siruppiddy

புதன், 11 நவம்பர், 2015

வங்கியின் முன் குண்டுவெடிப்பு: 2 பேர் பலி சிலர் காயம் !!!

கெகிராவை நகரில் அமைந்துள்ள வங்கியொன்றின் முன் இடம்பெற்ற கைக்குண்டு வெடிப்பில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் சிலர் காயமடைந்துள்ளனர்.
கைக்குண்டுடன் வங்கியினுள் நபரொருவர் நுழைய முற்பட்டுள்ளார். இதன்போது அவரை பாதுகாப்பு ஊழியர் தடுக்க முயன்றதாகவும் இதன்போதே வெடிப்பு இடம்பெற்றுள்ளதாகவும் 
தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் காயமடைந்தோர் கெகிராவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் கைக்குண்டை
 கொண்டுவந்த நபர் மற்றும் பாதுகாப்பு ஊழியர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
கெகிராவ நகரின் தனியார் வங்கியொன்றுக்கு முன் இன்று பகல் ஏற்பட்ட வெடிப்பு சம்பவமொன்றில் ஒருவர் உயிழந்ததுடன் சிலர் காயமடைந்துள்ளதாக பொலிஸார்
 தெரிவித்துள்ளனர்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக