திருகோணமலை - குச்சவெளி - வடலிக்குளம் பகுதியில் இரண்டு சிறுமிகளை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கூறப்படும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
12 மற்றும் 13 வயது சிறுமிகளை அழைத்துச் சென்று துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய 18 வயதான சந்தேகநபர் ஒருவரே இன்று காலை இவ்வாறு கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு சிறுமிகளிடமும் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் சுட்டிக்காட்டினர்.
இதனையடுத்து சட்ட மருத்துவ பரிசோதனைக்காக சிறுமிகளை திருகோணமலை சட்ட வைத்திய அதிகாரியிடம் ஒப்படைக்கவுள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபரை திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குச்சவெளி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக