siruppiddy

புதன், 15 ஜூன், 2016

யாழில் வங்கி ஒன்றில் நடந்த உண்மைச் சம்பவம் இது


யாழ். நகரில் பிரபல பெண்கள் கல்லூரி ஒன்றில் கற்பிக்கின்ற ஆசிரியை ஒருவர் அந்தக் கிளையில் கணக்கினைப் பேணி வந்துள்ளார். அவரது மாதந்த சம்பளமும் அந்தக் கணக்குக்கே வருவது
 வழமை.
அடிக்கடி பணத்தைப் பெறும் வழமை அவருக்கு இல்லாத போதிலும் மாதந்தோறும் மீதியைச் சரிபார்க்கத் தவறுவதில்லை.
வழக்கம் போலவே மீதியைச் சரிபார்க்கச் சென்ற ஆசிரியைக்கு அதிர்ச்சி.
“தோல் இருக்கச் சுளை விழுங்கப்பட்டது” போல வங்கிப் புத்தகமும் தன்னியக்கப் பணப்பரிமாற்ற அட்டையும் ( ஏ.ரி.எம்) ஆசிரியரிடம் இருக்க, அவரது கணக்கிலிருந்து சுமார் ஐம்பதாயிரத்துக்கு மேற்பட்ட தொகை உருவப்பட்டிருக்கிறது.
உடனடியாக விழித்துக் கொண்ட ஆசிரியை முகாமையாளரிடம் முறையிட, கணக்கின் வைப்பு – மீளப்பெறல் சரிதம் ஆராயப்பட்டது. முதற்கட்ட விசாரணைகளின் முடிவில் ஆசிரியையின் கணக்கிலிருந்து ஏ.ரி.எம் அட்டை மூலமாக பெறப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
முகாமையாளருக்கு வாய்த்துவிட்டது. ஆசிரியை மீது பாய்ந்தே விட்டார். உங்கள் அட்டையால் தான் பணம் பெறப்பட்டுள்ளது என்று சாதித்தார். இதற்கு மேல் இதில் செய்வதற்கு ஏதுமில்லை என்று ஆசிரியையை 
விரட்டினார்.
சாதாரணமான ஒருவராக இருந்திருந்தால் அப்படியே முடிந்திருக்கும் கதை.
ஆசிரியையும் விடுவதாக இல்லை. தன்னுடைய ஏ.ரி.எம் அட்டை தன்னைத் தவிர யாரும் பாவிப்பதில்ல என்று அடித்துச் சொல்லி விட்டார்
முகாமையாளர் மிரட்டியும் வாடிக்கையாளர் பணிவதாய் 
இல்லை. தொலைபேசி இலக்கத்தை வாங்கிக் கொண்டு ஏதாவது அறிந்தால் அழைக்கிறோம் வாருங்கள் என்று ஆசிரியையை 
அனுப்பி விட்டார்.
இரண்டு நாள்களின் பின்னர் ஆசிரியைக்கு வங்கிக் கிளையில் இருந்து அழைப்பு வந்தது. “உங்கள் பணத்தைத் திருடியவனைப் பிடித்து விட்டோம்” என்று ஆசிரியைக்கு மகிழ்ச்சி.. கிளைக்கு விரைந்தவருக்கு
 அதிர்ச்சி.
அங்கு ஆசிரியைக்கு முகாமையாளர் ஒரு வகையில் மிரட்டல் விடுக்கிறார். நீங்கள் இதனை இப்படியே விட்டுவிடுவது நல்லது என்று.
ஆசிரியை விடவில்லை. பிராந்திய முகாமையாளருக்குத் தெரியப்படுத்தியபின் ஏ.ரி.எம். அட்டையின் மூலம் ஆசிரியையின் கணக்கிலிருந்து களவாடப்பட்ட தொகை வைப்பிலிடப்பட்டிருப்பதாக முகாமையாளரிடமிருந்து தொலைபேசி மூலம் அறிவிக்கப்பட்டிருப்பதுடன். இதனை இதற்கு மேல் நீடிக்க வேண்டாம் என்று கடுமையான 
உத்தரவு வேறு.
இதில் பல சந்தேகங்கள் உள்ளன. ஏ.ரி.எம் அட்டை கையிலிருக்கும் போது ஏ.ரி.எம் மூலம் பணம் பெறப்பட்டது?
விசாரணைகளில் வெளிவந்த தகவலின் படி ஏ.ரி.எம் மூலமாக பணம் பெறப்பட்ட அட்டையின் இலக்கம் ஆசிரியையின் உடையதாக இருக்கவில்லை. அதாவது ஆசிரியையின் கணக்குக்கு வேறு ஒரு அட்டையுடன் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.அந்த அட்டையை வைத்திருந்தவர் தெரிந்தோ தெரியாமலோ தனது கணக்கில் இருந்து பணத்தை மீளப் பெற்றிருக்கிறார்.
இது விடயத்தில் ஆசிரியையின் பக்கத்தில் என்ன தவறு இருக்கிறது?
வங்கி அலுவலர்கள் ஏன் இதை தெரியாதது போலவே வேண்டுமென்றே செய்திருக்கக் கூடாது.
அதிகாரிகளின் தவறு அப்பாவிகளை பாதித்ததுமல்லாமல் அதனை நியாயப்படுத்தும் வகையில் முகாமையாளர் வாடிக்கையாளரை மிரட்டியது சரியா?
இந்த ஆசிரியை கொஞ்சம் உசாரான ஒருவராக இருந்ததனால் பணம் மீளக் கிடைத்தது. இதுவே சாதாரண ஒருவராக இருந்தால்?
மீதியை பரிசோதிக்காமல் இருக்கும் ஒருவராக இருந்தால்?
நண்பர்ளே!
மிகுந்த அவதானமாயிருங்கள் உங்கள் வங்கிக்கணக்கின் வைப்பு – மீளப்பெறல் விடயங்களை அடிக்கடி 
உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
இங்குஅழுத்தவும் நவற்கிரி.கொம் செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக