siruppiddy

ஞாயிறு, 3 ஜனவரி, 2016

வீதிகளில் தரிப்பிடம் இல்லாதஇடங்களில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு கட்டணம் அறவிட தீர்மானம்

கொழும்பு காலி வீதி மற்றும் ஆர். ஏ. டி மெல் மாவத்தை ஆகிய பாதைகளின் இரு மருங்கு மற்றும் குறித்த வீதிகள் தொடர்புபடும் அனைத்து கிளை வீதிகளின் இரு மருங்குகளிலும் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு கட்டணம் அறவிடுவதற்கு கொழும்பு மாநகர சபை 
தீர்மானித்துள்ளது.
அதற்கமைய தெஹிவளை மேம்பாலம் தொடக்கம் கலதாரி சுற்றுவட்டம் வரையும், ஆர். ஏ. டி மெல் மாவத்தையில் தம்மாராம வீதி தொடக்கம் லிபேட்டி சுற்றுவட்டம் வரையும் எந்த இடத்திலாவது வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததாலும் கட்டணம் 
அறவிடப்படவுள்ளது.
குறித்த பிரதான வீதிகளுக்கு மேலதிகமாக அந்த பாதையுடன் தொடர்புபடும் கிளை வீதிகளில் நிறுத்தி வைக்கப்படும் வாகனங்களுக்கும் கட்டணம் அறவிடப்படவுள்ளது.
இது தொடர்பான அறிவித்தல்கள் இன்று அப்பிரதேசத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களில் ஒட்டப்பட்டுள்ளன.
குறித்த அறிவித்தலுக்கு அமைய,
மோட்டார் சைக்கிளில் ஒன்று ஒரு மணித்தியாலம் நிறுத்தி வைக்க 10 ரூபாய் அறவிடப்படுவதாகவும்,
கார் ஒன்று ஒரு மணித்தியாலம் நிறுத்தி வைக்க 30 ரூபாய் அறவிடப்படுவதாகவும்,
முச்சக்கரவண்டி ஒன்றுக்கு ஒரு மணித்தியாலத்திற்கு 20 ரூபாய் அறவிடப்படுவதாகவும்,
அனைத்துவிதமான லொறி வகைகளும் ஒரு மணித்தியாலம் நிறுத்தி வைக்க 50 ரூபாய் அறவிடப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தனியார் நிறுவனம் ஒன்றுடன் இணைந்து கொழும்பு மாநகர சபை இத்திட்டத்தை இன்று தொடக்கம் 
முன்னெடுக்கவுள்ளது.
மிகவும் சிறந்த சாலை ஒழுக்கம் மற்றும் மிகவும் முன்னேற்றகரமான வாகன தரிப்பிடம் திட்டத்தின் ஊடாக கொழும்பு நகரின் வாகன நெரிசலை குறைப்பது இத்திட்டத்தின் நோக்கம் என அந்த அறிவித்தலில் 
தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தினம் தோறும் கொழும்பு காரியாலயங்களில் தொழில் நிமித்தம் வருகை தரும் வாகன உரிமையாளர்கள் இத்திட்டத்திற்கு பலத்த எதிர்ப்பைத் தெரிவித்துள்ளதோடு,இத்திட்டத்தின் காரணமாக தாம் தினமும் 250 ரூபாய் செலவிடவேண்டியுள்ளதாகவும் அவர்கள் 
தெரிவித்துள்ளனர்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக