siruppiddy

சனி, 16 ஜூலை, 2016

ஒழுங்கற்ற முறையில் நடந்த படை சிப்பாய்கள் இருவர் கைது!

மனைவியுடன் சண்டையிட்ட கடற்படை சிப்பாய் ஒருவர் ஆனமடுவ பொலிஸாரினாலும், மது அருந்திவிட்டு ஒழுங்கற்ற முறையில் நடந்து கொண்ட இராணுவ சிப்பாய் ஒருவர் கருவலகஸ்வேவ பொலிஸாரினாலும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று இரவு இந்த கைது இடம்பெற்றுள்ளது.
கடற்படை சிப்பாயான தனது கணவர் தன்னுடன் சண்டையிட்டதாக மனைவியினால் ஆனமடுவ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி கைது செய்யப்பட்ட சந்தேகநபரான கடற்படை சிப்பாய் பருத்தித்துறை வடக்கு கடற்படை முகாமில் பணியாற்றும் ஒருவர் என்பதுடன் அவர் கடுமையான எச்சரிக்கையின் பின்னர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இதற்கிடையில் மது அருந்திவிட்டு ஒழுங்கற்ற முறையில் நடந்து கொண்ட இராணுவ சிப்பாய் கருவலகஸ்வெவ பொலிஸரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் அவசர பிரிவிற்கு கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே குறித்த நபரை கைது செய்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரான இராணுவ சிப்பாய் பருத்தித்துறை இராணுவ முகாமில் பணியாற்றும் ஒருவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
குறித்த நபர் புத்தளம் வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியிடம் அனுப்பி சோதனை செய்த போது மது அருந்தி இருந்தது தெரியவந்துள்ளது 
கைது செய்யப்பட்ட இராணுவ சிப்பாயை புத்தளம் மாவட்ட நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளை ஆனமடுவ மற்றும் கருவலகஸ்வேவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். .
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக