siruppiddy

புதன், 28 செப்டம்பர், 2016

கேரளா கஞ்சா மருதங்கேணி கடற்கரையில் மீட்பு!


இந்தியாவில் இருந்து கொண்டு வரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 82 கிலோகிராம் கேரளா கஞ்சாவை மருதங்கேணி கடற்கரையில் வைத்து பளை பொலிஸார் இன்று மீட்டுள்ளனர்.எனினும் குறித்த சம்பவத்தின்போது சந்தேகநபர்கள் தப்பிச்சென்றுள்ளதாக பளைப் பொலிஸ் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.குறித்த சம்பவம் தொடர்பாக தெரிய 
வருவதாவது,
இந்தியாவில் இருந்து கடல் வழியாக கேரள கஞ்சா ஒரு தொகுதி மருதங்கேணி கடற்பரப்பினூடாக கொண்டு வருவதாக பொலிஸாருக்கு இரகசியத் தகவல் கிடைத்துள்ளது.
இதைத் தொடர்ந்து கிளிநொச்சி உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் பளைப் பொலிஸ் பரிசோதகர் அடங்கிய குழுவினர் 
குறித்த பகுதிக்குச் சென்று மருதங்கேணி கடற்கரையில் இருந்த 82 கிலோகிராம் கேரளா கஞ்சாவினை மீட்டுள்ளனர்.இருப்பினும் சந்தேக நபர்கள் எவரும் பொலிஸாரால் கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பளை பொலிஸார் மேற்கொண்டு 
வருகின்றனர்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

திங்கள், 26 செப்டம்பர், 2016

சிறுவர்கள் வாகன விபத்தில் பரிதாபகரமாக பலி !

திருகோணமலை மாவட்டத்தின் சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தோப்பூர் செல்வநகர் பகுதியில் டிப்பர் வாகனமும் மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளானதில் இரண்டு சிறுவர்கள் பரிதாபகரமாக முறையில் உயிரிழந்துள்ளனர்.
குறித்த விபத்து சம்பவம் இன்று (25) பகல் 11.00 மணியளவில் இடம் பெற்றுள்ளது.
சம்பவ இடத்திலேயே இரண்டு சிறுவர்களும் உயிர் இழந்துள்ளதாக சேருநுவர பொலிஸார் கூறியுள்ளார்.
மேலும், இந்த விபத்து தொடர்பாக தெரியவருவதாவது
ஒரு மோட்டார் சைக்கிளில் மூன்று சிறுவர்கள் பயணித்ததில் இருவர் உயிர் இழந்துள்ளதுடன் ஒருவர் தப்பித்துள்ளதோடு தப்பித்த சிறுவனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இதேவேளை, சம்பவத்தின் போது உயிர் இழந்தவவர்கள் பீ.சியாம் (15) ,ஏ.நிப்றாஸ் (15) என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், உயிர் இழந்த இரு சிறுவர்களினதும் சடலம் மூதூர் பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் சேருநுவர பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற் கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>அமரர் இரத்தினம் பாலகிருஷ்ணன்.1ம் ஆண்டு நினைவஞ்சலி

பிறப்பு : 7 யூலை 1960 — இறப்பு : 24 செப்ரெம்பர் 2015
யாழ். அச்சுவேலி பத்தமேனியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் சூரிசை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த இரத்தினம் பாலகிருஷ்ணன். (செல்வம்) அவர்களின் முதலாம்ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் அன்பு அப்பாவே 
இதயத் துடிப்பின் அருமருந்தே 
காலம் செய்த கோலத்தினால் 
ஓவ்வொரு கணப் பொழுதும் 
துடிக்கின்றோம்!
ஆண்டொன்று ஆனாலும் மனம் 
ஆற மறுக்கிறது- அப்பா 
புன்னகை புரியும் உங்கள் 
முகம் தெரிகிறது 
தினம் தினம்!
உங்கள் ஒழுக்கம் நற்பண்பு 
மதிப்புகள் யாவும் எங்கள் வாழ்வில் 
என்றென்றும் வழிகாட்டியாக இருக்கும்! 
மாதங்கள் பன்னிரெண்டு ஆனாலும் 
அழியாது எம் துயரம் 
மறையாத உங்கள் நினைவு!
மீண்டும் ஒரு பிறவி உண்டென்றால் 
உங்களுக்கு பிள்ளைகளாக பிறக்கும் 
பேறு பெற வேண்டும்- அப்பா!
அன்னாரின் ஆத்மசாந்திப் பிரார்த்தனை 12-10-2016 புதன்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று, பின்னர் அதனைத் தொடர்ந்து நடைபெறும் மதியபோசன நிகழ்விலும் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்
.நவற்கிரி உறவுகளின் கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கு  எமது 
ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிகின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
மனைவி — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41433002432
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

வெள்ளி, 23 செப்டம்பர், 2016

தெல்லிப்பளை மகாஜனாக் கல்லுாரியின் மாணவி தற்கொலை

யாழ்ப்பாணம் - காங்கேசன்துறை – நகுலேஸ்வரம் பிரதேசத்தில் பாடசாலை மாணவியொருவர் தனது வீட்டில் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்
இவ்வாறு உயிரிழந்துள்ளவர் யாழ்ப்பாணம் - தெல்லிப்பளை மஹாஜன கல்லூரியில் 11 ஆம் வகுப்பில் கல்வி கற்று வந்த மாணவி என தெரியவந்துள்ளது.
அவர் தற்கொலை செய்து கொள்ளும் போது வீட்டில் அவரது பெற்றோர் இல்லை என காவற்துறை தெரிவித்துள்ளது.
மன உளைச்சல் காரணமாக குறித்த மாணவி இவ்வாறு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என காவற்துறை சந்தேகிக்கிறது.
எனினும் அவர் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்னர் எழுதி வைத்த கடிதம் ஒன்றை காவற்துறை 
கைப்பற்றியுள்ளது
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


புதன், 21 செப்டம்பர், 2016

இலங்கைத் தமிழர் அமெரிக்க இராணுவத்தின் மூத்த ஆராய்ச்சி விஞ்ஞானி !

அமெரிக்க இராணுவத்தின் மூத்த ஆராய்ச்சி விஞ்ஞானியாகப் பணியாற்றும், கலாநிதி பரஞ்சோதி ஜெயக்குமார் என்ற இலங்கைத் தமிழர், பொறியியல்துறையில் மதிப்புமிக்க உலகளாவிய விருதுக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளார். அமெரிக்க இராணுவத்தின் டாங்கிகள் வடிவமைப்பு ஆராய்ச்சி, அபிவிருத்தி மற்றும் பொறியியல் நிலையத்தில், மூத்த விஞ்ஞானியாகப் பணியாற்றி வருகிறார் 
கலாநிதி பரஞ்சோதி ஜெயக்குமார்.
இவர் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பொறியியல் பீடத்தில் பட்டம் பெற்றதுடன், 1982-83 காலப்பகுதியில், பேராதனைப் பல்கலைக்கழக கணிதபீடத்தில் உதவி விரிவுரையாளராகவும் பணியாற்றியுள்ளார். இவருக்கு SAE International என்ற மதிப்புமிக்க அனைத்துலக பொறியியலாளர் அமைப்பினால் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வரும், ஆர்ச் ரி கொல்வெல் ஒத்துழைப்பு பொறியியல் பதக்கம் (Arch T. Colwell Cooperative Engineering Medal) வழங்கப்படவுள்ளது.
அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள இந்த அமைப்பின் நிகழ்வில் இந்த விருது வழங்கப்படும். இந்த உலகளாவிய விருதை வழங்கும், SAE International அமைப்பு உலகெங்கும் உள்ள 138 ஆயிரம் பொறியியல் வல்லுனர்களை உறுப்பினராக கொண்டது என்பது 
குறிப்பிடத்தக்கது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

செவ்வாய், 13 செப்டம்பர், 2016

மரண அறிவித்தல் திரு மகிந்தன் பன்னீர்ச்செல்வம்(முகுந்தன்)

தோற்றம் : 20 யூன் 1972 — மறைவு : 10 செப்ரெம்பர் 2016
யாழ். ஓட்டுமடத்தைப் பிறப்பிடமாகவும், சுவீடன் Helsingborg ஐ வசிப்பிடமாகவும் கொண்ட மகிந்தன் பன்னீர்ச்செல்வம்.(முகுந்தன் முன்னாள் விளையாட்டு மூத்த உறுப்பினர் - Helsingborg)அவர்கள் 10-09-2016 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பன்னீர்ச்செல்வம், புஸ்பலீலா(இந்தியா) தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற அழகசுந்தரம், சாந்தகுமாரி(சுவீடன்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சர்மிளா அவர்களின் அன்புக் கணவரும்,
அபிஷன், டெனிலா, ஜெனிஷா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சுகந்தி டினேஷ்(இந்தியா), பாபு(ஜெர்மனி), தீபன்(ஜெர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஸ்ரீகாந்த(டென்மார்க்), ஜெயந்தி கமல்(சுவீடன்), ஜனார்த்தன்(சுவீடன்), கவிதா சதீஷ்(சுவீடன்), சங்கீதா மகிந்தன்(சுவீடன்), ஜீனத்காந்(சுவீடன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்
நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிகின்றன ...

தகவல்
இளந்தளிர் விளையாட்டு கழகம்- Helsingborg
நிகழ்வுகள்
தகனம்
திகதி: புதன்கிழமை 14/09/2016, 09:30 மு.ப — 01:30 பி.ப
முகவரி: Pålsjö Kapell, Kullavägen 94, 254 54 Helsingborg, Sweden. 
தொடர்புகளுக்கு
சதிஷ் — சுவீடன்
தொலைபேசி: +46702699435
ஸ்ரீகாந் — டென்மார்க்
செல்லிடப்பேசி: +4531147728
பாபு தீபன் — ஜெர்மனி
செல்லிடப்பேசி: +4923336198614
தினேஷ் — இந்தியா
செல்லிடப்பேசி: +919092555333
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

வெள்ளி, 9 செப்டம்பர், 2016

மரண அறிவித்தல் திரு கந்தையா தம்பிஐயா.06.'09.16.

பிறப்பு : 3 யூன் 1924 — இறப்பு : 6 செப்ரெம்பர் 2016
யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா தம்பிஐயா அவர்கள் 06-09-2016 செவ்வாய்க்கிழமை அன்று Toronto வில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தையா, அன்னப்பிள்ளை தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும், காலஞ்சென்ற பொன்னையா, பொன்னு தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கமலாம்பிகை அவர்களின் அன்புக் கணவரும்,

ஜெகதீஷ்வரன், ஜெகதீஷ்வரி, மலர்சோதி, தயாபரன், அருளானந்தம், ரூபன், சிறி, ஜாமினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான சின்னம்மா, தங்கமணி, சுப்பிரமணியம், மற்றும் புனிதரட்னம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பரமேஷ்வரி, காலஞ்சென்ற சசிகுமரன், விஜயரட்னம், சியாமளா, பாமினி, சிவமதி, பாமினி, உருத்திரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான சுப்பையா, சிவசுப்பிரமணியம், மாலினி, மற்றும் சந்திரா, காலஞ்சென்றவர்களான சங்கரப்பிள்ளை, சிவசம்பு ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஜெகதீப், பிரியா விபி, தரூபன் ரதி, தயன் கார்லா, கிரூபன் தர்ஷினி, கர்ஷன் கஜந்தி, கிரிஷா ஜெராட், விபி கோனி, சிரோன், துஷான், ஷிரோமி, அனோஷ், தினா, அபினா, சௌமி, கவீஷ், கியாரா ஆகியோரின் அன்புப் பேரனும்,

ஜெயன், ஐவியா, ஜெனனி, ஜெனீஷா, காபிரியல், சோபியா, செபாஷ்ரியன், அகீறா, அனிஷா, ரேயா, அலிசா, எமா, றதானியல் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிகின்றோம்

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: புதன்கிழமை 07/09/2016, 04:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada 
பார்வைக்கு
திகதி: வியாழக்கிழமை 08/09/2016, 08:00 மு.ப — 09:30 மு.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada 
கிரியை
திகதி: வியாழக்கிழமை 08/09/2016, 09:30 மு.ப — 11:30 மு.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada 
தகனம்
திகதி: வியாழக்கிழமை 08/09/2016, 12:00 பி.ப — 12:30 பி.ப
முகவரி: Highland Hills Funeral Home, 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada 
தொடர்புகளுக்கு
விஜயரட்னம் — கனடா
தொலைபேசி: +14168505513
செல்லிடப்பேசி: +16472744670
அருள் — கனடா
செல்லிடப்பேசி: +16475018449
ரூபன் — கனடா
தொலைபேசி: +15149450660
சிறி — கனடா
தொலைபேசி: +15149451072
ஜெகதீஸ் — கனடா
செல்லிடப்பேசி: +16474070675

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>