மீண்டும் நல்ல படைப்பாளிகளுடன் தன்னை வளப்படுத்தி நிற்கும் ஐபிசி-தமிழ் வானொலி தற்பொழுது தனது நேயர்களிடம் நிறைவான வரவேற்பைப் பெற்று வருகிறது,
உலகத் தமிழ் மக்களுக்கான வானொலியாக தன்னை நிலை நிறுத்திவருகிறது,
வரலாற்றுத்தடங்கள் பலவற்றைத் தன்னகத்தே கொண்ட ஐபிசி-தமிழ்.தனது பாதையில் பயணித்து வருகிறது,
தமிழ் கூறும் நல்லுலகத்துக்கு நன்கு அறிமுகமான மூத்த ஒலிபரப்பாளர் விமல் சொக்கநாதன் அவர்கள் வழங்கும் ‘களம்பல காண்போம்’ அரசியல் விமர்சன நிகழ்ச்சி. சுமார் 10 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் ஐபிசி-தமிழ் வானொலியில் ஆரம்பமாகிறது. ஆனாலும் இதன் சிறப்பு யாவரும் அறிந்ததே. இதில் பணிபுரியும் ஒவ்வொரு கலைஞரும் ஒலிபரப்புத் துறையில் சிறந்து விளங்கும் கலைஞர்கள். இவர்கள் நல்ல சிந்தனையாளர்கள். நம் தாய் மண்மேல் அளவற்ற நேசம்கொண்டு பணிபுரியும் இவர்கள் இணைந்திருக்க தமிழுக்கு என்ன தடையுண்டு.
அதுவும் விமல் சொக்கநாதன் அவர்கள் பல ஆண்டு பண்புடன் ஒலிபரப்பில் தன்னை இணைத்த ஒலிபரப்பாளர். இவர் நிகழ்வு சிறப்பை மட்டுமல்ல நல்ல கருத்தைத்தரும் காந்தக்குரலில் அவர் பேசும் வார்த்தை நல்ல மதிப்பைத்தரும்
அதனால் இவர் நிகழ்வுகள் சிறக்க எஸ்-ரி-எஸ் இணையமும் வாழ்த்தி நிற்கிறது
0 கருத்துகள்:
கருத்துரையிடுக