இறக்குவானை நகரில் அண்மையில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டமொன்றில் கலந்துகொண்ட 54 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இறக்குவானை டெல்வின் பகுதியைச் சேர்ந்த 15 வயதான சிறுமி ஒருவர் கடந்த ஜுலை மாதம் 20 ஆம் திகதி துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டிருந்தார்.
இந்த சம்பவத்தை கண்டித்து ஜூலை 21 ஆம் திகதி இறக்குவாணை நகரில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டிருந்தது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டிருந்த 54 பேரை மூன்று கட்டங்களாக நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஆர்ப்பாட்டத்தின்போது டயர்கள் எரிக்கப்பட்டமை உள்ளிட்ட விடயங்களுக்காக இவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இவர்களுக்கு எதிரான வழக்கு விசாரணை இறக்குவானை சுற்றுலா நீதிமன்றத்தில் எதிர்வரும் 24 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது
0 கருத்துகள்:
கருத்துரையிடுக