பெருங்குளம் நவதிருப்பதி ஸ்தலம் பெருங்குளம் கோவில், கிராமம் பரம்பரை ஜோதிடர் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர் MCA, MA(Ast) அவர்கள் கணித்து எழுதியுள்ள விரிவான ஜோதிட பலன்களை இங்கே காணலாம்.
சனிப்பெயர்ச்சி:
நிகழும் மங்களகரமான கொல்லம் 1190ம் ஆண்டு ஸ்ரீஜய வருஷம் தக்ஷிணாயனம் ஹேமந்த ரிது மார்கழி மாதம் 1ம் தேதி - 16.12.2014 செவ்வாய்கிழமையும் கிருஷ்ண தசமியும் ஹஸ்த நக்ஷத்ரமும் ஸௌபாக்ய நாம யோகமும் வணிசை கரணமும் சித்தயோகமும் கூடிய சுபயோக சுபதினத்தில் உதயாதி நாழிகை 20.40க்கு (பகல் மணி 2.44) வாக்கியப் பஞ்சாங்கப்படி சனிபகவான் துலா ராசியிலிருந்து விருச்சிக ராசிக்குள் பிரவேசிக்கிறார். அடுத்த இரண்டரை வருட காலத்திற்கு விருச்சிக ராசியிலிருந்து சனி பகவான் அருள் புரிவார்.
இதனால் ஏற்படும் லோக பலன்கள்:
நல்ல மழையும் பசுமையும் உண்டாகும். விவசாயம் கால்நடை வளர்ச்சி பெறும். இதர துறைகளிலும் நாடு வளர்ச்சி பாதயை நோக்கி முன்னேறும். செவ்வாய் வீட்டில் சனி அமர்வதால் நாட்டையும் வீட்டையும் பலவிதங்களில் தொல்லைப்படுத்தும் சமூக சீர்கேட்டாளார்கள் அழிக்கப்படுவர். ரியல் எஸ்டேட் துறை ஏற்ற இறக்கமாக இருக்கும். மக்களிடம் பணத் தட்டுப்பாடு நீங்கி அதிக அளவில் பணப்புழக்கம் ஏற்படும். பொன் பொருள் விலை மிகவும் அதிகரிக்கும். பொருளாதாரம் நிலையில் புதிய மாற்றம் ஏற்படும். ஆலயங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெறும். அடிக்கடி முக்கிய கடல்களில் நீர்மட்டங்களில் மாற்றம் இருந்து கொண்டே இருக்கும். அதனால் முக்கிய துறைமுகங்கள் பெரிய அளவில் பாதிக்கப்படலாம். முக்கிய தேவாலயங்களுக்கு ஏற்பட்ட பிரச்சனைகள் சமாதானம் ஏற்படும். புண்ணிய க்ஷேத்திரங்களில் விபத்துகள் ஏற்படலாம். மலைவாசஸ்தலங்களில் பனிமூட்டம் அதிகமாக இருக்கும். நிலச்சரிவுகள் ஏற்படலாம். அரசாங்கத்திற்கு எதிராக கடத்தல்கள் அதிகரிக்கும். ஆனால் அரசாங்கம் அவற்றை பரிமுதல்களும் செய்யலாம். வியாழக்கிழமைகளில் நல்ல காரியங்களை ஆரம்பிப்பதும் செய்வதும் நன்மையைத் தரும். இந்தோனேஷியா, பர்மா, சுமத்ரா, கரீபியன் தீவுகள், கொரியா, ஆஸ்திரேலியா, வட அமேரிக்கா போன்ற இடங்களில் இயற்கை சீற்ற பாதிப்புகள் ஏற்படலாம். வளைகுடா நாடுகள் மற்றும் ஆப்பிரிக்கா தேசங்களில் கலவரங்கள் ஏற்பட்டு மறையும். சனியை ராகு பார்ப்பதால் அரசில் குழப்ப நிலைமையும் பல புதிய மாற்றம் ஏற்படுதலும் நிகழும். சாதாரண மக்களையும் செல்வந்தனாக்கிவிடும். நாட்டில் பல இடங்களில் தெய்வகாரியம், பூஜைகள் விசேஷமாக நடக்கும். தொழில்துறையில் தமிழ்நாடு செழித்து வளரும். அரசாங்கத்திற்கு தலைவலியாக இருந்த பிரச்னைகள் அனைத்தும் அடங்கிவிடும். காவல்துறை மேலும் வலிமையும் முன்னேற்றமும் வசதிகளும் பெற்று நல்ல புகழ் அடையும். உயர்பதவிகளில் இருக்கும் பெண்களுக்கு இது யோகமான நேரம். உலகில் பல நாடுகள் மழை வெள்ளத்தால் பாதிப்பு அடையும். இயற்கை சீற்றம் – பூகம்ப பாதிப்பு ஏற்படும். பல நாடுகளில் புரட்சி வெடிக்கலாம். மேலை நாடுகளில் உள்ள தலைவர்களுக்கு தலைவலியான நேரம். தேவை இல்லாமல் சண்டை சச்சரவு வரலாம். தீவிரவாதத்தால் பிரச்னைகள் வந்தாலும் அடங்கிவிடும். தங்கம் விலை மேலும் அதிரடியாக உயரும்
சனி த்யான ஸ்லோகம்
நீலாஞ்சன ஸமாபாஸம் ரவிபுத்ரம் யமாக்ரஜம்ச்சாயா மார்த்தாண்ட ஸம்பூதம் தம் நமாமி ஸநைச்சரம்!
காயத்ரி
ஓம் காகத்வஜாய வித்மஹே கட்க ஹஸ்தாய தீமஹி தந்நோ மந்த ப்ரசோதயாத்.!தமிழ் துதி
சங்கடம் தீர்க்கும் சனிபகவானே மங்களம் பொங்க மனம் வைத்தருள்வாய்
சச்சரவின்றி சனீஸ்வர தேவே இச்சகம் வாழ இன்னருள் தா! தா!
ஏழரை நாட்டு சனி என்றால் என்ன?
சனி பகவான் ஒரு ராசியில் இரண்டரை ஆண்டுகள் சஞ்சரிப்பார். ஒருவரின் ராசியிலிருந்து பன்னிரண்டாம் ராசியில் சனி பகவான் சஞ்சரிக்கும்போது விரைய சனி அல்லது சிரசு சனி என்றும், ராசியில் அதாவது 1ஆம் வீட்டில் சஞ்சரிக்கும்போது ஜென்ம சனி என்றும், இரண்டாம் ராசியில் சஞ்சரிக்கும்போது பாத சனி அல்லது வாக்கு சனி என்றும் பெயர். இந்த நிலை முப்பது வருடங்களுக்கு ஒரு முறை ஏற்படும். முதல் சுற்று அதாவது ராசியை சனி பகவான் கடந்து செல்வது சங்கடங்களையும் இடர்களையும் தரும். இந்த ஏழரை ஆண்டு காலத்தை மங்கு சனி என்பர். இரண்டாவது சுற்று பொங்கும் சனி என்பதாகும். இதில் கடினமான பலன்கள் குறைந்து புதிய முன்னேற்றத்திற்கு அடித்தளம் ஏற்படும். மூன்றாவது சுற்று மரண சனி எனப்படும். இந்தக் காலகட்டத்தில் சில கண்டங்கள் ஏற்பட்டு விலகும். பொதுவாக ஏழரை சனி காலத்தில் நமக்கு சனி பகவான் கஷ்டங்களைக் கொடுத்து சரியான பாதையில் செல்ல நம்மை பக்குவப்படுத்துகிறார். எப்படி கல்லை செதுக்கி செதுக்கி சிற்பமாக ஆக்குகிறார்களோ, அதேபோன்று நம்மை கஷ்டங்களுக்கு உட்படுத்தி சமுதாயத்திற்குப் பயன்படக்கூடிய வகையில் சனி மாற்றுகிறார் என்றால் மிகையாகாது.
இதேபோன்று ராசிக்கு நான்காம் இடத்தில் சஞ்சரிக்கும்போது அர்தாஷ்டம சனி என்றும், ராசிக்கு எட்டாம் இடத்தில் சஞ்சரிக்கும்போது அஷ்டம சனி என்றும் பெயர்.
கைரேகையில் சனிபகவான்:
சனி மேடு: உள்ளங்கையில் சனி மேடு(சனி விரலான நடு விரலுக்கு கீழ் உள்ள பகுதி) பெரிதாக, நேர்கோடுகள் நன்றாக அமைந்திருந்தால் சிறப்பு. இதனால் கடமையுணர்ச்சி, திட சிந்தனை, பொறுப்புணர்வு ஆகியவை வளரும்.
ஜாதகத்தில் சனீஸ்வரர் பலம் பொருந்தியிருந்தால் என்ன பலன்:
சனி பகவான் கர்மகாரகர் என்று அழைக்கப்படுகிறார். இவரின் பலம் பெற்றவர்கள் அதிகம் உழைக்க வேண்டிவரும். எந்த அளவிற்குப் பாடுபடுகிறார்களோ அந்த அளவிற்குப் பயன் கிடைக்கும். உழைப்புக்குப் பின் வாங்கக் கூடாது. சமுதாய நலப் பணிகளிலும் ஈடுபடலாம். அதனால் பெயரும், புகழும் உயரும். வேதாந்த ஞானம் உண்டாகும். இரக்க சுபாவம் அதிகரிக்கும். மேலும் சனிபகவான் கஷ்டங்களைத் தாங்கும் சக்தியைக் கொடுப்பார். இவர் செவ்வாய்,ராகு, கேது பகவான்களால் பாதிக்கப்படாதவரை மாறாத தன்னிலை உள்ளவர்.
சனி பகவானின் பலம் கூடியிருப்பவர்கள் பஞ்ச பூத தத்துவங்களில் வாயு தத்துவத்தின் மூலம் நன்மைகளைப் பெறுவார்கள். பெருக்கவும், இளைக்கவும் கூடிய உடலமைப்பைப் பெற்றவர்கள் இவர்கள். சாதாரண விஷயத்திற்குக்கூட அதிகம் கோபப்படுவார்கள். செய்யும் தொழிலில் ஆழ்ந்த ஈடுபாட்டைக் கொண்டிருப்பார்கள். இங்குமங்கும் அலைந்து திரிவார்கள். எல்லோரிடமும் சகஜமாகப் பழகுவார்கள். நல்ல தோற்ற அமைப்பு பெற்றிருப்பார்கள். அதேநேரம் மந்தனாகிய சனி பகவானின் நல்லதோர் ஆதிக்கத்தைக் கொண்ட ஜாதகருக்கு, யோகம் தாமதித்தே ஏற்படும்.
பெயர்சியின் பின்னதான சனியின் ராசி நிலைகள்
ஒவ்வொரு ராசிக்குமான விரிவான பலன்களை தொடர்ந்து வரும் நாட்களில் காணலாம்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக