siruppiddy

ஞாயிறு, 7 செப்டம்பர், 2014

சிவதர்ஷன் சடலம் தொடர்பாக விசாரணை!

¨
 மேல் கொத்மலை நீர் தேக்கத்திலிருந்து மாணவன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டமை தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
லிந்துலை – மட்டுக்கலை தோட்டத்தில் மூன்று நாட்களுக்கு முன்னர் காணாமல் போனதாக கூறப்படும் மாணவன் ஒருவரின் சடலமே இன்று காலை 7.30 அளவில் பிரதேச மக்களால் கண்டுபிடிக்கப்பட்டிருந்தது.
தலவாக்கலை புனித பத்திரிசியார் கல்லூரியில் தரம் 11 இல் கல்வி பயிலும் யோகநாதன் சிவதர்ஷன் என்ற மாணவன் ஒருவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக   செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
இந்த மாணவன் காணாமற் போனமை தொடர்பில் லிந்துலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டது.
சடலம் நீதவான் விசாரணைகளின் பின்னர் பிரேத பரிசோதனைகளுக்காக நுவரெலியா ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இதேவேளை குறித்த பகுதியில் தொடர்ந்து இடம்பெறும் மர்ம மரணங்களை கண்டித்து இன்று ஆர்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஹட்டன் – நுவரெலியா வீதியை மறித்து தலவாக்கலை நகர சபைக்கு முன்பாக இந்த ஆர்பாட்டம் இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர் கூறினார்.
சம்பவம் தொடர்பில் தலவாக்கலை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

இங்குஅழுத்தவும் மற்றைய செய்திகள்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக