siruppiddy

சனி, 4 ஜூன், 2016

மத்திய கல்லூரியின் 200 ஆவது ஆண்டு நிறைவினைமுன்னிட்டு ?

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் 200 ஆவது ஆண்டு நிறைவினை முன்னிட்டு கூடைப்பாந்தாட்ட சுற்றுப்போட்டி நடந்தேறியது
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் 200 ஆவது ஆண்டு நிறைவினை முன்னிட்டு வடமாகாணண பாடசாலைகளக்கிடையில் நடாத்தப்பட்ட மாபெரும் கூடைப்பாந்தாட்ட சுற்றுப்போட்டியில் ஆண்கள் பிரிவில் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியும் பெண்கள் பிரிவில் வேம்படி மகளீர் கல்லூரியும் சம்பியனாகியது.

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் 200 ஆவது ஆண்டு நிறைவினை முன்னிட்டு வடமாகாணண பாடசாலைகளக்கிடையில் நடாத்தப்பட்ட மாபெரும் கூடைப்பாந்தாட்ட சுற்றுப்போட்டியின் இறுதியாட்டம் 01.06.2016 புதன்கிழமை 4 மணிக்கு யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி கூடைப்பந்தாட்ட அரங்கில் கல்லூரி அதிபர் எஸ்.கே.எழில்வேந்தன் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக வடமாகாண ஆளுநர் கௌரவ றெஜினோல்ட் குரே சிறப்பு விருந்தினராக யாழ்ப்பாணம் மத்தியகல்லூரியின் பிரான்ஸ் பழைய மாணவர் சங்கத்தலைவர் கே.முத்துக்குமார் கௌரவ விருந்தினராக யாழ்ப்பாணம் மத்தியகல்லூரி பழைய மாணவர் சங்கத்தலைவர் எம் .தமிழ்அழகன் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

கூடைப்பந்தாட்ட சுற்றுப்போட்டியின் இறுதியாட்டத்தில் ஆண்கள் பிரிவில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியும் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியும் மோதியது இப்போட்டியில் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி வெற்றி பெற்று சம்பியனாகியது . மூன்றாமிடத்தினை மானிப்பாய் ஏஞ்சல் சர்வதேசபாடசாலை பெற்றுக்கொண்டது. பெண்கள் பிரிவில் வேம்படிமகளீர் கல்லூரியும் உடுவில் மகளீர் கல்லூரியும் கல்லூரியும் மோதியது. இப்போட்டியில் வேம்படி மகளீர் கல்லூரி வெற்றி பெற்று சம்பியனாகியது. மூன்றாவது இடத்தினை யாழ்ப்பாணம் இந்து மகளீர் கல்லூரி பெற்றுக்கொண்டது 



0 கருத்துகள்:

கருத்துரையிடுக