siruppiddy

புதன், 9 டிசம்பர், 2015

பூட்டி வைக்கப்பட்டிருந்த பெண்னை இளைஞர்கள் மீட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் திருநெல்வேலிப் பகுதியில் உள்ள தனியார் வியாபார நிலையம் ஒன்றிற்குள் பூட்டி வைக்கப்பட்டிருந்த பெண்ணை அப்பகுதி இளைஞர்கள் மீட்டுள்ளனர்.
குறித்த வியாபார நிலையத்தை முற்றுகையிட்ட இளைஞர்கள் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்ட பெண்ணை காப்பாற்றியதுடன் பொலிஸாருக்கும் தகவல் கொடுத்துள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
திருநெல்வேலி சந்திப் பகுதியில் உள்ள கண்ணன் ஸ்ரோர்ஸ் என்னும் வியாபார நிலையத்தில் பெண்ணெருவர் நீண்ட காலமாக 
பணியாற்றி வந்துள்ளார்.
இந்நிலையில் இன்றைய தினம் நடைபெற்ற வியாபார நடவடிக்கையில் கிடைக்கப்பெற்ற பணத்தில் 3 இலட்சம் ரூபா தவறவிடப்பட்டுள்ளது என்று கூறி அப்பெண்ணை அச்சுறுத்திய வியாபார நிலைய உரிமையாளர் அப்பெண்ணை வியாபார நிலையத்தில் வைத்துப்
 பூட்டியுள்ளார்.
இரவாகியும் மகள் வீட்டிற்கு வராத காரணத்தினால் அப் பெண்ணின் தாயார் அவர் பணியாற்றும் வியாபார நிலையத்திற்கு சென்றுள்ளார். அங்கு சென்ற தாயார் தனது மகள் எங்கே என்று வியாபார நிலைய உரிமையாளரை கேட்ட போது, 'இன்றைய நாள் கணக்கினை பார்த்துக் கொண்டு 
இருக்கின்றார் 
சிறிது நேரத்தில் வந்துவிடுவார்' என்று கூறியுள்ளார்.உரிமையாளரின் பதிலை கேட்டு நீண்ட நேரமாக தாயார் அங்கேயே நின்று கொண்டிருந்துள்ளார். இருப்பினும் மகள் வெளியில் 
வரவே இல்லை.
திடீரென வியாபார நிலையத்திற்கள் பூட்டி வைக்கப்பட்டிருந்த அப் பெண் அவலக் குரல் எழுப்பியுள்ளார். தனது மகளுக்கு ஏதோ ஆபத்து நேர்ந்து விட்டது என்று அறிந்து கொண்ட தாயார் தானும் அங்கே நின்று அவலக் கூரல் எழுப்பியுள்ளார்.அவர்களது அவலக் குரல் கேட்டு அப்பகுதியில் நின்ற இளைஞர்கள் அங்கு வந்துள்ளனர். வீதியால் சென்றவர்களும் அங்கு வந்து ஒன்று கூடியுள்ளனர்.
வியாபார நிலையத்திற்குள் இருந்து தொடர்ந்து பெண்ணின் அவலக் குரல் வருவதை அவதானித்த பொது மக்கள் கடையினை முற்றுகையிட்டு உள்ளே சென்று பெண்ணை மீட்டுள்ளனர்.இச் சம்பவம் தொடர்பாக உடனடியாக கோப்பாய்ப் பொலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ 
இடத்திற்கு
 வந்த பொலிஸார் வியாபார நிலைய உரிமையாளருடன்  பேசிய பின்னர் அப் பெண்ணையும் பெண்ணின் தாயாரையும் வீட்டிற்கு 
அனுப்பிவைத்துள்ளனர்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக