siruppiddy

வியாழன், 25 பிப்ரவரி, 2016

யாழ் பகுதிகளில் ஏழு வீடுகளில் கொள்ளையடித்த நால்வர் கைது!!!

கோப்பாய், நீர்வேலி பகுதியில் கடந்த 20ஆம் திகதி அதிகாலை, ஏழு வீடுகளில் இடம்பெற்ற கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் நான்கு சந்தேக நபர்களை இன்று கைது செய்துள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.
கோண்டாவில், திருநெல்வேலி மற்றும் உரும்பிராய் பகுதிகளைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். சனிக்கிழமை (20) அதிகாலை வேளையில், கூரிய ஆயுதங்களுடன் 
வீடுகளுக்குள் நுழைந்த கும்பலொன்று, வீட்டிலிருந்தவர்களை மிரட்டி 50 பவுண் நகை மற்றும் 25 இலட்சம் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்றுள்ளது. இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், குறித்த சந்தேகநபர்களை கைது செய்துள்ளனர்
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>


வியாழன், 18 பிப்ரவரி, 2016

தற்போது இராசவள்ளிக் கிழங்கு விற்பனை ஆரம்பம்!

யாழ்ப்பாணத்திலுள்ள சந்தைகளில் இராசவள்ளிக் கிழங்கு தற்போது விற்பனைக்கு வந்துள்ளது.
ஒரு கிலோகிராம் இராசவள்ளி கிழங்கு 100 ரூபாய் தொடக்கம் 120 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்படுகின்றது. 
இராசவள்ளிக் கிழங்கு பொதுவாக பிந்திய பனிக்காலமாகிய மாசி மாதம் தொடக்கம் ஏப்ரல் மாதம் வரையான காலப்பகுதியில் சந்தைகளில் பெறக்கூடியதாக இருக்கும்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>


செவ்வாய், 16 பிப்ரவரி, 2016

முன்பள்ளி ஆசிரியை மோட்டார் சைக்கிள் விபத்தில் மரணம்

விசுவமடுவிலிருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளும் பரந்தனிலிருந்து விசுவமடு நோக்கி பயணித்த மகேந்திரா பிக்கப் வாகனமும் பரந்தன்-முல்லைத்தீவு வீதியில் நேருக்குநேர் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த சிவில் பாதுகாப்பு திணைக்களத்தைச் சேர்ந்த முன்பள்ளி ஆசிரியை ஒருவர் 
உயிரிழந்துள்ளார்.
மேலும் அவருடன் பின்னால் அமர்ந்திருந்து பயணித்த மற்றுமொரு  முன்பள்ளி ஆசிரியர் ஓரிரு காயங்களுக்குள்ளான நிலையில் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சைக்காக
 அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் நேற்றுப் பிற்பகல் 2.10 மணியளவில் பரந்தன்-முல்லை வீதியில் 18ஆவது - 19ஆவது மைல் கல்லுகளுக்கு இடைப்பட்ட 123ஆம் கட்டை விசுவமடு பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
இதில் கிளிநொச்சி ஆனந்தபுரத்தைச் சேர்ந்தவரும் அம்பாள்குளம் கலைமகள் முன்பள்ளி ஆசிரியையுமான சிவபாலன் கஸ்தூரி (வயது-25) 
என்ற யுவதியே 
உயிரிழந்தவராவார். இவருடன் பயணித்த இல.20 புதுமுறிப்பு இறக்கச்சியைச் சேர்ந்த இராபேல் உசாந்தினி (வயது-37) என்ற மற்றைய முன்பள்ளி ஆசிரியை காயங்களுக்குள்ளான நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதுதொடர்பில் தெரியவருவதாவது,
விசுவமடுவில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பங்கேற்றுவிட்டு கிளிநொச்சி நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த மோட்டார் சைக்கிளும் பரந்தனிலிருந்து விசுவமடு நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த மகேந்திரா பிக்கப் வாகனமும் நேருக்குநேர் மோதியதில் இவ்விபத்துச் சம்பவித்துள்ளது. இதன்போது பிக்கப் வாகன சாரதி வாகனத்துடன் தப்பிச்
 சென்றுள்ளார்.
வீதியில் படுகாயங்களுக்கு இலக்காகி குற்றுயிராய் இருந்த ஆசிரியையையும் காயங்களுக்குள்ளான மற்றைய ஆசிரியையும் வீதியால் பயணித்தவர்கள் மீட்டு கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்த போதும் பிரஸ்தாப ஆசிரியை வழியில் உயிரிழந்துள்ளார்.சம்பவம் அறிந்த புதுக்குடியிருப்பு பொலிஸார் அவ்விடத்துக்கு விரைந்து விசாரணைகளை மேற்கொண்டனர்.
இந்நிலையில் விசுவமடு பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர்கள் விரைந்து செயற்பட்டதில் கல்லூறு பிரதேசத்தில் வைத்து பிக்கப் வாகனத்துடன் சாரதி மடக்கிப் பிடிக்கப்பட்டு புதுக்குடியிருப்பு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார். 
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

சனி, 13 பிப்ரவரி, 2016

அமரர் திரு துரைராஜா இரத்தினம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலி!

மலர்வு .28.12.1952    உதிர்வு .15.01.2016      
அமரர் திரு துரைராஜா இரத்தினம் (ஓய்வு பெற்ற கங்கசந்துரை சீமெந்து தொழில்சாலை)   இவர் யாழ்  நவற்கிரி புத்தூர்ரை பிறப்பிடமா​வும்  சங்கோலை  மாவிட்ட புரத்தை வசிப்பிடமா​கவும்  k .k .s வீதி இனுவில் மேற்கை தற்காலிகவதிவிடமாக கொண்ட அமரர் திரு துரைராஜா இரத்தினம் அவர்களின் 31 நாள் நினைவஞ்சலி
உங்கள் ஆத்மாசாந்தியடைய ஆண்டவனை வேண்டுகிறோம்
உங்கள்  பிரிவால் வாடும்
மனைவி , பிள்ளைகள்,சகோதர்கள் ,மருமக்கள் 
பேரப்பிள்ளைகள், உற்றார், உறவினர்
நண்பர்கள்-
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

செவ்வாய், 2 பிப்ரவரி, 2016

பிறந்தநாள் வாழ்த்து திரு திருமதி சுதாகரன் 01.02.16.

யாழ். மறுவன் புலத்தை  பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகக்கொண்ட திரு திருமதி சுதாகரன் (ஜசோதா) இன்று.  01.02.2016 சூரிச்மாநிலத்தில் பிறந்த  நாளை தனது இல்லத்தில் சிறப்பாக கொண்டாடுகின்றனர் .இவர்ரை  அன்பு கணவன் மகள் மகன் சகோதரர்கள்   மருமகள் மாமா மாமி மார் பெரியப்பா ,பெரியம்மாமார் சித்தப்பா சித்தி மார் அண்ணா தம்பி மார்  மச்சான் மச்சாள் மார் உற்றார் உறவினர்கள் நண்பர்களும் இவர்ரை   மறுவன் புலஅம்பாள் இறைஅருள் பெற்று சகல செல்வங்களும் பெற்று சீரும் சிறப்புடன் பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடுளி வாழ வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து
              நவக்கிரி http://lovithan.blogspot.ch  நவக்கிரி.கொம்
   நவற்கிரி .கொம் நிலாவரை.கொம் 
          இணையங்களும்  
            வாழ்த்துகின்றனர். 
                   வாழ்கவளமுடன் ..
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>