siruppiddy

சனி, 23 ஜனவரி, 2016

வீட்டுக்கு மைத்துனரைஅழைத்து கோடாரி கொத்து!

யாழ் குப்பிளானில் தனது மைத்துனரை வீட்டுக்கு அழைத்துச் சென்று அவரை கோடாரியால் கொத்திய சம்பவம் குப்பிளான் வடக்கில், நேற்று மாலை 
இடம்பெற்றுள்ளது.
தில் படுகாயமடைந்த சீவரத்தினம் ஜீவராஜ் (வயது 38) என்பவர் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த நபர், தனது மனைவியின் தங்கையின் அலைபேசியிலிருந்து தனக்கு அழைப்பொன்று வந்ததாக மனைவியின் தங்கையின் கணவரிடம் தெரிவித்துள்ளார். எனினும் அதனை மறுத்த அவர் அழைப்பு வந்ததைக் காட்டுமாறு கூறியுள்ளார்.
அலைபேசியில் இருக்கும் அழைப்பைக் காட்டுவதற்காக மனைவியின் தங்கையையும், அவருடைய கணவரையும் அவர் தனது வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு வைத்து மனைவியின் தங்கையின் கணவரை கோடாரியால் கொத்தியுள்ளார்.
இது தொடர்பில் கொத்து வாங்கியவரின் மனைவி, சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு
 வருகின்றனர்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

செவ்வாய், 19 ஜனவரி, 2016

திருமணநாள் வாழ்த்துகள் திரு திருமதி சுதாகரன் 19.01.16.

யாழ். இராசாவின் தோட்டத்தைப் பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகவும்கொண்ட திரு :திருமதி ,சுதாகரன். தம்பதிகள் சூரிச்மாநிலத்தில் இன்று 19.01.2016..பதின் நான்காவது திருமண நாளை தனது இல்லத்தில்;மிக சிறப்பாக கொண்டாடுகின்றனர் .இவர்களை அன்பு மகள் மகன் அண்ணா அண்ணி அக்கா அத்தான் மருமகள்
 மாமா மாமி மார் பெரியப்பா ,பெரியம்மாமார் சித்தப்பா சித்தி மார் அண்ணா தம்பி மார் சகோதரிகள் மச்சான் மச்சாள் மார் 
உற்றார் உறவினர்கள் நண்பர்களும் இவர்களை நல்லைகந்தன் இறைஅருள் பெற்று இன்று போல் என்றும் சீரும் சிறப்புடன் சகல செல்வங்களும் பெற்று சீரும் சிறப்புடன் பல்லாண்டு  பல்லாண்டு காலம்  நீடுழி வாழ்க வாழ்கவென.  வாழ்த்துகின்றனர்
 இவர்களுடன் இணைந்து நவக்கிரி   http://lovithan.blogspot.chநவக்கிரி .கொம் 
                          நவற்கிரி .கொம் நிலாவரை.கொம் 
              இணையங்களும்  
                       வாழ்த்துகின்றது 
                       .வாழ்க வளமுடன் 
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>>



சனி, 16 ஜனவரி, 2016

மூடுபனி யால் போக்குவரத்தில் சிக்கல்!!!

மாத்தறையின் குறிப்பிட்ட சில பகுதிகளில் மூடுபனியுடனான காலநிலை நிலவுகின்றது. திஹதகொட, நாதுகல மற்றும் யட்டியாந்தோட்டை ஆகிய பகுதிகளில் மூடுபனி 
நிலவி வருவதை அவதானிக்கக் 
கூடியதாகவுள்ளது. இதன் காரணமாக சாரதிகள் போக்குவரத்தினை மேற்கொள்வதில் பெரும் சிக்கல்களை எதிர்நோக்கியுள்ளனர்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>


திங்கள், 11 ஜனவரி, 2016

வீட்டில் இப்படியான அறிவியல் சோதனைகளை செய்து பார்த்ததுண்டா!

எல்லோருக்கும் இயற்கையாகவே யோசனை வருவது சகஜம் அதை அவர்கள் எப்படி உபயோகிப்பர் என்பதில் தான் அவர்களுடைய திறமையே ஒளிந்து கொண்டிருக்கும். அதை பலரும் சரியான வகையில் 
உபயோகிப்பார்கள்.
அதே போல் இங்கு ஒருவர் தன்னுடை திறமையின் மூலம் அவருக்கு தோன்றிய சில அறிவியல் சோதனையை செய்து பார்த்துள்ளார். அப்படி அவர் செய்து பார்த்த அறிவியல் சோதனையை நீங்களே கானொளியில் காணுங்கள்.
அவர் செய்வது போல் உங்களுக்கும் தற்போது செய்து பார்க்க
 வேண்டும் என்ற 
ஆசை இருக்க தான் செய்யும். இதை நீங்களும் வீட்டில் செய்துப்பார்க்கலாம். முடிந்த வரை இதை மற்றவர்களுக்கு
 பகிருங்கள்
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>



ஞாயிறு, 3 ஜனவரி, 2016

வீதிகளில் தரிப்பிடம் இல்லாதஇடங்களில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு கட்டணம் அறவிட தீர்மானம்

கொழும்பு காலி வீதி மற்றும் ஆர். ஏ. டி மெல் மாவத்தை ஆகிய பாதைகளின் இரு மருங்கு மற்றும் குறித்த வீதிகள் தொடர்புபடும் அனைத்து கிளை வீதிகளின் இரு மருங்குகளிலும் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு கட்டணம் அறவிடுவதற்கு கொழும்பு மாநகர சபை 
தீர்மானித்துள்ளது.
அதற்கமைய தெஹிவளை மேம்பாலம் தொடக்கம் கலதாரி சுற்றுவட்டம் வரையும், ஆர். ஏ. டி மெல் மாவத்தையில் தம்மாராம வீதி தொடக்கம் லிபேட்டி சுற்றுவட்டம் வரையும் எந்த இடத்திலாவது வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததாலும் கட்டணம் 
அறவிடப்படவுள்ளது.
குறித்த பிரதான வீதிகளுக்கு மேலதிகமாக அந்த பாதையுடன் தொடர்புபடும் கிளை வீதிகளில் நிறுத்தி வைக்கப்படும் வாகனங்களுக்கும் கட்டணம் அறவிடப்படவுள்ளது.
இது தொடர்பான அறிவித்தல்கள் இன்று அப்பிரதேசத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களில் ஒட்டப்பட்டுள்ளன.
குறித்த அறிவித்தலுக்கு அமைய,
மோட்டார் சைக்கிளில் ஒன்று ஒரு மணித்தியாலம் நிறுத்தி வைக்க 10 ரூபாய் அறவிடப்படுவதாகவும்,
கார் ஒன்று ஒரு மணித்தியாலம் நிறுத்தி வைக்க 30 ரூபாய் அறவிடப்படுவதாகவும்,
முச்சக்கரவண்டி ஒன்றுக்கு ஒரு மணித்தியாலத்திற்கு 20 ரூபாய் அறவிடப்படுவதாகவும்,
அனைத்துவிதமான லொறி வகைகளும் ஒரு மணித்தியாலம் நிறுத்தி வைக்க 50 ரூபாய் அறவிடப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தனியார் நிறுவனம் ஒன்றுடன் இணைந்து கொழும்பு மாநகர சபை இத்திட்டத்தை இன்று தொடக்கம் 
முன்னெடுக்கவுள்ளது.
மிகவும் சிறந்த சாலை ஒழுக்கம் மற்றும் மிகவும் முன்னேற்றகரமான வாகன தரிப்பிடம் திட்டத்தின் ஊடாக கொழும்பு நகரின் வாகன நெரிசலை குறைப்பது இத்திட்டத்தின் நோக்கம் என அந்த அறிவித்தலில் 
தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தினம் தோறும் கொழும்பு காரியாலயங்களில் தொழில் நிமித்தம் வருகை தரும் வாகன உரிமையாளர்கள் இத்திட்டத்திற்கு பலத்த எதிர்ப்பைத் தெரிவித்துள்ளதோடு,இத்திட்டத்தின் காரணமாக தாம் தினமும் 250 ரூபாய் செலவிடவேண்டியுள்ளதாகவும் அவர்கள் 
தெரிவித்துள்ளனர்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>