பாடசாலைக்குச் செல்லும் 15 வயதுச் மாணவியை காதலிப்பதாகக்கூறி துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்ட புன்னாலைக்கட்டுவன், ஈவினைப் பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞனை, எதிர்வரும் 18ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் மாவட்ட நீதிமன்ற பதில் நீதவான் என்.தம்பிமுத்து, நேற்று வியாழக்கிழமை (07) உத்தரவிட்டார்.
2 வருடங்களாக சிறுமியைக் காதலித்த வந்த இளைஞன், அச்சிறுமியைக் கர்ப்பமாக்கியுள்ளார்.
திருமணம் செய்ய மறுத்தததையடுத்து சிறுமியின் உறவினர்கள் பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் இளைஞன் கைதுசெய்யப்பட்டார்.
நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தியபோது, சிறுமியின் மருத்துவ அறிக்கையை மன்றில் சமர்ப்பிக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்ட பதில் நீதவான், இளைஞனை விளக்கமறியலில் வைக்க
உத்தரவிட்டார்.
இங்குஅழுத்தவும் நவற்கிரி.கொம் செய்திகள் >>>
0 கருத்துகள்:
கருத்துரையிடுக