siruppiddy

சனி, 14 நவம்பர், 2015

மகளைக் முதலையிடமிருந்து காப்பாற்றிய தந்தை

முதலையிடம் அகப்பட்ட தனது 14 வயது பிள்ளையைக் தந்தை ஒருவர் காப்பாற்றிய சம்பவம் கிளிநொச்சியில் நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவத்தில், 14 வயதுடைய த.விதுசா என்ற சிறுமியே முதலையின் பிடியில் சிக்கியதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
வடக்கில் குறிப்பாக கிளிநொச்சியில் பெய்துவரும் மழையினால் ஏற்பட்ட வெள்ளத்தில் முதலை ஒன்று மிதந்து வந்து மக்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக திகழ்கின்றது.
இவ்வாறு, மிதந்துவந்த முதலை கிளிநொச்சி ஆனந்தபுரம் கிழக்கு பிரதேசத்தில், வீட்டில் நித்திரையிலிருந்த 14 வயது சிறுமியின் தலையை பிடித்து இழுத்துள்ளது.
இதன்போது  விழித்துக் கொண்ட சிறுமியின் தந்தை துரிதமாக செயற்பட்டு சிறுமியை முதலையிடமிருந்து காப்பாற்றி வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக