ந்து காரில் வந்த குழுவினர் வீதியில் மது போத்தல்களை அடித்து உடைத்ததுடன், இளைஞரின் மோட்டார் சைக்கிளையும் அடித்து நெருக்கி விட்டு அங்கிருந்து
 சென்றுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட இளைஞரினால் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. தன்னை ,,,,,,,எனும் இலக்கமுடைய காரில் வந்தவர்களே தாக்க முற்பட்டதாக பொலிசாரிடம் குறித்த இளைஞர் தெரிவித்துள்ளார்.
இத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் தப்பி சென்ற காரினை தேடும் நடவடிக்கையினையும் முன்னெடுத்துள்ளனர்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

வியாழன், 19 நவம்பர், 2015

வெள்ளை நாகம் அச்சுவேலியில்பிடிக்க ப்பட்டது

யாழ் அச்சுவேலியில் துனிசலுடன் பொது மக்களால்  மடக்கி பிடிபட்ட
பாடம் எடுத்தாடும் வெள்ளை நாகம்
அதன் நிழல்படங்கள் இணைப்பு 
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>


புதன், 18 நவம்பர், 2015

இனி இணையத்தில் லஞ்ச முறைப்பாடுகள் செய்யும் வசதி அறிமுகம்!

லஞ்ச ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைகுழு ,மக்களின் முறைப்பாடுகளை,இணையத்தளத்தின் ஊடாக அப்லோட் செய்யும் வசதிகளை, மக்களுக்குபெற்றுக்கொடுப்பதற்கு, தீர்மானித்துள்ளது.அடுத்த மாதம் 9ம் திகதி சர்வதேச ஊழல் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு
, ஜனாதிபதி
 மைத்திரிபால சிறிசேனா அவர்களின் தலைமையில் “,ஐ செட் எ ப்ரைபரி” என்ற இந்த இணையத்தளம் ,ஆரம்பித்து வைக்கப்பட உள்ளது என லஞ்ச ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இப்புதிய இணையத்தளத்தில் லஞ்சம் சம்பந்த்தப்பட்ட
 கொடுக்கல் 
வாங்கல்கள் ,அடங்கிய வீடியோ ஒலிப்பதிவுகள் மற்றும் புகைப்படங்கள் போன்றவற்றை ,முறைப்பாடுகளின் சாட்சிகளாக அனுப்பவும் வசதிகள் உண்டு.இவ்வாறு இணையத்தளத்தின் ஊடாக அனுப்பப்படும் முறைப்பாடுகளை பரீசீலிக்க தனியான ஒரு பிரிவும் ஒழுங்கு செய்ய திட்டமிடப்பட்டிள்ளது.
எது எவ்வாறு இருப்பினும்,இந்த இணையத்தளத்தினூடாக போலியான முறைப்பாடுகள் அனுப்பப்படுமிடத்து, அந்த முறைப்பாட்டை செய்தவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு,குற்றம் 
ஒப்புவிக்கப்படின்
 10 வருட சிறைத்தண்டனைக்கும்
 உள்ளாக, இடம் உள்ளதாக ,ஆணைக்குழுவின் அத்தியட்சகர் நாயகம் தில்ருக்ஷி டயஸ் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.மேலும் அவர் கூறுகையில்,”இந்த இணையத்தள செயற்பாடுகள்
 முதலாவதாக
 இந்தியாவில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் உலகின் பல நாடுகளில் இவ்வாறான முறை நடை முறையில் உள்ளதாகவும் கூறினார்
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

சனி, 14 நவம்பர், 2015

மகளைக் முதலையிடமிருந்து காப்பாற்றிய தந்தை

முதலையிடம் அகப்பட்ட தனது 14 வயது பிள்ளையைக் தந்தை ஒருவர் காப்பாற்றிய சம்பவம் கிளிநொச்சியில் நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவத்தில், 14 வயதுடைய த.விதுசா என்ற சிறுமியே முதலையின் பிடியில் சிக்கியதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
வடக்கில் குறிப்பாக கிளிநொச்சியில் பெய்துவரும் மழையினால் ஏற்பட்ட வெள்ளத்தில் முதலை ஒன்று மிதந்து வந்து மக்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக திகழ்கின்றது.
இவ்வாறு, மிதந்துவந்த முதலை கிளிநொச்சி ஆனந்தபுரம் கிழக்கு பிரதேசத்தில், வீட்டில் நித்திரையிலிருந்த 14 வயது சிறுமியின் தலையை பிடித்து இழுத்துள்ளது.
இதன்போது  விழித்துக் கொண்ட சிறுமியின் தந்தை துரிதமாக செயற்பட்டு சிறுமியை முதலையிடமிருந்து காப்பாற்றி வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

வெள்ளி, 13 நவம்பர், 2015

பிறந்த நாள் வாழ்த்து திரு சுந்தரலிங்கம் அருந்தவராஜா (12.:11:15)

யாழ் சிறுப்பிட்டியை பிறப்பிட்டமாகவும் சுவிஸ் சூரிச் மாநிலத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திரு சுந்தரலிங்கம்  அருந்தவராஜா 
  (அருண் )அவர்களின் பிறந்த நாள் இன்று12.11.2015.. இவரை அன்பு மனைவி, பிள்ளைகள் குடும்ப உறவுகள்,நண்பர்கள்,இவரை 
 நீண்ட ஆயுளோடும் நல்ல சுகத்தோடும் மனம் நிறைந்த மகிழ்ச்சியோடும் இன்று போல் என்றும் வாழ்க வாழ்க வென்று வாழ்த்துகின்றனர் இவரை சிறுப்பிட்டிஸ்ரீ ஞானவைரவர்   இறைஅருள் பெற்றுசகல சீரும்சிறப்பும் பெற்று பல்லாண்டு காலம் வாழ்க வாழ்க வென வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து
நவற்கிரி .கொம் நிலாவரை .கொம் நவக்கிரி.கொம், நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் வாழ்த்துகின்றனர்…
வாழ்கவளமுடன் 


புதன், 11 நவம்பர், 2015

வங்கியின் முன் குண்டுவெடிப்பு: 2 பேர் பலி சிலர் காயம் !!!

கெகிராவை நகரில் அமைந்துள்ள வங்கியொன்றின் முன் இடம்பெற்ற கைக்குண்டு வெடிப்பில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் சிலர் காயமடைந்துள்ளனர்.
கைக்குண்டுடன் வங்கியினுள் நபரொருவர் நுழைய முற்பட்டுள்ளார். இதன்போது அவரை பாதுகாப்பு ஊழியர் தடுக்க முயன்றதாகவும் இதன்போதே வெடிப்பு இடம்பெற்றுள்ளதாகவும் 
தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் காயமடைந்தோர் கெகிராவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் கைக்குண்டை
 கொண்டுவந்த நபர் மற்றும் பாதுகாப்பு ஊழியர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
கெகிராவ நகரின் தனியார் வங்கியொன்றுக்கு முன் இன்று பகல் ஏற்பட்ட வெடிப்பு சம்பவமொன்றில் ஒருவர் உயிழந்ததுடன் சிலர் காயமடைந்துள்ளதாக பொலிஸார்
 தெரிவித்துள்ளனர்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

ஞாயிறு, 8 நவம்பர், 2015

தனது கள்ளக்காதலியிடம் காதலனின் திருவிளையாடல்கள்…!

யாழில் முன்னாள் காதலியின் தங்கச்சங்கிலி மற்றும் கைத்தொலைபேசியை அபகரித்த வாலிபர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பண்டத்தரிப்பை சேர்ந்த வாலிபனே யாழ்ப்பாண பொலிசாரால் கைது
 செய்யப்பட்டுள்ளார்.
இவர்கள் இருவரும் நீண்டநாட்களாக தொடர்பை பேணி வந்துள்ளனர். எனினும் கடந்த சில நாட்களாக காதலி வாலிபரை விட்டு விலகிவிட்டார். வாலிபர் ஏற்கனவே திருமணமான விடயம் தெரிந்ததாலேயே யுவதி விலகியதாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் யாழ்ப்பாண நகரப்பகுதியில் இருவரும் எதிரும்புதிருமாக சந்தித்துள்ளனர். வாலிபனை யார் என்றே தெரியாத பாணியில் யுவதி சென்றிருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த வாலிபன் யுவதியின் தங்கச்சங்கிலி மற்றும் கைத்தொலைபேசியை 
பறித்துள்ளார்.
உடனடியாகவே யாழ்ப்பாண பொலிசாரிடம் யுவதி முறையிட்டார். வாலிபர் இப்பொழுது பொலிசாரால் கைதாகியுள்ளார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

வியாழன், 5 நவம்பர், 2015

நீங்கள் குளிர்ஊட்டும் கார் பயன்படுத்துபவரா???

A \C கார் பயன்படுத்துபவரா நீங்கள் .அப்படியானால் நீங்கள் இதை கண்டிப்பாக படிக்கவேண்டும் .
A \C காரை பயன்படுத்தும்போது எப்போதுமே காருக்குள் நுழைந்தவுடன் A \C ஐ இயக்கி ஜன்னலை மூடக்கூடாது...
காருக்குள் அமர்ந்தவுடன் காரின் ஜன்னல்களை ஒரு சில நிமிடங்களுக்கு திறந்து வைத்துவிட்டு அதன் பின்னர் தான் A \C ஐ இயக்கவேண்டும்.
இது குறித்து நிகழ்த்தப்பட்ட ஆராய்ச்சி முடிவுகளில் பல அதிர்ச்சி உண்மைகள் கண்டறியப்பட்டுள்ளன.
பொதுவாகவே அனைத்து கார்களுக்குள்ளும் அமைந்துள்ள DASHBOARD, இருக்கைகள் மற்றும் காருக்குள் உள்ள அனைத்து பிளாஸ்டிக்கினால் ஆன பாகங்கள் பென்சீன் எனப்படும் கேன்சரை உருவாக்கும் நச்சை உமிழ்கின்றன.
சாதாரணமாக மனித உடல் ஏற்றுக்கொள்ளும் பென்சீனின் அளவு சதுர அடிக்கு 50 மில்லி கிராம்
வீடுகளில் நிழலில் நிறுத்திவைக்கப்பட்டிருக்கும் காருக்குள் சதுர அடிக்கு 400 முதல் 800 மில்லி கிராம் என்ற அளவில் பென்சீன் இருக்கும்.
அதே வேளையில் வெயிலில் நிறுத்திவைக்கப்பட்டிருக்கும் காருக்குள் பென்சீனின் அளவு சதுர அடிக்கு 4000 மில்லி கிராம் வரையில் இருக்கும். இது மனித உடல் ஏற்றுக்கொள்ளும் அளவை விட 40 மடங்கு 
அதிகம்.
இதன் காரணமாக கேன்சர், லுக்கூமியா, சிறு நீரக பாதிப்பு கல்லீரல் பாதிப்பு போன்றவை ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன .
கார்களிலுள்ள ஜன்னல்களை சிறிது நேரம் திறந்து வைப்பதனால் அதிகப்படியான பென்சீன் வெளியேறிவிடும்.
எனவே இதை மறக்காமல் பின்பற்றுங்கள். நண்பர்கள் அனைவருக்கும் பரிமாறிக்கொள்ளுங்கள்
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>