அனுமதி சீட்டைப் பெறாமல் அனுராதபுரம் அபயகிரி அருங்காட்சியகத்திற்குள் சென்று பாதுகாப்பு அதிகாரியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஜேர்மனிய பெண்ணொருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
29 வயதான இந்த பெண் பாதுகாப்பு அதிகாரியுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளதுடன், பாதுகாப்பு அதிகாரி குறித்த பெண்ணை
தாக்கியுள்ளார்.
இத்தாக்குதல் குற்றச்சாட்டை அடுத்து அனுராதபுரம் பொலிஸார் இரண்டு பேரையும் கைது செய்துள்ளனர்.
இரண்டு பேரையும் பொலிஸ் பிணையில் விடுதலை செய்துள்ளதாகவும் அவர்களை எதிர்வரும் 18 ஆம் திகதி அனுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிட்டுள்ளதாகவும் பொலிஸார்
தெரிவித்துள்ளனர்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>
0 கருத்துகள்:
கருத்துரையிடுக