siruppiddy

திங்கள், 26 ஜனவரி, 2015

இடையூறு விளைவித்தமை பொலிஸ் அதிகாரிக்கு சிறை??

வெலிகடை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கமல் ரஷிக அமரசிங்கவிற்கு நுவரெலிய நீதவான் நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
ஹட்டன் சமவெளி தேசிய பூங்காவில் 
2009 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 7 ஆம் திகதி அனுமதியின்றி நுழைந்தமை மற்றும் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு விளைவித்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் அடிப்படையிலேயே இவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
வன ஜீவராசிகள் திணைக்களத்தினரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணைகளில் குறித்த பொலிஸ் அதிகாரி ஆஜராகாமையால் அவர் இன்றி வழக்கு விசாரணைகள் முடிவுற்று அவருக்கு ஒருவருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
மேலும் குறித்த பொலிஸ் அதிகாரியை விரைந்து கைதுசெய்யுமாறும் பிடியாணை பிறப்பித்த நீதவான் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் இவ்வாறு நீதிமன்றத்தை புறக்கணிப்பது தொடர்பிலும் உரிய நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளார்.
இதேவேளை வெலிகடை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ரசிக அமரசிங்க தற்போது விடுமுறையில் சிங்கப்பூர் 
சென்றிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

திங்கள், 19 ஜனவரி, 2015

திருமணநாள் வாழ்த்துகள் சுதா ஜசோதா 19.01.15.


பதின்மூன்றாவது திருமணநாள் சுதா ஜசோதா இன்று. 19.01.2015. யாழ். இராசாவின் தோட்டத்தைப் பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகவும்கொண்ட திரு :திருமதி ,சுதாகரன். தம்பதிகள் சூரிச்மாநிலத்தில் திருமண நாளை தனது இல்லத்தில்  சிறப்பாக கொண்டாடுகின்றனர் .இவர்களை அன்பு மகள் மகன் அக்கா அத்தான் மருமகள் மாமா மாமி மார் பெரியப்பா ,பெரியம்மாமார் சித்தப்பா சித்தி மார் அண்ணா தம்பி மார் சகோதரிகள் மச்சான் மச்சாள் மார் உற்றார் உறவினர்கள் நண்பர்களும் இவர்களை நல்லைகந்தன் இறைஅருள் பெற்று சகல செல்வங்களும் பெற்று சீரும் சிறப்புடன் பல்லாண்டு காலம் நீடுளி வாழ வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து
                                                            http://lovithan.blogspot.ch
                                                             நவற்கிரி .கொம் நிலாவரை.கொம்
                                                                      இணையங்களும் 
                                                                   வாழ்த்துகின்றனர்.
               திருமண வாழ்த்து கவிதை
உன் பிறப்பில் தான்
கண்டுகொண்டேன்…
கவிதைக்கும்
உயிருண்டென!
திருமணங்கள் சொர்க்கத்தில்
நிச்சயிக்கப்படுகின்றனவாம்......
இவர்களின
                                                              நிச்சயிக்கப்பட்டுவிட்ட
சொர்க்கத்திற்கு,
இனியதிருமணநாள் நல் நல்வாழ்த்துகள்..


செவ்வாய், 6 ஜனவரி, 2015

வீதிகள் யாழ். நகரில் நாளை முதல் மூடப்படுகின்றன!

 ஜனாதிபதித் தேர்தலில் யாழ்.மத்திய கல்லூரி வாக்கெண்ணும் நிலையமாக இயங்கவுள்ளதால் இந்தப் பகுதியிலுள்ள சில வீதிகள் மக்கள் போக்குவரத்துக்கு தடை செய்யப்படவுள்ளதாக யாழ். மாவட்டப் பிரதி பொலிஸ்மா அதிபர் வைத்தியலங்கார தெரிவித்துள்ளார்.
 இதன்படி, காந்தி வீதி (மணிக்கூட்டு வீதி), முதலாம் குறுக்கு வீதி, நீதிமன்ற வீதி, சுப்பிரமணியம் பூங்கா வீதி, புல்லுக்குளம் முதல் வேம்படி வரையான வீதி ஆகிய 5 வீதிகளே தற்காலிகமாக மூடப்படவுள்ளன இந்த வீதிகள் நாளை மாலை 6 மணிமுதல் மூடப்பட்டிருக்கும் என்று அறிவித்துள்ளனர். இவற்றுக்கான மாற்றுப் பாதைகளாக வைத்தியசாலை வீதி, பிரதான வீதி, இரண்டாம் குறுக்கு வீதி, ஏ-9 வீதி என்பவற்றைய் பயன்படுத்த முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவைளை, தடைசெய்யப்படும் வீதிகளை அவசர தேவைக்காகப்பயன்படுத்துவோர்  அதற்கான அனுமதியை யாழ்.மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் டபிள்யூ.பி.விமலசேனவின் அனுமதியைப் பெறவேண்டும் எனவும் 
யாழ். பிரதி பொலிஸ்மா அதிபர் அறிவித்துள்ளார்.
எனினும் அவருடன் தொடர்பு கொள்வதற்கான எந்தத் தகவலும் தெரிவிக்கப்படவில்லை. யாழ். பொலிஸ் நிலையம் தடைசெய்யப்படும் வீதிக்குள் அடங்குகிறது. இதனால் பொதுமக்கள் தமது முறைப்பாடுகளை செய்ய செல்வதில் நெருக்கடிகள் ஏற்படலாம். இதற்கான மாற்று நடவடிக்கைகள் குறித்து பொலிஸார் எதுவும் தெரிவிக்கவில்லை. 
இங்கு அழுத்தவும் முக்கிய நிழல் படங்கள் இணைப்பு

வெள்ளி, 2 ஜனவரி, 2015

இரட்டைக் குடியுரிமை இலங்கை வழங்கத் தீர்மானம்``

பத்து நாடுகளின் இலங்கைப் பிரஜைகளுக்கு மட்டும் இரட்டைக் குடியுரிமை வழங்க பாதுகாப்பு அமைச்சு தீர்மானித்துள்ளது.

பத்து நாடுகளில் குடியுரிமை பெற்றுக் கொண்டுள்ள இலங்கையர்கள், இலங்கையில் குடியுரிமை பெற்றுக்கொள்ள விண்ணப்பிக்க முடியும்.

வெளிநாடுகளில் நிரந்தரக் குடியுரிமை பெற்றுக்கொண்டு ஐந்து ஆண்டுகள் பின்னரே கடந்த காலங்களில் இலங்கைக் குடியுரிமைக்காக விண்ணப்பிக்க முடியும்.

எனினும், எதிர்வரும் காலங்களில் இலகுவான முறையில் இரட்டைக் குடியுரிமை பெற்றுக் கொள்ள முடியும் என பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

பாதுகாப்பு அமைச்சர் கோத்தபாய ராஜபக்சவின் அறிவுறுத்தல்களுக்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட குழுவொன்றினால் நேர்முகம் காணப்பட்டதன் பின்னர் விண்ணப்பதாரிக்கு இரட்டைக் குடியுரிமை வழங்கப்பட உள்ளது.

அமெரிக்கா, கனடா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, நியூசிலாந்து, அவுஸ்திரேலியா, நோர்வே, சுவீடன் உள்ளிட்ட பத்து நாடுகளில் நிரந்தரமாக வதியும் இலங்கையர்களுக்கு இவ்வாறு இரட்டைக் குடியுரிமை வழங்கப்பட உள்ளது.