siruppiddy

திங்கள், 26 ஜனவரி, 2015

இடையூறு விளைவித்தமை பொலிஸ் அதிகாரிக்கு சிறை??

வெலிகடை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கமல் ரஷிக அமரசிங்கவிற்கு நுவரெலிய நீதவான் நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
ஹட்டன் சமவெளி தேசிய பூங்காவில் 
2009 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 7 ஆம் திகதி அனுமதியின்றி நுழைந்தமை மற்றும் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு விளைவித்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் அடிப்படையிலேயே இவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
வன ஜீவராசிகள் திணைக்களத்தினரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணைகளில் குறித்த பொலிஸ் அதிகாரி ஆஜராகாமையால் அவர் இன்றி வழக்கு விசாரணைகள் முடிவுற்று அவருக்கு ஒருவருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
மேலும் குறித்த பொலிஸ் அதிகாரியை விரைந்து கைதுசெய்யுமாறும் பிடியாணை பிறப்பித்த நீதவான் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் இவ்வாறு நீதிமன்றத்தை புறக்கணிப்பது தொடர்பிலும் உரிய நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளார்.
இதேவேளை வெலிகடை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ரசிக அமரசிங்க தற்போது விடுமுறையில் சிங்கப்பூர் 
சென்றிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக