ஆடைத் தொழிற்சாலைக்கு வேலைக்கு சென்று திரும்பிய 18 வயது பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டுள்ளார்.
மஹியங்கணையிலுள்ள ஆடைத்தொழிற்சாலையில் பணிபுரியும் வேவத்தை, கந்தல்கும்புரவைச் சேர்ந்த ரம்யா விதர்ஷிணி எனும் 18 வயதான பெண்ணே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
இவர், கடந்த 3 மாதங்களாக ஆடைத்தொழிற்சாலை ஒன்றில் பணி புரிந்து வந்துள்ளதோடு, இதற்காக ரிதிமாலியத்த, அலுகெட்டியாவ பிரதேசத்திலுள்ள தனது தாயின் சகோதரரின் வீட்டில் தங்கியிருந்துள்ளார்.
நேற்று முன்தினம் (01) பிற்பகல், வேலை முடிந்து திரும்ப வேண்டிய விதர்ஷிணி வீட்டுக்கு வராததால், அவரது மாமா உள்ளிட்ட அவரது உறவினர்கள் மற்றும் கிராமவாசிகள் இணைந்து அவரை தேடியுள்ளனர்.
இதன்போது, விதர்ஷிணியின் மாமாவின் வீட்டுக்கு அருகிலுள்ள காட்டுப் பகுதியில், அவரது கையடக்க தொலைபேசி மற்றும் அவரது குடை என்பன வீசப்பட்ட நிலையில் காணப்பட்டுள்ளன.
அதனை அடுத்து, இது குறித்து மஹியங்கணை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதோடு, பொலிஸார் மற்றும் கிராமவாசிகள் இணைந்து மேற்கொண்ட தேடுதலின் பின்னர், குறித்த
பகுதியிலுள்ள
தேக்கு மரச்செய்கை காட்டினுள் அவரது உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குறித்த பெண் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த மஹியங்கணை பொலிஸார், இது குறித்து இதுவரை எவரும் கைதுசெய்யப்படவில்லை எனவும், இச்சம்பவம் குறித்தான விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாகவும்
தெரிவித்தனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக