siruppiddy

செவ்வாய், 26 மே, 2015

இன்று துப்பாக்கி சூடு!அரச பணியாளர் மரணம்!!

கிழக்கு மாகாணம் மட்டக்களப்பு, வெல்லாவெளி  மண்டூரில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ள  துப்பாக்கிச் சூட்டில் அரச பணியாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.நாவிதன்வெளி பிரதேச செயலக சமூக சேவை உத்தியோகஸ்தரான
 சச்சிதானந்தம் மதிதயான் (வயது 44) என்ற உத்தியோகஸ்தர் இனந்தெரியாதோரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி மரணித்துள்ளார்.
வீட்டினில் வைத்து சுடப்பட்ட அவர் படுகாயமடைந்த நிலையினில் உடனடியாக களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இருப்பினும், சிகிச்சை பயனின்றி அவர் மரணமடைந்துள்ளார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>
 

சனி, 23 மே, 2015

மழையால் சிறுபோக வெங்காயச் செய்கை பாதிப்பு

யாழ்.வலிகாமம் பிரதேசத்தில் அண்மையில் தொடர்ச்சியாகப் பெய்த கடும் மழை காரணமாக சிறு போக வெங்காயச் செய்கை மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
வலி.தெற்கு, வலி.வடக்கு, வலி.கிழக்குப் பிரதேசங்களில் செய்கை பண்ணப்பட்ட வெங்காயப் பயிர்களே அழிவடைந்துள்ளன. கடும் மழை காரணமாக வெங்காயப் பாத்திகளில் நீர் தேங்கி நின்றமையினாலேயே வெங்காயப் பயிர்கள் அழுகி அழிவடைந்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
பெருமளவு முதலீட்டில் வெங்காயச் செய்கை செய்த தாம் நஷ்டத்தை எதிர்நோக்கியுள்ளதாகத் தெரிவிக்கும் விவசாயிகள் மழை காரணமாகப் பாதிக்கப்பட்ட தமக்கு உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

திங்கள், 18 மே, 2015

பதின்மூன்று குழந்தைகளை பெற்றெடுத்த சந்தோஷத்தில் பெண்..!

அமெரிக்காவில் மிச்சிகன் பகுதியை சேர்ந்த ஜாய் (40), கதேரி சாச்வாண்ட் (40) தம்பதியினருக்கு, 13 குழந்தைகளும் ஆணாக பிறந்தமையால் அந்த தம்பதியினர் மகிழ்ச்சியில் உள்ளனர்.
டைலர் (22), ஷாச் (19), டிரோ (18), பிராண்டன் (16), டாமி (13), வின்னி (12), கால்வின் (10), கேபே (8), வெஸ்லி (6), சார்லி (5), லுகே (3), துகர் (21 மாதம்) என 12 குழந்தைகளுடன் தற்போது 13வது குழந்தையும் 
ஆணாக பிறந்துள்ளது.
12 ஆண் குழந்தைகளை பெற்றெடுத்த பெண்மணிக்கு, 13வதாக பிறந்த குழந்தையும் ஆண் குழந்தையாக பிறந்துள்ளதால் மகிழ்ச்சியில் உள்ளார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

வியாழன், 14 மே, 2015

வயோதிபரை, இராணுவ வாகனம் மோதியது???

யாழ்ப்பாணம் மல்லாகம் சந்திக்கு அண்மையில் செவ்வாய்க்கிழமை  மாலை துவிச்சக்கரவண்டியில் சென்ற வயோதிபரை, இராணுவ வாகனம் மோதியுள்ளது. இதனால் படுகாயமடைந்த முதியவர், யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தப்பியோடிய வாகனத்தையும், அதன் சாரதியையும் கைது செய்துள்ளதாக தெல்லிப்பழை பொலிஸார் தெரிவித்தனர்.
அளவெட்டி கணேசபுரத்தைச் சேர்ந்த தம்பிப்பிள்ளை பாலசுந்தரம் (வயது 54) என்பவரே இந்தவிபத்தில் படுகாயமடைந்துள்ளார். இதேவேளை, வயோதிபரை மோதிய இராணுவ வாகனம் நிற்காமல் தப்பிச் சென்றதையடுத்து இந்த விபத்துப்பற்றி தெல்லிப்பழை பொலிஸாருக்கு பொதுமக்கள் அறிவித்துள்ளனர்.
தெல்லிப்பழை பொலிஸார், மாவிட்டபுரம் சோதனை நிலையத்துக்கு தகவல் வழங்கியதையடுத்து, சோதனைச் சாவடியில் வைத்து, இராணுவப் பொலிஸாரால் சாரதி கைது செய்யப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார். மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெல்லிப்பழை பொலிஸார் கூறினர். இந்த விபத்தில் காயம் அடைந்தவருடைய உடைமையிலிருந்த வங்கி அடைவு பற்றுச்சீட்டின் மூலம் கணேசபுரம் என அடையாளம் காணப்பட்டுள்ளார்

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

ஞாயிறு, 10 மே, 2015

திரும்பிச் சென்ற மலேஷியன் விமானத்தின் மர்மம்

சேவைக்குச் சொந்தமான எம்.எச். 176 என்ற குறித்த விமானம் ஏன் இவ்வாறு திரும்பிச் சென்றது என்பதற்கான காரணம் தற்போது வௌியாகியுள்ளது. விமானத்தில் இருந்த பயணி
ஒருவர் குடித்து விட்டு குழப்பம் விளைவித்தமையினாலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக மலேஷியன் ஏயார்லயின்ஸ் வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனையடுத்து குறித்த விமானம் இன்று காலை 10.06க்கு நாட்டை வந்தடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>> 

 

அதிகமாக பரவும் வட சிறுநீரக கோளாறு நோய்???


 முல்லைத்தீவு மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் சிறுநீரக கோளாறு தொடர்பான நோய் அதிகமாக பரவி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரச பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட்ட விரிவுரையாளர் கலாநிதி சன்ன ஜயசுமன இதனைத் தெரிவித்துள்ளார்.
விவசாயத்துக்காக பயன்படுத்தப்படுகின்ற களைகொல்லிகளால் இந்த நோய் பரவுகிறது.
முதலில் அனுராதபுரம் மற்றும் பொலனறுவை மாவட்டங்களில் அதிகமாக இந்த நோய் பரவி இருந்த நிலையில், தற்போது முல்லைத்தீவு, வவுனியா மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களிலும் பரவியுள்ளது.
இதனை தடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கின்ற போதும், அதில் முன்னேற்றங்கள் எதனையும் அவதானிக்க முடியவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

வெள்ளி, 8 மே, 2015

நினைவஞ்சலி அமரர் திரு தாமோதரம்பிள்ளை வேலுப்பிள்ளை

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
அமரர் திரு தாமோதரம்பிள்ளை வேலுப்பிள்ளை
பிறப்பு : 10 ஒக்ரோபர் 1953 — இறப்பு : 6 ஏப்ரல் 2015
யாழ். நிலாவரை நவற்கிரியைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த தாமோதரம்பிள்ளை வேலுப்பிள்ளை அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
தம்பி என்ற வார்த்தையே எனக்கு உலகம் 
நீங்கள் எங்களைப் பிரிந்து நாட்கள் 
முப்பத்தொன்று ஆனாலும் சரி 
எத்தனை வருடம் ஆனாலும் சரி 
உங்கள் நினைவு எம்மைவிட்டு அகலாது 
உங்கள் பிரிவின் எங்கள் வலிகளைத் தாங்க 
எந்தத் தோள்களும் தயாராகவும் இல்லை 
எங்கள் வலிகளை இறக்கி வைக்கவும் ஆறுதல் 
கூறவும் யாருக்கும் வார்த்தைகளும் வருவது இல்லை 
நீர் என் கனவில் வருவதும் இல்லை- ஏன்னென்றால் 
நான் உன் இழப்பால் தூங்குவதும் இல்லை 
எதை இழந்த போதிலும் நம்பிக்கை ஒன்றே 
கைகொடுக்கும் என்று காத்து இருக்கின்றோம் 
நாம் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் நாம் 
அண்ணன் தம்பியாய் பிறக்க வேண்டும் 
நீர் மீண்டும் தம்பியாய் பிறந்தால் உங்களைத் 
தாங்கி உம் அண்ணணாய் ஆறுதல் தருவேன்
உங்கள் பாசத்தை புரியாதவர்கள் இவ்வுலகில் 
மானிடராய் பிறந்ததிற்கு வெட்கப்பட வேண்டும்
தூத்துவார் தூத்தற்றும் போற்றுவார் போற்றட்டும் 
அண்ணணின் பாசம் என்றைக்கும் குறையாது 
என்றும் உங்கள் பசுமையான நினைவுகளுடன் 
தங்கள் ஆத்மா சாந்தியடைய வேண்டுகின்றேன். 
உம் பிரிவால் வாடும் உம் உடன்பிறப்புக்கள், உற்றார், உறவினர், 
நண்பர்கள் மற்றும் பாஸ்கரன் குடும்பத்தினர்(கனடா),பெறாமக்கள், மருமக்கள்.
தம்பியின் மரணச்செய்திகேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நம் இல்லம் நாடி வந்தும், தொலைபேசியூடாகவும், மின்னஞ்சல் மூலமாகவும் உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் இருந்து எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், இறுதி நிகழ்வில் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்திய உற்றார், உறவினர், மற்றும் நண்பர்களுக்கும், எல்லா உதவிகளைச் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எனது சார்பிலும், எமது குடும்பத்தினர் சார்பிலும் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் அந்தியேட்டிக்கிரியை 06-05-2015 புதன்கிழமை அன்று நவற்கிரியில் உள்ள அவரது சகோதரியின் இல்லத்தில் நடைபெற்றது 
நினைவஞ்சலி அன்னாரின் ஆத்மா சாந்தி அடய இந்த நவக்கிரி .கொம் நிலாவரை .கொம் 
இணையங்களும் இறைவனை பிரத்திக்கின்றது 
தகவல்
அண்ணன்
தொடர்புகளுக்கு
இரத்தினம்(சகோதரி) — இலங்கை
செல்லிடப்பேசி: +94765330521
செல்வா(சகோதரர்) — கனடா
தொலைபேசி: +12895334876
செல்லிடப்பேசி: +14169384118
செல்வா(சகோதரர்) — கனடா
தொலைபேசி: +19058515780
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

புதன், 6 மே, 2015

பொதுத்தேர்தல் வேட்பாளர் இடைநிறுத்தம்!

பிரித்தானியாவின் நாடாளுமன்ற வேட்பாளர் ஒருவர் அவரது கட்சியில் இருந்து உடனடியாக இடைநிறுத்தப்பட்டுள்ளார்.
கொன்வவேட்டிவ் கட்சியின் வேட்பாளரான இலங்கை வம்சாவளி ஒருவருக்கு அச்சுறுத்தல் விடுத்தார் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே ரொபட் பிலே என்ற இந்த வேட்பாளர் இடைநிறுத்தப்பட்டுள்ளார் என்று டெய்லி மிரர் தெரிவித்துள்ளது.
வடகிழக்கு ஹம்செயார் பகுதியின் கொன்சவேட்டிவ் கட்சியின் வேட்பாளரான ரணில் ஜெயவர்த்தனவுக்கே இவர் அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.
ரணில் ஜெயவர்த்தன, பிரித்தானியாவில் முதல் ஆசிய நாடாளுமன்ற உறுப்பினராக வர வாய்ப்பிருக்கிறது.
எனில் அவர் மீது துப்பாக்கியால் சுடுவேன் என்று பிலே பிரசாரக்கூட்டம் ஒன்றின்போது எச்சரித்திருந்தார்.
இது தொடர்பான காணொளியும் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே ரவி ஜெயவர்த்தன போட்டியிடும் வடகிழக்கு ஹம்சயார் பகுதியில் கொன்சவேட்டிவ் கட்சி 18,500 வாக்குகளால் கடந்த தேர்தலிலும் முன்னிலை வகித்தமை குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

செவ்வாய், 5 மே, 2015

அருவியாற்றில் காணாமல்போன சகோதரர்கள் சடலமாக மீட்பு

மன்னார் நானாட்டான் அருவியாற்றில் நேற்று திங்கட்கிழமை குளிக்கச் சென்று காணாமல் போன ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு சகோதரர்களும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
மன்னார் தாராபுரத்தைச் சேர்ந்த முஹம்மது சிபான் வயது 26, முஹம்மது முபாஸ் வயது 18 ஆகிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூத்த மற்றும் மூன்றாவது சகோதரர்களே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது:
குறித்த சகோதரர்கள் தமது குடும்பத்தினர் சகிதம், நேற்று நண்பகல் நானாட்டான் பிரதேசத்திலுள்ள அருவியாற்றுக்குச் சென்றுள்ளனர்.
இதன்போது மூன்றாவது சகோதரரான 18 வயதுடைய இளைஞர் ஆற்றில் குளிப்பதற்காகச் சென்றுள்ளார்.
அப்போது தமது சகோதரன் நீரில் அடித்துச் செல்லப்படுவதை அவதானித்த இரு சகோதரர்களும் அவரை காப்பாற்றுவதற்காக ஆற்றுக்குள் பாய்ந்துள்ளனர்.
எனினும் எதிர்பாராத வகையில் மூத்த மற்றும் மூன்றாவது சகோதரர்கள் இருவரும் காணாமல் போயுள்ளனர்.
இதனையடுத்து இரண்டாவது சகோதரர் மற்றும் உறவினர்கள் சம்பவம் பற்றி பிரதேச மக்களுக்கு தெரியப்படுத்தியதுடன், இரு சகோதரர்கள் காணாமல் போனமை பற்றி நானாட்டான் பொலிஸில் முறைப்பாடு செய்தனர்.
இதனையடுத்து நண்பர்கள், பிரதேசவாசிகள், கடற்படையினர் கூட்டாக இணைந்து காணாமல் போனவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
நேற்று பிற்பகல் மூன்று மணிக்கு காணாமல் போன இரு சகோதரர்களும் மாலை ஆறு மணியளவில் சடலமாக மீட்கப்பட்டனர்.
மீட்கப்பட்ட இரு சடலங்களும் மன்னார் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.
மன்னார் நானாட்டான் பிரதேசத்திலுள்ள குறித்த அருவியாற்றில் இதற்கு முன்னரும் பலர் குளிக்கச் சென்ற போது நீரில் அடித்துச் செல்லப்பட்டு பின் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

சனி, 2 மே, 2015

விபத்தில் 8 வயது சிறுமி பலி : 13 பேர் காயம்

சிறிய ட்ரக் வண்டி ஒன்று, வேகத்தை கட்டுப்படுத்த முடியாது வீதியைவிட்டு விலகிச் சென்று விபத்துக்கள்ளானதில் சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளதோடு, மேலும் 13 பேர் காயமடைந்துள்ளனர்.
தம்புத்தேகம – கோன்வெவ பிரதேசத்தில் இடம்பெற்ற குறித்த விபத்தில் எட்டு வயது சிறுமி ஒருவரே இவ்வாறு பலியாகியுள்ளார்.
விபத்தில் காயமடைந்த 13 பேரும் தம்புத்தேகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வேளை, அவற்றில் இரு பெண்கள் மேலதிக சிகிச்சைகளுக்காக அனுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>