siruppiddy

செவ்வாய், 14 அக்டோபர், 2014

கிணற்றை தோண்டிய போது மண் சரிந்து குடும்பஸ்தர் பலி!

 வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் மீறாவோடை தமிழ் கிராம சேவகர் பிரிவில் புதிதாக அமைக்கப்பட்ட கிணற்றை தோண்டிக் கொண்டு இருக்கும் போது மண் சரிந்து விழுந்ததில் குடும்பஸ்தர் ஒருவர் உயிர் இழந்துள்ளதுடன் மற்றுமொருவர் காப்பாற்றப்பட்ட சம்பவம் ஞாயிற்றுக்கிழமை மாலை 06.00 மணியளவில் இடம் பெற்றுள்ளது.
 மீறாவோடை தமிழ் கிராம சேவகர் பிரிவில் பரிகாரியார் வீதியில் வசித்த வந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான வேலாயுதம் முத்துலிங்கம் (வயது – 42) என்பவரே உயிர் இழந்தவர் என்று அடையாளங் காணப்பட்டுள்ளது. இவருக்கு உதவியாக கிணறு தோண்டுவதற்கு நின்ற அதே வீதியைச் சேர்ந்த கணபதிபிள்ளை விஜயகுமார் (வயது – 32) என்பவர் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
 மரணித்தவரின் வீட்டில் புதிதாக அமைக்கப்பட்ட கிணற்றில் இருந்து மண்னை அகற்றிக் கொண்டு இருக்கும் போது மண் சரிந்து கிணற்று மடுவுக்குள் இருவரையும் மூடிய வேலை பொது மக்களின் உதவியுடன் கணபதிபிள்ளை விஜயகுமார் காப்பாற்றப்பட்ட போதும் வேலாயுதம் முத்துலிங்கம் என்பவரின் உயிரைக் காப்பாற்ற முடியாமல் போயுள்ளது. இச் சம்பவம் தொடர்பாக வாழைச்சேனை பொலிஸார் விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர். 
இங்குஅழுத்தவும் மற்றைய செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக