siruppiddy

ஞாயிறு, 8 நவம்பர், 2015

தனது கள்ளக்காதலியிடம் காதலனின் திருவிளையாடல்கள்…!

யாழில் முன்னாள் காதலியின் தங்கச்சங்கிலி மற்றும் கைத்தொலைபேசியை அபகரித்த வாலிபர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பண்டத்தரிப்பை சேர்ந்த வாலிபனே யாழ்ப்பாண பொலிசாரால் கைது
 செய்யப்பட்டுள்ளார்.
இவர்கள் இருவரும் நீண்டநாட்களாக தொடர்பை பேணி வந்துள்ளனர். எனினும் கடந்த சில நாட்களாக காதலி வாலிபரை விட்டு விலகிவிட்டார். வாலிபர் ஏற்கனவே திருமணமான விடயம் தெரிந்ததாலேயே யுவதி விலகியதாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் யாழ்ப்பாண நகரப்பகுதியில் இருவரும் எதிரும்புதிருமாக சந்தித்துள்ளனர். வாலிபனை யார் என்றே தெரியாத பாணியில் யுவதி சென்றிருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த வாலிபன் யுவதியின் தங்கச்சங்கிலி மற்றும் கைத்தொலைபேசியை 
பறித்துள்ளார்.
உடனடியாகவே யாழ்ப்பாண பொலிசாரிடம் யுவதி முறையிட்டார். வாலிபர் இப்பொழுது பொலிசாரால் கைதாகியுள்ளார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக