siruppiddy

திங்கள், 7 நவம்பர், 2016

21 வயது மாணவன் சாதனை யாழ் மண்ணில்

யாழ். வயாவிளான் மத்திய கல்லூரியில் க. பொ.த உயர்தரத்தில் கல்வி பயின்று 'வயம்ப' பல்கலைக்கழகத்திற்குத் தெரிவாகியுள்ள மாணவனான மு. நவரத்தின கஜன் தனது 21 ஆவது வயதில் பொறியியல் தொழில் நுட்ப பாடத்தில் ஒரு பகுதியான 'நில அளவை' என்ற நூலை வெளியீடு செய்து சாதனை படைத்து, கல்வியிலாளர்கள் உட்படப் பலரதும் பாராட்டுதல்களையும் பெற்றுள்ளார்.
மேற்படி நூலின் வெளியீட்டு விழா இன்று (05) முற்பகல் யாழ். புன்னாலைக்கட்டுவன் ஸ்ரீ துர்க்கா பொதுநோக்கு மண்டபத்தில் ஓய்வு நிலை வைத்தியர் ஆ.திருநாவுக்கரசு தலைமையில்
 இடம்பெற்றுள்ளது.
இந்த வெளியீட்டு விழாவிற்கு மடு வலயக் கல்வி உதவிக் கல்விப் பணிப்பாளர் அ.சுபாகரன் பிரதம விருந்தினராகவும், வலி.தெற்குப் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரான ரி.பிரகாஷ் சிறப்பு விருந்தினராகவும் கலந்து கொண்டனர்.
குறித்த நூலை யாழ்ப்பாண தேசியக் கல்வியியற் கல்லூரியின் விரிவுரையாளர் நா. அம்பிகைபாகன் சம்பிரதாயபூர்வமாக வெளியிட்டு வைத்ததோடு அவர் உட்பட மாணவனது நூலாக்க முயற்சியை விழாவில் கலந்து கொண்ட விருந்தினர்கள், மிகவும் பாராட்டி
 பேசியுள்ளனர்.
இலங்கை அரசாங்கத்தினால் கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் பாடசாலைக் கல்வித் திட்டத்தில் க.பொ.த உயர்தரத்தில் தொழில் நுட்பப் பிரிவு அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது. திறன் மிக்கவர்களை உருவாக்கும் நோக்குடன் ஆரம்பிக்கப்பட்ட இந்தப் பாட நெறியில் முதலாவது அணி மாணவனாகக் கல்வி கற்றுத் தற்போது பல்கலைக் கழகத்திற்குத் குறித்த மாணவன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இந்தப் பாடநெறி கற்கும் சிங்கள மொழி மாணவர்களுக்கு வழிகாட்டும் வகையில் சிங்கள மொழியில் பல நூல்கள் வெளிவந்திருந்தாலும் கூடத் தமிழ் மொழியில் இதுவரை நூல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. இக்குறையை மாணவன் நவரத்தின கஜனின் 'நில அளவை' என்ற நூல் ஓரளவுக்காவது நிவர்த்தி செய்யும் எனக் கல்வியியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
மேற்படி நூல் போதியளவு விளக்கப்படங்களுடனும், விளக்கக்குறிப்புக்களுடனும் வெளிவந்துள்ளமையால் தொழில்நுட்பப் பிரிவில் கல்வி கற்கும் மாணவர்களுக்கும், 'நில அளவை' தொடர்பில் அறிந்து கொள்ள ஆவல் உள்ளவர்களுக்கும் பயனுள்ளதாக
 அமையும்.
நவரத்தின கஜன் கடந்த 2015 ஆம் ஆண்டில் இலகு கணனி (தொடர்-1), (தொடர்-2) ஆகிய நூல்களையும், வெற்றி, கணித குறிப்புக்கள் போன்ற நூல்களையும், தொழில்நுட்பப் பிரிவு மாணவர்களுக்கான தன்னியக்க வாகனப் பொறியியல் தொழில்நுட்பம் எனும் நூலையும் எழுதி வெளியிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

திங்கள், 24 அக்டோபர், 2016

பிறந்தநாள் வாழ்த்து செல்வி சுதாகரன் சுருதிகா .24.10.16

சுவிஸ் சூரிச்சை பிறப்பிடமாகவும்  வசிப்பிடமாகக் கொண்ட
திரு திருமதி . சுதாகரன்(சுதா) (யசோ)  தம்பதிகளின்.செல்வப்புதல்வி  சுருதிகா.{சுருதி}.வின் பதின் மூன்றாவது   பிறந்த நாள் 24.10.16 .இன்று தனது இல்லத்தில் 
கொண்டாடுகின்றார் இவரை அன்பு அப்பாஅம்மா தம்பி பெரியப்‌பா பெரியம்மா அண்ணாமார் அம்மம்மா  மற்றும்  மாமி மார் மாமாமார் சித்தப்பாமார்  சித்திமார்   மச்சான்மார் மச்சாள் மார் மற்றும்
 உற்றார் உறவினர்கள் நண்பர்களும்
 இறைஅருள் பெற்று சகல கலைகளும் பெற்று வாழ 
வாழ்த்துகின்றனர் .இவர்களுடன் நவற்கிரி .கொம் .நவக்கிரி .கொம் நவக்கிரி  http://lovithan.blogspot.ch/ இணையம் . நிலாவரை.கொம்  இணையங்களின் பிறந்தநாள் வாழ்த்து கவிதை.
  குறிஞ்சி பூப்பது பனிரெண்டு வருடத்திருக்கு ஒரு முறைதானாம் .., யார் சொன்னது???? வருடத்திற்கு ஒருமுறை பூக்கிறது உன் பிறந்த நாளாக!!!   
நிறைவேறிட வாழ்த்துகின்றது.
வாழ்க வளமுடன்....
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>
சனி, 22 அக்டோபர், 2016

மரண அறிவித்தல் அமரர் தம்பு ஜெயரத்தினம் (நயினார் )

இறப்பு : 21 ஒக்டொபர்  2016 
யாழ்.  நவக்கிரி புத்தூரைய்  பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும்   தற்காலி  வசிப்பிடமாக கோப்பாயை  கொண்ட தம்பு ஜெயரத்தினம் (நயினார் )அவர்கள் 21-10-2016 வெள்ளிக்கிழமை  அன்று 
காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற தம்பு  மாணிக்கம் தம்பதிகளின் அன்புக்கடைசி   மகனும் , காலஞ்சென்ற .திருமதி கமலாதேவி 
 அவர்களின் அன்பு கணவரும் 
செந்தூர்செல்வன் பிறேமாவதி  காலஞ்சென்ற  கிரிதரன்   ஆகியோரின் அன்புத்தந்தையும்  
  காலஞ்சென்ற  துரைராஜா  காலஞ்சென்ற செல்வராஜா  
காலஞ்சென்ற ஞாமணி  பாலசிங்கம் சின்னமணி    வித்திலாமணி சிவலிங்கமணி  ஆகியோரின்  அன்பு  சகோதரனும் 
 ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 23-10-2016 . ஞாயிற்று க்கிழமை அன்று  அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோப்பாய்  இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம் ..
தகவல்
குடும்பத்தினர்.. இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

வியாழன், 13 அக்டோபர், 2016

பட்டா ரக வாகனம் கிளிநொச்சியில் இன்று பயங்கர விபத்து

நேற்று மாலை3.00மணியளவில் கிளிநொச்சியிலுருந்து வவுனியாவிற்கு பப்பாசிபழங்களை விற்பனைக்காக ஏற்றி வந்த பட்டா ரக வாகனம் ஒன்று கொக்காவில் பகுதியில் வாகனத்தின் டயர் 
திடீரென காற்று போனதால் வாகனம் வாகனம் சாரதியின் கட்டுப்பாட்டையிழந்து விபத்துக்குள்ளானது.இவ் விபத்தில் வாகனம் பலத்த சேதங்களுக்குள்ளானதுடன் சாரதி 
சிறுகாயங்களுக்குள்ளாகியுள்ளார்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>ஞாயிறு, 9 அக்டோபர், 2016

கணேசபுரத்தில் பாம்பு கடித்து 14வயது மாணவி உயிரிழப்பு

வவுனியா கணேசபுரம் பகுதியிருலுள்ள விநாயகர் வித்தியாலயத்தின் மாணவி ஒருவருக்கு நேற்று பாம்பு கடித்து உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,
நேற்று அதிகாலை குறித்த மாணவிக்கு வீட்டில் படுத்திருந்தவேளை  பாம்பு கடித்துள்ளது. எனினும் . கடித்தது பாம்பு என்று தெரியவரவில்லை. நேற்று பகல் 11 மணியளவில் மாணவிக்கு வாந்தி, வயிற்றுவலி என்பன தொடங்கியுள்ளது.
உடனடியாக வவனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மாணவி சிறிது நேரத்தில் இறந்துவிட்டார். வைத்தியர்கள் பாம்பு கடித்துள்ளது என்று தெரிவித்ததையடுத்து வீட்டிற்குச் சென்றபோது வீட்டில் பாம்பு இருந்துள்ளது.
வேல்ஸ்குமார் றம்மியா என்ற 14வயதுடைய மாணவியே உயிரிழந்தள்ளார். மாணவியைக் கடித்த பாம்பு அடித்து போத்தலில் 
அடைக்கப்பட்டுள்ளது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


செவ்வாய், 4 அக்டோபர், 2016

நிர்மாணப் பணியில் ஈடுபட்ட பொறியியலாளர்மின்சாரம் தாக்கி மரணம்!

கிளிநொச்சி – இரணைமடு குளத்தின் அபிவிருத்தி பணியில் ஈடுபட்டிருந்த இளம் பொறியியலாளர்  மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் 03.10.2016  திங்கட்கிழமை இரவு 8 மணியளவில் இடம்பெற்றதாக கிளிநொச்சி காவல் துறையினர் 
 தெரிவித்தனர்.
அவசரஅவசரமாக இராப்பகலாக புனரமைப்பு பணிகள் இடம்பெற்று வருகின்றன. இந்த நிலையில் இப்பணியில் ஈடுபட்டிருந்த 25 வயதுடைய கனகராசா கோபிநாத்  என்ற   பொ றியியலாளர்  மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.
சடலம் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் கிளிநொச்சி காவல் துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு 
வருகின்றனர்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

புதன், 28 செப்டம்பர், 2016

கேரளா கஞ்சா மருதங்கேணி கடற்கரையில் மீட்பு!


இந்தியாவில் இருந்து கொண்டு வரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 82 கிலோகிராம் கேரளா கஞ்சாவை மருதங்கேணி கடற்கரையில் வைத்து பளை பொலிஸார் இன்று மீட்டுள்ளனர்.எனினும் குறித்த சம்பவத்தின்போது சந்தேகநபர்கள் தப்பிச்சென்றுள்ளதாக பளைப் பொலிஸ் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.குறித்த சம்பவம் தொடர்பாக தெரிய 
வருவதாவது,
இந்தியாவில் இருந்து கடல் வழியாக கேரள கஞ்சா ஒரு தொகுதி மருதங்கேணி கடற்பரப்பினூடாக கொண்டு வருவதாக பொலிஸாருக்கு இரகசியத் தகவல் கிடைத்துள்ளது.
இதைத் தொடர்ந்து கிளிநொச்சி உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் பளைப் பொலிஸ் பரிசோதகர் அடங்கிய குழுவினர் 
குறித்த பகுதிக்குச் சென்று மருதங்கேணி கடற்கரையில் இருந்த 82 கிலோகிராம் கேரளா கஞ்சாவினை மீட்டுள்ளனர்.இருப்பினும் சந்தேக நபர்கள் எவரும் பொலிஸாரால் கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பளை பொலிஸார் மேற்கொண்டு 
வருகின்றனர்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

திங்கள், 26 செப்டம்பர், 2016

சிறுவர்கள் வாகன விபத்தில் பரிதாபகரமாக பலி !

திருகோணமலை மாவட்டத்தின் சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தோப்பூர் செல்வநகர் பகுதியில் டிப்பர் வாகனமும் மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளானதில் இரண்டு சிறுவர்கள் பரிதாபகரமாக முறையில் உயிரிழந்துள்ளனர்.
குறித்த விபத்து சம்பவம் இன்று (25) பகல் 11.00 மணியளவில் இடம் பெற்றுள்ளது.
சம்பவ இடத்திலேயே இரண்டு சிறுவர்களும் உயிர் இழந்துள்ளதாக சேருநுவர பொலிஸார் கூறியுள்ளார்.
மேலும், இந்த விபத்து தொடர்பாக தெரியவருவதாவது
ஒரு மோட்டார் சைக்கிளில் மூன்று சிறுவர்கள் பயணித்ததில் இருவர் உயிர் இழந்துள்ளதுடன் ஒருவர் தப்பித்துள்ளதோடு தப்பித்த சிறுவனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இதேவேளை, சம்பவத்தின் போது உயிர் இழந்தவவர்கள் பீ.சியாம் (15) ,ஏ.நிப்றாஸ் (15) என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், உயிர் இழந்த இரு சிறுவர்களினதும் சடலம் மூதூர் பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் சேருநுவர பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற் கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>அமரர் இரத்தினம் பாலகிருஷ்ணன்.1ம் ஆண்டு நினைவஞ்சலி

பிறப்பு : 7 யூலை 1960 — இறப்பு : 24 செப்ரெம்பர் 2015
யாழ். அச்சுவேலி பத்தமேனியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் சூரிசை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த இரத்தினம் பாலகிருஷ்ணன். (செல்வம்) அவர்களின் முதலாம்ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் அன்பு அப்பாவே 
இதயத் துடிப்பின் அருமருந்தே 
காலம் செய்த கோலத்தினால் 
ஓவ்வொரு கணப் பொழுதும் 
துடிக்கின்றோம்!
ஆண்டொன்று ஆனாலும் மனம் 
ஆற மறுக்கிறது- அப்பா 
புன்னகை புரியும் உங்கள் 
முகம் தெரிகிறது 
தினம் தினம்!
உங்கள் ஒழுக்கம் நற்பண்பு 
மதிப்புகள் யாவும் எங்கள் வாழ்வில் 
என்றென்றும் வழிகாட்டியாக இருக்கும்! 
மாதங்கள் பன்னிரெண்டு ஆனாலும் 
அழியாது எம் துயரம் 
மறையாத உங்கள் நினைவு!
மீண்டும் ஒரு பிறவி உண்டென்றால் 
உங்களுக்கு பிள்ளைகளாக பிறக்கும் 
பேறு பெற வேண்டும்- அப்பா!
அன்னாரின் ஆத்மசாந்திப் பிரார்த்தனை 12-10-2016 புதன்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று, பின்னர் அதனைத் தொடர்ந்து நடைபெறும் மதியபோசன நிகழ்விலும் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்
.நவற்கிரி உறவுகளின் கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கு  எமது 
ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிகின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
மனைவி — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41433002432
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

வெள்ளி, 23 செப்டம்பர், 2016

தெல்லிப்பளை மகாஜனாக் கல்லுாரியின் மாணவி தற்கொலை

யாழ்ப்பாணம் - காங்கேசன்துறை – நகுலேஸ்வரம் பிரதேசத்தில் பாடசாலை மாணவியொருவர் தனது வீட்டில் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்
இவ்வாறு உயிரிழந்துள்ளவர் யாழ்ப்பாணம் - தெல்லிப்பளை மஹாஜன கல்லூரியில் 11 ஆம் வகுப்பில் கல்வி கற்று வந்த மாணவி என தெரியவந்துள்ளது.
அவர் தற்கொலை செய்து கொள்ளும் போது வீட்டில் அவரது பெற்றோர் இல்லை என காவற்துறை தெரிவித்துள்ளது.
மன உளைச்சல் காரணமாக குறித்த மாணவி இவ்வாறு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என காவற்துறை சந்தேகிக்கிறது.
எனினும் அவர் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்னர் எழுதி வைத்த கடிதம் ஒன்றை காவற்துறை 
கைப்பற்றியுள்ளது
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


புதன், 21 செப்டம்பர், 2016

இலங்கைத் தமிழர் அமெரிக்க இராணுவத்தின் மூத்த ஆராய்ச்சி விஞ்ஞானி !

அமெரிக்க இராணுவத்தின் மூத்த ஆராய்ச்சி விஞ்ஞானியாகப் பணியாற்றும், கலாநிதி பரஞ்சோதி ஜெயக்குமார் என்ற இலங்கைத் தமிழர், பொறியியல்துறையில் மதிப்புமிக்க உலகளாவிய விருதுக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளார். அமெரிக்க இராணுவத்தின் டாங்கிகள் வடிவமைப்பு ஆராய்ச்சி, அபிவிருத்தி மற்றும் பொறியியல் நிலையத்தில், மூத்த விஞ்ஞானியாகப் பணியாற்றி வருகிறார் 
கலாநிதி பரஞ்சோதி ஜெயக்குமார்.
இவர் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பொறியியல் பீடத்தில் பட்டம் பெற்றதுடன், 1982-83 காலப்பகுதியில், பேராதனைப் பல்கலைக்கழக கணிதபீடத்தில் உதவி விரிவுரையாளராகவும் பணியாற்றியுள்ளார். இவருக்கு SAE International என்ற மதிப்புமிக்க அனைத்துலக பொறியியலாளர் அமைப்பினால் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வரும், ஆர்ச் ரி கொல்வெல் ஒத்துழைப்பு பொறியியல் பதக்கம் (Arch T. Colwell Cooperative Engineering Medal) வழங்கப்படவுள்ளது.
அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள இந்த அமைப்பின் நிகழ்வில் இந்த விருது வழங்கப்படும். இந்த உலகளாவிய விருதை வழங்கும், SAE International அமைப்பு உலகெங்கும் உள்ள 138 ஆயிரம் பொறியியல் வல்லுனர்களை உறுப்பினராக கொண்டது என்பது 
குறிப்பிடத்தக்கது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

செவ்வாய், 13 செப்டம்பர், 2016

மரண அறிவித்தல் திரு மகிந்தன் பன்னீர்ச்செல்வம்(முகுந்தன்)

தோற்றம் : 20 யூன் 1972 — மறைவு : 10 செப்ரெம்பர் 2016
யாழ். ஓட்டுமடத்தைப் பிறப்பிடமாகவும், சுவீடன் Helsingborg ஐ வசிப்பிடமாகவும் கொண்ட மகிந்தன் பன்னீர்ச்செல்வம்.(முகுந்தன் முன்னாள் விளையாட்டு மூத்த உறுப்பினர் - Helsingborg)அவர்கள் 10-09-2016 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பன்னீர்ச்செல்வம், புஸ்பலீலா(இந்தியா) தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற அழகசுந்தரம், சாந்தகுமாரி(சுவீடன்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சர்மிளா அவர்களின் அன்புக் கணவரும்,
அபிஷன், டெனிலா, ஜெனிஷா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சுகந்தி டினேஷ்(இந்தியா), பாபு(ஜெர்மனி), தீபன்(ஜெர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஸ்ரீகாந்த(டென்மார்க்), ஜெயந்தி கமல்(சுவீடன்), ஜனார்த்தன்(சுவீடன்), கவிதா சதீஷ்(சுவீடன்), சங்கீதா மகிந்தன்(சுவீடன்), ஜீனத்காந்(சுவீடன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்
நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிகின்றன ...

தகவல்
இளந்தளிர் விளையாட்டு கழகம்- Helsingborg
நிகழ்வுகள்
தகனம்
திகதி: புதன்கிழமை 14/09/2016, 09:30 மு.ப — 01:30 பி.ப
முகவரி: Pålsjö Kapell, Kullavägen 94, 254 54 Helsingborg, Sweden. 
தொடர்புகளுக்கு
சதிஷ் — சுவீடன்
தொலைபேசி: +46702699435
ஸ்ரீகாந் — டென்மார்க்
செல்லிடப்பேசி: +4531147728
பாபு தீபன் — ஜெர்மனி
செல்லிடப்பேசி: +4923336198614
தினேஷ் — இந்தியா
செல்லிடப்பேசி: +919092555333
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

வெள்ளி, 9 செப்டம்பர், 2016

மரண அறிவித்தல் திரு கந்தையா தம்பிஐயா.06.'09.16.

பிறப்பு : 3 யூன் 1924 — இறப்பு : 6 செப்ரெம்பர் 2016
யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா தம்பிஐயா அவர்கள் 06-09-2016 செவ்வாய்க்கிழமை அன்று Toronto வில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தையா, அன்னப்பிள்ளை தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும், காலஞ்சென்ற பொன்னையா, பொன்னு தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கமலாம்பிகை அவர்களின் அன்புக் கணவரும்,

ஜெகதீஷ்வரன், ஜெகதீஷ்வரி, மலர்சோதி, தயாபரன், அருளானந்தம், ரூபன், சிறி, ஜாமினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான சின்னம்மா, தங்கமணி, சுப்பிரமணியம், மற்றும் புனிதரட்னம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பரமேஷ்வரி, காலஞ்சென்ற சசிகுமரன், விஜயரட்னம், சியாமளா, பாமினி, சிவமதி, பாமினி, உருத்திரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான சுப்பையா, சிவசுப்பிரமணியம், மாலினி, மற்றும் சந்திரா, காலஞ்சென்றவர்களான சங்கரப்பிள்ளை, சிவசம்பு ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஜெகதீப், பிரியா விபி, தரூபன் ரதி, தயன் கார்லா, கிரூபன் தர்ஷினி, கர்ஷன் கஜந்தி, கிரிஷா ஜெராட், விபி கோனி, சிரோன், துஷான், ஷிரோமி, அனோஷ், தினா, அபினா, சௌமி, கவீஷ், கியாரா ஆகியோரின் அன்புப் பேரனும்,

ஜெயன், ஐவியா, ஜெனனி, ஜெனீஷா, காபிரியல், சோபியா, செபாஷ்ரியன், அகீறா, அனிஷா, ரேயா, அலிசா, எமா, றதானியல் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிகின்றோம்

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: புதன்கிழமை 07/09/2016, 04:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada 
பார்வைக்கு
திகதி: வியாழக்கிழமை 08/09/2016, 08:00 மு.ப — 09:30 மு.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada 
கிரியை
திகதி: வியாழக்கிழமை 08/09/2016, 09:30 மு.ப — 11:30 மு.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada 
தகனம்
திகதி: வியாழக்கிழமை 08/09/2016, 12:00 பி.ப — 12:30 பி.ப
முகவரி: Highland Hills Funeral Home, 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada 
தொடர்புகளுக்கு
விஜயரட்னம் — கனடா
தொலைபேசி: +14168505513
செல்லிடப்பேசி: +16472744670
அருள் — கனடா
செல்லிடப்பேசி: +16475018449
ரூபன் — கனடா
தொலைபேசி: +15149450660
சிறி — கனடா
தொலைபேசி: +15149451072
ஜெகதீஸ் — கனடா
செல்லிடப்பேசி: +16474070675

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

வியாழன், 25 ஆகஸ்ட், 2016

இளைஞன்யாழில் இடம்பெற்ற விபத்து! உயிர் தப்பினர் !

யாழ். சாவகச்சேரி பேரூந்து நிலையத்துக்கு முன்பாக இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் அதிஷ்டவசமாக உயிர்தப்பியுள்ளார்.
இந்த விபத்து இன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மோட்டார் சைக்கிள் ஒன்றும் தனியார் பேரூந்து ஒன்றும் நேருக்கு நேர் மோதிக்கொண்டமையால் இந்த விபத்து 
இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தின் போது மோட்டார் சைக்கிள் பாரியளவு சேதமடைந்துள்ள போதிலும், அதில் பயணித்தவர் அதிஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார். சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

வியாழன், 18 ஆகஸ்ட், 2016

மரண அறிவித்தல் அமரர் திருமதி சின்னத்தம்பி பூமணி

பிறப்பு : 21 ஓகஸ்ட் 1941 — இறப்பு : 17 ஓகஸ்ட் 2016
யாழ். புத்தூர் நவக்கிரியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி பூமணி அவர்கள் 17-08-2016 புதன்கிழமை அன்று 
காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற தம்பிப்பிள்ளை, தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற திரு.திருமதி மயில்வாகனம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சின்னத்தம்பி அவர்களின் அன்பு மனைவியும்,
சிவானந்தம், கெளரி, சிவகணேசன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான சரஸ்வதி, பூபாலசுந்தரம் மற்றும் பவளம், மகேஸ்வரி, அன்னம்மா ஆகியோரின் அன்புச்
 சகோதரியும்,
சாந்தினி, ஜெயக்குமார், ராகினி, சசிகலா, ராகினி, ரமணி, சுகந்தி ஆகியோரின் பெரியத்தாயாரும்,
ஞானசேகரம்(காந்தி), ஞானமலர் ஆகியோரின் பாசமிகு சிறியத்தாயாரும்,
காலஞ்சென்றவர்களான தில்லையம்பலம், மதியாபரணம், புவனேந்திரம், மற்றும் தலேசினியா, பத்மநாயகி ஆகியோரின் அன்பு
 மைத்துனியும்,
அபர்ணா, பிரபாஜினி, யாதவன், கலைமதி, தனுசன், வினோஜன், கோபிதா, மயூரன், காலஞ்சென்ற ராஜ்கிரன் ஆகியோரின் அன்புப் பேரனும்,
நிரிஸ் அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 18-08-2016 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் நிலாவெளி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிகின்றோம்
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சிவானந்தம் — இலங்கை
செல்லிடப்பேசி: +94765660983
கெளரி — இலங்கை
செல்லிடப்பேசி: +94772557664
சிவகணேசன் — நெதர்லாந்து
செல்லிடப்பேசி: +31687191361
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

சனி, 16 ஜூலை, 2016

ஒழுங்கற்ற முறையில் நடந்த படை சிப்பாய்கள் இருவர் கைது!

மனைவியுடன் சண்டையிட்ட கடற்படை சிப்பாய் ஒருவர் ஆனமடுவ பொலிஸாரினாலும், மது அருந்திவிட்டு ஒழுங்கற்ற முறையில் நடந்து கொண்ட இராணுவ சிப்பாய் ஒருவர் கருவலகஸ்வேவ பொலிஸாரினாலும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று இரவு இந்த கைது இடம்பெற்றுள்ளது.
கடற்படை சிப்பாயான தனது கணவர் தன்னுடன் சண்டையிட்டதாக மனைவியினால் ஆனமடுவ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி கைது செய்யப்பட்ட சந்தேகநபரான கடற்படை சிப்பாய் பருத்தித்துறை வடக்கு கடற்படை முகாமில் பணியாற்றும் ஒருவர் என்பதுடன் அவர் கடுமையான எச்சரிக்கையின் பின்னர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இதற்கிடையில் மது அருந்திவிட்டு ஒழுங்கற்ற முறையில் நடந்து கொண்ட இராணுவ சிப்பாய் கருவலகஸ்வெவ பொலிஸரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் அவசர பிரிவிற்கு கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே குறித்த நபரை கைது செய்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரான இராணுவ சிப்பாய் பருத்தித்துறை இராணுவ முகாமில் பணியாற்றும் ஒருவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
குறித்த நபர் புத்தளம் வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியிடம் அனுப்பி சோதனை செய்த போது மது அருந்தி இருந்தது தெரியவந்துள்ளது 
கைது செய்யப்பட்ட இராணுவ சிப்பாயை புத்தளம் மாவட்ட நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளை ஆனமடுவ மற்றும் கருவலகஸ்வேவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். .
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


வியாழன், 30 ஜூன், 2016

புத்தூர் மீசாலை வீதி விபத்தில் இளைஞர் பலி!

யாழ்ப்பாணம் மீசாலை புத்தூர் வீதியில் வேம்பிராய் சந்திக்கு அருகாமையில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3.50 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
தனியார் நிறுவனம் ஒன்றுக்குச் சொந்தமான மோட்டார் சைக்கிள்களை ஏற்றிவந்த லொறி ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி வீதி ஓரத்தில் கதைத்துக் கொண்டிருந்த இளைஞர் மீது
 மோதியுள்ளது.
சம்பவத்தில் மட்டுவிலைச் சேர்ந்த 36 வயதுடைய பேரின்பராசா ஸ்ரீரஞ்சன் என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார்.
லொறியின் சாரதியும், நடத்துநரும் காயடைந்த நிலையில், சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொடிகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

புதன், 22 ஜூன், 2016

நிந்தவூரில்சிகிச்சைக்கு சென்ற சிறுமி துஷ்ப்பிரயோகம் வைத்தியர் கைது

அம்பாறை நிந்தவூரில் சிறுமியொருவரை துஷ்பிரயோகத்திற்குட்படுத்தியதாக வைத்தியர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த வைத்தியர் 52 வயதுடையவர் எனவும் பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.
சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டிற்கமையவே நேற்று (20) இரவு சந்தேகநபரை கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
சுகயீனம் காரணமாக வைத்தியரிடம் சிகிச்சைக்காக சென்ற போதே குறித்த சிறுமி துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸாரின் முதற்கட்ட விசாரணைகளிலிருந்து 
தெரியவந்துள்ளது.
பாதிக்கப்பட்ட சிறுமி 8 வயதுடையர் எனவும் சிறுமி அம்பாறை வைத்தியசாலையில் வைத்திய பரிசோதனைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.சந்தேகநபர் சம்மாந்துறை பொலிஸாரினால் இன்று (21) நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளார்
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

புதன், 15 ஜூன், 2016

யாழில் வங்கி ஒன்றில் நடந்த உண்மைச் சம்பவம் இது


யாழ். நகரில் பிரபல பெண்கள் கல்லூரி ஒன்றில் கற்பிக்கின்ற ஆசிரியை ஒருவர் அந்தக் கிளையில் கணக்கினைப் பேணி வந்துள்ளார். அவரது மாதந்த சம்பளமும் அந்தக் கணக்குக்கே வருவது
 வழமை.
அடிக்கடி பணத்தைப் பெறும் வழமை அவருக்கு இல்லாத போதிலும் மாதந்தோறும் மீதியைச் சரிபார்க்கத் தவறுவதில்லை.
வழக்கம் போலவே மீதியைச் சரிபார்க்கச் சென்ற ஆசிரியைக்கு அதிர்ச்சி.
“தோல் இருக்கச் சுளை விழுங்கப்பட்டது” போல வங்கிப் புத்தகமும் தன்னியக்கப் பணப்பரிமாற்ற அட்டையும் ( ஏ.ரி.எம்) ஆசிரியரிடம் இருக்க, அவரது கணக்கிலிருந்து சுமார் ஐம்பதாயிரத்துக்கு மேற்பட்ட தொகை உருவப்பட்டிருக்கிறது.
உடனடியாக விழித்துக் கொண்ட ஆசிரியை முகாமையாளரிடம் முறையிட, கணக்கின் வைப்பு – மீளப்பெறல் சரிதம் ஆராயப்பட்டது. முதற்கட்ட விசாரணைகளின் முடிவில் ஆசிரியையின் கணக்கிலிருந்து ஏ.ரி.எம் அட்டை மூலமாக பெறப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
முகாமையாளருக்கு வாய்த்துவிட்டது. ஆசிரியை மீது பாய்ந்தே விட்டார். உங்கள் அட்டையால் தான் பணம் பெறப்பட்டுள்ளது என்று சாதித்தார். இதற்கு மேல் இதில் செய்வதற்கு ஏதுமில்லை என்று ஆசிரியையை 
விரட்டினார்.
சாதாரணமான ஒருவராக இருந்திருந்தால் அப்படியே முடிந்திருக்கும் கதை.
ஆசிரியையும் விடுவதாக இல்லை. தன்னுடைய ஏ.ரி.எம் அட்டை தன்னைத் தவிர யாரும் பாவிப்பதில்ல என்று அடித்துச் சொல்லி விட்டார்
முகாமையாளர் மிரட்டியும் வாடிக்கையாளர் பணிவதாய் 
இல்லை. தொலைபேசி இலக்கத்தை வாங்கிக் கொண்டு ஏதாவது அறிந்தால் அழைக்கிறோம் வாருங்கள் என்று ஆசிரியையை 
அனுப்பி விட்டார்.
இரண்டு நாள்களின் பின்னர் ஆசிரியைக்கு வங்கிக் கிளையில் இருந்து அழைப்பு வந்தது. “உங்கள் பணத்தைத் திருடியவனைப் பிடித்து விட்டோம்” என்று ஆசிரியைக்கு மகிழ்ச்சி.. கிளைக்கு விரைந்தவருக்கு
 அதிர்ச்சி.
அங்கு ஆசிரியைக்கு முகாமையாளர் ஒரு வகையில் மிரட்டல் விடுக்கிறார். நீங்கள் இதனை இப்படியே விட்டுவிடுவது நல்லது என்று.
ஆசிரியை விடவில்லை. பிராந்திய முகாமையாளருக்குத் தெரியப்படுத்தியபின் ஏ.ரி.எம். அட்டையின் மூலம் ஆசிரியையின் கணக்கிலிருந்து களவாடப்பட்ட தொகை வைப்பிலிடப்பட்டிருப்பதாக முகாமையாளரிடமிருந்து தொலைபேசி மூலம் அறிவிக்கப்பட்டிருப்பதுடன். இதனை இதற்கு மேல் நீடிக்க வேண்டாம் என்று கடுமையான 
உத்தரவு வேறு.
இதில் பல சந்தேகங்கள் உள்ளன. ஏ.ரி.எம் அட்டை கையிலிருக்கும் போது ஏ.ரி.எம் மூலம் பணம் பெறப்பட்டது?
விசாரணைகளில் வெளிவந்த தகவலின் படி ஏ.ரி.எம் மூலமாக பணம் பெறப்பட்ட அட்டையின் இலக்கம் ஆசிரியையின் உடையதாக இருக்கவில்லை. அதாவது ஆசிரியையின் கணக்குக்கு வேறு ஒரு அட்டையுடன் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.அந்த அட்டையை வைத்திருந்தவர் தெரிந்தோ தெரியாமலோ தனது கணக்கில் இருந்து பணத்தை மீளப் பெற்றிருக்கிறார்.
இது விடயத்தில் ஆசிரியையின் பக்கத்தில் என்ன தவறு இருக்கிறது?
வங்கி அலுவலர்கள் ஏன் இதை தெரியாதது போலவே வேண்டுமென்றே செய்திருக்கக் கூடாது.
அதிகாரிகளின் தவறு அப்பாவிகளை பாதித்ததுமல்லாமல் அதனை நியாயப்படுத்தும் வகையில் முகாமையாளர் வாடிக்கையாளரை மிரட்டியது சரியா?
இந்த ஆசிரியை கொஞ்சம் உசாரான ஒருவராக இருந்ததனால் பணம் மீளக் கிடைத்தது. இதுவே சாதாரண ஒருவராக இருந்தால்?
மீதியை பரிசோதிக்காமல் இருக்கும் ஒருவராக இருந்தால்?
நண்பர்ளே!
மிகுந்த அவதானமாயிருங்கள் உங்கள் வங்கிக்கணக்கின் வைப்பு – மீளப்பெறல் விடயங்களை அடிக்கடி 
உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
இங்குஅழுத்தவும் நவற்கிரி.கொம் செய்திகள் >>>

புதன், 8 ஜூன், 2016

கிணற்று நீர் குடிப்பதற்கு உகந்தா என்பது தொடர்பில் பரிசோதனை

கொஸ்கம சாலாவ இராணுவ முகாமில் தீ விபத்து ஏற்பட்டு இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தையடுத்து, வெடிப்பு இடம்பெற்ற இடத்தை சுற்றியுள்ள பிரசேதங்களில் உள்ள கிணற்று நீரை ஆய்வு செய்ய சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.
இந்த கிணற்று நீர் குடிப்பதற்கு உகந்தா என்பது தொடர்பில் பரிசோதனை செய்வதற்காக சுகாதார அதிகாரிகளின் ஊடாக கிணறுகளின் நீர் மாதிரிகளை பெற்றுக்கொள்ள நடவடிக்கை 
எடுக்கப்பட்டுள்ளது.
இங்குஅழுத்தவும் நவற்கிரி.கொம் செய்திகள் >>>

சனி, 4 ஜூன், 2016

மத்திய கல்லூரியின் 200 ஆவது ஆண்டு நிறைவினைமுன்னிட்டு ?

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் 200 ஆவது ஆண்டு நிறைவினை முன்னிட்டு கூடைப்பாந்தாட்ட சுற்றுப்போட்டி நடந்தேறியது
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் 200 ஆவது ஆண்டு நிறைவினை முன்னிட்டு வடமாகாணண பாடசாலைகளக்கிடையில் நடாத்தப்பட்ட மாபெரும் கூடைப்பாந்தாட்ட சுற்றுப்போட்டியில் ஆண்கள் பிரிவில் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியும் பெண்கள் பிரிவில் வேம்படி மகளீர் கல்லூரியும் சம்பியனாகியது.

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் 200 ஆவது ஆண்டு நிறைவினை முன்னிட்டு வடமாகாணண பாடசாலைகளக்கிடையில் நடாத்தப்பட்ட மாபெரும் கூடைப்பாந்தாட்ட சுற்றுப்போட்டியின் இறுதியாட்டம் 01.06.2016 புதன்கிழமை 4 மணிக்கு யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி கூடைப்பந்தாட்ட அரங்கில் கல்லூரி அதிபர் எஸ்.கே.எழில்வேந்தன் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக வடமாகாண ஆளுநர் கௌரவ றெஜினோல்ட் குரே சிறப்பு விருந்தினராக யாழ்ப்பாணம் மத்தியகல்லூரியின் பிரான்ஸ் பழைய மாணவர் சங்கத்தலைவர் கே.முத்துக்குமார் கௌரவ விருந்தினராக யாழ்ப்பாணம் மத்தியகல்லூரி பழைய மாணவர் சங்கத்தலைவர் எம் .தமிழ்அழகன் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

கூடைப்பந்தாட்ட சுற்றுப்போட்டியின் இறுதியாட்டத்தில் ஆண்கள் பிரிவில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியும் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியும் மோதியது இப்போட்டியில் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி வெற்றி பெற்று சம்பியனாகியது . மூன்றாமிடத்தினை மானிப்பாய் ஏஞ்சல் சர்வதேசபாடசாலை பெற்றுக்கொண்டது. பெண்கள் பிரிவில் வேம்படிமகளீர் கல்லூரியும் உடுவில் மகளீர் கல்லூரியும் கல்லூரியும் மோதியது. இப்போட்டியில் வேம்படி மகளீர் கல்லூரி வெற்றி பெற்று சம்பியனாகியது. மூன்றாவது இடத்தினை யாழ்ப்பாணம் இந்து மகளீர் கல்லூரி பெற்றுக்கொண்டது வியாழன், 2 ஜூன், 2016

பிறந்த நாள் வாழ்த்து திரு .தேவராசா சுதாகரன் 02.06.16.

யாழ்  இராசாவின் தோட்டத்தைப் பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகவும்கொண்ட திரு :தேவராசா சுதாகரன் (சுதா) அவரின்  பிறந்த நாள் இன்று. 02.06.2016. மிக தனது இல்லத்தில்  சிறப்பாக குடும்ப உறவுகளுடன் கொண்டாடுகின்றனர் .இவரை  அன்பு மனைவி 
மகள் மகன் 
அக்கா அத்தான் மருமகள் பெறாமக்கள்  மாமா மாமி மார் பெரியப்பா ,பெரியம்மா மார் சித்தப்பா சித்தி மார் அண்ணா அண்ணி  தம்பி மார் சகோதரிகள் மச்சான் மச்சாள் மார் உற்றார் உறவினர்கள் 
நண்பர்களும் இவரை
  நல்லைக்கந்தன் இறை அருள் பெற்று மலர்ந்து மணம் வீசுகிற மலரை போல நீ மலர்ந்த நாளடா - இன்று ! இந் நாள் போல எந்நாளும் பூத்துகுலூங்கி மணம் வீசி நீ   பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடுளி வாழ வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து  நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் வாழ்த்துகின்றன,
 வாழ்கவளமுடன் .
இங்குஅழுத்தவும் நவற்கிரி.கொம் செய்திகள் >>>


ஞாயிறு, 29 மே, 2016

நவற்கிரி புத்தூரில் இளைஞன் தூக்கிட்டு தற்கொலை!!!

யாழ் நவற்கிரியில் எல்லாளன் சனசமூகநிலையத்திற்கு அருகாமையில் திரு கோணராஜா பார்த்தீபன் எனும் 31வயது இளைஞன்  தங்களது  வீட்டுக்குள் இன்று 28.02.2016.காலை தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்
இங்குஅழுத்தவும் நவற்கிரி.கொம் செய்திகள் >>

வியாழன், 26 மே, 2016

விளையாட்டு மைதானத்திலுள்ள கிணற்றிலிருந்து சடலம் மீட்பு !

யாழ்ப்பாணம், அராலி மாவத்தை விளையாட்டு மைதானத்திலுள்ள கிணற்றிலிருந்து மாணவனின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதாக வட்டுக்கோட்டை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் நேற்று (24) மாலை இடம்பெற்றுள்ளது.
சடலமாக மீட்கப்பட்டவர் அராலி தெற்கைச் சேர்ந்த 16 வயதுடைய ஜெசிந்தன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
மேலும் இந்த மாணவன் கடந்த 23 ஆம் திகதி காணாமல் போன நிலையில் நேற்று சடலமாக பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளமை
 குறிப்பிடத்தக்கது.
மாணவனின் சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பாக, வட்டுக்கோட்டை பொலிஸாரினால் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுவருகிறது
இங்குஅழுத்தவும் நவற்கிரி.கொம் செய்திகள் >>>