புதன், 30 அக்டோபர், 2013
வியாழன், 17 அக்டோபர், 2013
நவக்கிரி நிலாவரையில் முதலாவது பயிர் மருத்துவ முகாம்
வடமாகாணத்தில் முதற் தடவையாகப் பயிர் மருத்துவ முகாம் நவக்கிரி நிலாவரையில்
பயிர்களில் ஏற்படும் நோய்கள் ஏற்படுவதற்கான அறிகுறிகளை விவசாயிகள் இனங்கண்டு அவற்றைக் குணப்படுத்துவதற்கான பரிந்துரைகளைப் பெறுவதற்காகவும் இந்த பயிர் மருத்துவ முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதன்போது பெருமளவான விவசாயிகள் நோய்வாய்ப்பட்ட பயிர்களின் மாதிரிகளோடும், தோட்ட மண் மாதிரிகளோடும் வருகைதந்து நோய்களுக்கான காரணிகளை இனங்கண்டு அவற்றைக் குணப்படுத்துவதற்கான ஆலோசனைகளைப் பெற்றுச் சென்றமை குறிப்பிடத்தக்கது.
இப்பயிர் மருத்துவமுகாம் வடமாகாணத்தின் ஏனைய இடங்களிலும் நடாத்துவதற்கு ஒழுங்குசெய்யப்பட்டுள்ளதென மாகாண விவசாயப் பணிப்பாளர் சி.சிவகுமார் தெரிவித்தார்.
மேலும் இந்நிகழ்ச்சி திட்டத்தில் விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன்,மாகாண விவசாயப் பணிப்பாளர் சி.சிவகுமார்,யாழ் மாவட்ட விவசாயப் பணிப்பாளர் கி.ஸ்ரீபாலசுந்தரம் ஆகியோரும் பூச்சியியல், மண்ணியியல் மற்றும் விவசாயத் துறைகளைச் சேர்ந்த உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டனர்
திங்கள், 7 அக்டோபர், 2013
நிதி திரட்டிய 5 வயது சிறுவன்ஏழைக் குழந்தைகளுக்காக
கனடாவின் ரொறண்ரோவை சேர்ந்த Xavier La Maguer என்ற 5 வயது சிறுவன் ஒருவன் தனது பிறந்தநாளை வித்தியாசமான முறையில் கொண்டாடப் போவதாக தனது தாயாரிடம் தெரிவித்துள்ளான்.
மேலும் இந்த உலகில் சிறுவர்கள் பல்வேறான கஷ்டங்களை அனுபவிப்பதாகவும், இவர்களுக்கு நன்கொடை அளிக்க விரும்புவதாகவும் தெரிவித்துள்ளான்.
இதனையடுத்து சிறுவனின் பிறந்தநாள் கொண்டாட்டங்களுக்கு வரும் விருந்தினர்களை பரிசுப்பொருட்களை கொண்டுவருவதற்கு பதிலாக நன்கொடை வழங்கும்படி தெரிவிக்கப்பட்டது.
நிகழ்வின் ஆரம்பத்தில் 10 நிமிடங்களுக்குள் 2,000 டொலர்கள் சேர்க்கப்பட்டது என தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த தொகை கென்யா நாட்டில் உள்ள அனாதை விடுதியொன்றிற்கு வழங்கப்பட உள்ளது
வியாழன், 3 அக்டோபர், 2013
தீயினால் தென்னங்கன்றுகள் நாசம்! கோப்பாய்ப் பகுதியில்
யாழ் கோப்பாய் மத்தி சிப்பிக்காட்டுப் பகுதியில் அமைந்துள்ள தனியாருக்குச் சொந்தமான காணியில் பயிரிடப்பட்டிருந்த தென்னம் பயிர்கள் தீயினால் முற்றாக அழிந்து போயுள்ளன
.அருகில் அமைந்துள்ள சந்தனச் செடிகளில் தீ வைக்கப்பட்ட போது, கடுமையான வறட்சி மற்றும் காற்று என்பவற்றினால் தீ இத் தென்னம் காணியிலும் பரவி அதனை முற்றாக அழித்துள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்{புகைப்படங்கள் }
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)